சந்தோசமான தன்னுடைய வாழ்க்கையை தொடங்கும் சோழன், வெட்கத்தில் நிலா - அய்யனார் துணை
தன்னுடைய வாழ்க்கையை தொடங்கும் சோழன் - நிலா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வந்த வானதி, திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். பாண்டியனுமே சந்தோஷமாக அதற்கு பதில் கொடுத்தார். அப்போது வானதி, நிலா சொன்னவுடன் அவசர அவசரமாக திருமணம் செய்தீர்கள். நான் கேட்டால் செய்வீர்களா? உங்கள் வீட்டில் எல்லோருமே நிலாவிற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று பொறாமையில் வழக்கம் போல சண்டை போட்டார். பாண்டியனும் எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், வானதி கேட்பதாகவே இல்லை.
வானதி, ரொம்பவே மோசமாக நிலாவை பற்றி குறை சொல்லிக் கொண்டும் திட்டிக்கொண்டும் இருந்தார். ஒரு கட்டத்தில் கொந்தளித்த பாண்டியன், அவர்களை குறை சொல்வதற்கு முன்பு நீ என்ன செய்தாய்? நீ என்ன பண்ணுகிறாய்? என்று யோசித்துப் பார். கல்லூரி போகிறாய், இங்கே வந்து உட்கார்ந்து கதை பேசுகிறாய், அதை தவிர உன் வாழ்க்கையில் உனக்கு என்று லட்சியம் இருக்கிறதா? என்றார். இதை கேட்டவுடன் வானதிக்கு பயங்கர கோபம் வருகிறது. வானதி, எனக்கும் லட்சியம் குறிக்கோள் எல்லாம் இருக்கிறது. அதை முடித்துவிட்டு வருகிறேன் என்று பாண்டியனிடம் சவால் விட்டு அங்கிருந்து சென்றார்.
அய்யனார் துணை:
இன்னொரு பக்கம் கோவிலில் நிலா-சோழன் இருவரும் சாமி கும்பிட்டு சந்தோஷமாக வெளியே சுற்றிக் கொண்டிருந்தார்கள். நிலா, என்னிடம் இனிமேல் பொய் சொல்லக்கூடாது என்றெல்லாம் கேட்டார். சோழனுமே நிலாவிற்கு சத்தியம் செய்து கொடுத்தார். அதற்குப்பின் தன்னுடைய அப்பாவிடம் வானதி மெடிக்கல் ஷாப் வைத்து தர சொல்லி கேட்டார். வானதியின் அம்மா, அண்ணன் இருவருமே திட்டினார்கள். வானதி, என்னால் யாரிடமும் வேலை செய்ய முடியாது. எனக்கு மெடிக்கல் ஷாப் வைத்துக் கொடுத்தால் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சண்டை போட்டுவிட்டு ரூமுக்குள் சென்று விட்டார்.
சீரியல் ட்ராக்:
அய்யனார் வீட்டில் எல்லோருமே முதல் இரவு காண ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்தார்கள். வீட்டிற்கு வந்த நிலா- சோழனை ரூமுக்குள் அனுப்பி வைத்தார்கள். ஆனால் பாண்டியன், பல்லவன் மட்டும் சோழன் வெளியே வந்து விடுவான் என்று கிண்டல் செய்தார்கள். ரூமுக்குள் சோழன் ஏசி எல்லாம் வாங்கி வைத்திருந்தார். அதை பார்த்து நிலாவிற்கு சந்தோஷமாக இருக்கிறது. பின் இருவரும் ரொம்ப சந்தோஷமாக தங்களுடைய வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டார்கள். சோழன், நிலாவின் தோள் மீது பயந்து கொண்டே கை போட்டார். ஆனால், நிலா எந்த மறுப்பும் சொல்லாமல் சோழனின் மீது சாய்ந்து கொண்டார். பின் இருவருமே தங்களுடைய வாழ்க்கையை தொடங்கினார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா- சோழன் இருவரும் சந்தோசமாக தங்களுடைய வாழ்க்கையை தொடங்கி விடுகிறார்கள். மறுநாள் காலையில் சோழன் வெளியே வந்து தன்னுடைய சகோதரர்களிடம் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே நிலா-சோழன் இருவரும் சேர்ந்து வாழ்வதை நினைத்து சந்தோஷப்படுகிறார்கள். நிலாவும் வெட்கத்தில் வெளியே வர தயங்கிக் கொண்டிருக்கிறார். பின் சோழன் தான் நிலாவை வெளியே அழைத்துக்கொண்டு வந்தார்.