நிலாவின் பிறந்தநாள் கொண்டாட்டம், சோழன் கொடுத்த சப்ரைஸ் - விறுவிறுப்பில் அய்யனார் துணை

By subhashini · 16/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, எனக்கு சேர்ந்து வாழ விருப்பமில்லை. தயவு செய்து விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்றார். அதற்கு பின் சோழனை தனியாக அழைத்து விசாரித்தார்கள். அப்போது சோழன், எனக்கு விவாகரத்தில் விருப்பமில்லை. நிலா கேட்டதால் தான் தருகிறேன் என்றார். அதற்குப்பின் இருவரையும் உட்கார வைத்து பேசி பார்த்தார்கள். ஆனால், நிலா பிடிவாதமாக விவாகரத்து வாங்குவதில் உறுதியாக இருந்தார்.

நேற்று எபிசோட்டில் ஹோட்டலில் நிலா-சோழன் சாப்பிட்டார்கள். அப்போது சோழன், நாம் சேர்ந்து வாழ முயற்சி செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு நிலா, அதற்கு அவசியமே இல்லை விவாகரத்து வாங்குவது தான் ஒரே முடிவு என்று மீண்டும் பிடிவாதமாக இருந்தார். பின் சோழன், தனக்கு தெரிந்த போலீஸ் இடம் நடந்ததை சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அவருமே ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் வானதி கடைக்கு வராததால் பாண்டியன் வருத்தப்பட்டு கொண்டிருந்தார். பின் வானதிக்கு மெசேஜ் பண்ண பார்த்தார் பாண்டியன். அதை வானதி பார்த்து விட்டார். இருந்தாலும் பாண்டியன் மெசேஜ் போடாமல் தன்னுடைய வேலையை பார்த்தார்.

அய்யனார் துணை:

இன்னொரு பக்கம் வேலையை முடித்து வீட்டுக்கு வந்து சேரன், நிலா- சோழனை பற்றி விசாரித்தார். அப்போது நிலா, கோர்ட்டில் நடந்ததை சொன்னார். அப்போது அந்த போலீஸ் நிலாவிற்கு ஃபோன் செய்து விவாகரத்து அப்ளை செய்த விஷயமாக பேசி இருந்தார். நிலாவிற்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. உடனே போலீஸ், நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும். அந்த வேலையை பாருங்கள் என்று அறிவுரை சொல்லி வைத்து விட்டார். அதற்குப்பின் பாண்டியனை தேடி வானதி கடைக்கு வந்து விட்டார். இருவருமே தங்கள் சன்டையை விட்டு பேசிக் கொண்டார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, போலீசுக்கு விவாகரத்து விஷயம் எப்படி தெரிந்தது என்று கேட்கிறார். அதற்கு சோழன், ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். இருந்தாலுமே நிலாவிற்கு சந்தேகமாக இருக்கிறது. அதற்குப்பின் இரவு 12 மணிக்கு நிலாவின் பிறந்தநாள் என்பதால் சோழன் கேக் வாங்கி மெழுகுவத்தி எல்லாம் ஏற்றி சர்ப்ரைஸ் கொடுக்கிறார். நிலாவும் அதை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டு கேக்கை வெட்டுகிறார்.

சீரியல் ட்ராக்:

வீட்டில் உள்ள எல்லோருமே நிலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். மறுநாள் காலையில் வீட்டில் உள்ள எல்லோரும் நிலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கிப்ட் கொடுக்கிறார். அப்போது சோழன் நிலவிற்காக வாங்கி வைத்த புடவையை கொடுக்கிறார். அதை பார்த்து நிலா ரொம்ப சந்தோசப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full