லைசன்ஸ் விஷயத்தில் மீண்டும் சிக்கி கொண்ட சோழன், கோபத்தில் நிலா சொன்னது - அய்யனார் துணை

By subhashini · 22/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சந்தாவும், நிலாவின் பிறந்தநாளுக்காக வீட்டிற்கு வந்து கிப்ட் கொடுத்து வாழ்த்து சொன்னார். பின் வீட்டில் எல்லோருமே கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், நிலா மட்டும் சோழன் மீது பயங்கர கோபத்தில் இருந்தார். அதற்குப்பின் சோழன், தன்னுடைய தம்பிகளிடம் தன் காதலை சொல்ல போகும் விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது வந்த நிலா, வெளியில் போகலாமா என்று சொன்னார். சோழனும் சரி என்கிறார்.

பின் நிலா-சோழன் இருவருமே பீச்சுக்கு சென்றிருந்தார்கள். சோழன், நம்முடைய திருமணம் எதிர்பாராமல் நடந்தாலும் நான் உங்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறேன் என்று தன் மனதில் இருக்கும் காதலை சொல்லி விட்டார். இதையெல்லாம் கேட்டு இன்னும் கோபப்பட்ட நிலா, நம்முடைய விவாகரத்தை பற்றி போலீஸிடம் சொன்னது நீங்கள் தானே, நான் போலீஸ் ஸ்டேஷன் சென்று எல்லாம் விசாரித்து விட்டேன். உங்களைப் பற்றிய சுயரூபம் எல்லாம் வெளிவந்துவிட்டது.

அய்யனார் துணை:

நீங்கள் இவ்வளவு ஏமாற்றுக்காரர் என்று தெரியாது. இப்படியா பொய் சொல்லி ஏமாற்றுவீர்கள். நான் ஆதார் கார்டுகாக அலைந்து கொண்டிருக்கும்போது நீங்கள் ஒன்னும் தெரியாதவர் போல நடித்தீர்கள். திருமணத்தை வேண்டுமென்றே எனக்கு தெரியாமல் ரிஜிஸ்டர் பண்ணி இருக்கிறீர்கள். நீங்கள் இவ்வளவு மோசமானவரா? என்று கொந்தளித்தார். இதைக்கேட்டு சோழன் எதுவும் பேச முடியாமல் வாய் அடைத்துப் போனார்.

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோட்டில் நிலா, உங்கள மாதிரி ஒரு ஏமாற்றுக்காரனை என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்று திட்டி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார். பின் இருவருமே வீட்டிற்கு வருகிறார்கள். சோழன் சோகத்தில் இருப்பதை வீட்டில் உள்ள எல்லாருமே புரிந்து கொள்கிறார்கள். பின் நிலா, என்னால் வீட்டில் யாரும் கஷ்டப்படக்கூடாது என்று சோழனிடம் பேசுகிறார். அதற்குப்பின் நிலாவிற்கு லைசன்ஸ் எடுத்து தருவதை பற்றி பல்லவன், சேரன் இருவருமே சோழனிடம் சொல்கிறார்கள். சோழன், நிலா தன்னை விட்டு பிரியக்கூடாது என்பதற்காக ஆதார் கார்டில் நிலாவின் கணவர் சோழன் என்று மாற்றி கொடுத்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு பின் ஆதார் கார்டு கிடைத்ததை நினைத்து நிலா சந்தோஷப்படுகிறார் ஆனால், நிலா சோழன் என்பதை பார்த்து கோபப்படுகிறார். உடனே சோழன், ப்ரூப்காக தான் கொடுத்தேன். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்றெல்லாம் சமாளிக்கிறார். நிலா, முறைத்து விட்டு அங்கிருந்து செல்கிறார். அதற்குப்பின் பல்லவனிடம் சோழன், நிலா ஆதார் கார்டில் என்னுடைய பெயரை தூக்க ரொம்ப கஷ்டப்படணும். அதற்கு பதில் என்னுடன் வாழ்ந்து விடலாம் என்று தோன்றும். அதற்கு பல்லவன், சோழன் செய்த பிராடு வேலையை சொல்லி திட்டுகிறார். அதன் பின் சோழன்-நிலா இருவரும் லைசன்ஸ் அப்பிளை செய்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full