நிலா எடுத்த அதிரடி முடிவால் கதிகலங்கிய அய்யனார் குடும்பம், சோழன் நிலை என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நாளை கோர்ட்டில் நம்ம விவாகரத்துக்கே முடிந்துவிடும். நீங்களும் இருவரும் வேண்டாம் என்று சொல்லப் போகிறோம் என்றார். நிலா, ஒருவேளை நான் விவாகரத்து வேண்டும் என்று சொன்னால் என்ன செய்வீர்கள் என்றார். சோழன், நான் சந்தோஷமாக இருந்தால் பிடிக்காதா? ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சோழனிடம் பாண்டியன் விசாரித்தார். சோழன், எனக்கு கோர்ட்டில் என்ன நடக்குமோ? பயமாக இருக்கிறது. நிலா விவாகரத்து வேண்டாம்ன்னு சொல்லணும் என்று புலம்பி கொண்டிருந்தார்.
பின் பாண்டியன், வானதியின் வீட்டிற்கு சென்றார். ஆனால், வானதி வீட்டுக்குள் போகாமல் வெளியேவே நின்று கொண்டிருந்தார். வானதி, ஏதாவது சொல்லுவாள் என்று அங்கிருந்து பாண்டியன் கிளம்பி வந்து விட்டார். மறுநாள் காலையில் கோர்ட்டுக்கு செல்வதற்காக சோழன்- நிலா இருவரும் தயார் ஆகிறார்கள். அப்போது நிலாவை சந்தித்து சேரன் பேசி இருந்தார். நிலா, பயப்படாதீர்கள் நான் விவாகரத்து வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன். கவலைப்படாதீர்கள், தைரியமாக இருங்கள் என்றார். சேரனுக்கு சந்தோஷமாக இருக்கிறது.
அய்யனார் துணை:
நிலா-சோழன் இருவருமே கோர்ட்டுக்கு சென்றார்கள். சோழன், நிலா எப்படியும் விவாகரத்து வேண்டாம் என்று சொல்லிவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தார். நிலாவுமே விவாகரத்து வேண்டாம். சோழனுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்தார். அதற்குப்பின் கோர்ட்டில் தங்களுக்கு திருமணம் செய்து வைத்த போலீசை சோழன் சந்தித்தார். சோழனும் அந்த போலீசும் பேசிக்கொண்டிருந்தார்கள். அதை நிலா ஒளிந்து நின்று கேட்டார். அப்போது சோழன், தங்களுடைய திருமண கதையும், அதனால் செய்த பித்தலாட்ட வேலை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.
சீரியல் ட்ராக்:
அந்த போலீஸ், சோழனுக்கு அறிவுரை சொல்லி நிலாவுடன் சேர்ந்து வாழ சொன்னார். இதை எல்லாம் கேட்டு நிலாவிற்கு பயங்கர அதிர்ச்சியாக இருக்கிறது. பொய் சொல்லி ஏமாற்றி தான் சோழன் தன்னை திருமணம் செய்து கொண்டான் என்று அறிந்து கொண்டு நிலா ரொம்பவே வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் வானதி வீட்டில் அவரின் பெற்றோர்கள் திருமணத்திற்கான வேலைகள் செய்து கொண்டு இருந்தார்கள். அதை எல்லாம் பார்த்து வானதிக்கு கஷ்டமாக இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=OYDNfiPVmmk
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் சோழன், நிலா விவாகரத்து வேண்டும் என்று சொன்னதால் எங்களுக்கு கோர்ட்டில் விவாகரத்து தந்து விட்டார்கள் என்று அழுகிறார். நிலா, போலீஸ் சொன்ன விஷயத்தையும் தங்களுக்கு திருமணமான விஷயத்தையும் சொல்லி கொந்தளிக்கிறார். சேரனால் எதுவுமே பேச முடியவில்லை. நிலா, இனிமேல் இந்த வீட்டில் என்னால் இருக்க முடியாது என்று துணிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். சோழன் எவ்வளவோ கதறுகிறார். ஆனால், நிலா கேட்கவில்லை