சோழன் குடும்பத்தை நினைத்து வருத்தப்படும் நிலா, மனோகர் என்ன செய்ய போறாரோ? அய்யனார் துணை

சோழன் குடும்பத்தை நினைத்து வருத்தப்படும் நிலா

By subhashini · 20/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், தன்னுடைய தம்பிகளை அழைத்துக் கொண்டு தன்னுடைய வசதிக்கேற்றவாறு துணிகளை வாங்கிக் கொடுத்தார். இது எல்லாம் சோழன் கவனித்து விட்டார். அதற்குப்பின் சோழன் நிலாவிற்கு துணிகளை செலக்ட் பண்ணுகிறார். அதற்குப்பின் கடையில் இருந்து கிளம்பும்போது சாப்பிட சொன்னார்கள். அப்போது சோழன், இலவசமாக சாப்பிட தான் இங்கு வருவீர்களா? என்று தன்னுடைய மனோகருக்கு பதிலடி கொடுத்தார். பின் ஹோட்டலுக்கு சென்றார்கள். அங்கு ரேட்டை பார்த்து சோழன் குடும்பத்தில் எல்லோரும் வாயை பிளந்தார்கள். உடனே மனோகர், நான்தான் பில் கட்டப் போகிறேன். தாராளமாக எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் என்றார். இதை பார்த்து சோழனுக்கு கடுப்பானது.

மனோகர் குடும்பத்தில் உள்ளவர்கள் பெரிய பணக்காரர்கள் போல சாப்பாடு ஆர்டர் செய்தார்கள். ஆனால், நிலா மட்டும் தனக்கு தேவையானதை சொன்னார். பின் நிலா சொன்னதை கேட்டு சோழன் குடும்பத்தில் எல்லோருமே தனக்கு பிடித்தது சொன்னார்கள். அதை மனோகர் கிண்டல் செய்தார். அதற்குப்பின் வரவேற்பு விழாவிற்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்று நிலாவின் அம்மா தேன்மொழி கேட்டார். நாங்கள் மட்டும் தான் என்று சோழன் சொன்னார். அதற்கு தேன்மொழி, உறவினர் இல்லை என்றால் எப்படி என்றார். உடனே சேரன், ஒரு பத்து பேர் வருவார்கள் என்றார். அதற்குப்பின் சோழன், பாண்டியன் இருவரும் வானதியின் வீட்டிற்கு சென்று வரவேற்பு விழாவிற்காக அழைத்தார்கள்.

அய்யனார் துணை:

அவர்களுமே ஒத்துக் கொண்டார்கள். அதற்கு பின் சேரன், கார்த்திகாவின் வீட்டிற்கு சென்று சோழனின் ரிசப்ஷனுக்காக அழைத்தார். கார்த்திகா ரொம்பவே சோகமாக இருந்தார். கார்த்திகாவின் அம்மாவும் ஏதோ பிரச்சனை வேதனையில் இருந்தார்கள். ஆனால், அதை இருவருமே வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் அமைதியாக இருந்தார்கள். சேரனுக்கும் கார்த்திகாவின் செயல்களை கண்டு சந்தேகம் வருகிறது. ஆனால், கார்த்திகா ஏதோ சொல்லி சமாளித்தார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே சோழனுடைய ரிசப்ஷன் நினைத்து ரொம்பவே சந்தோஷப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரிசப்ஷனுக்கு மனோகர் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். ரிசப்ஷனுக்காக அய்யனார் குடும்பத்தில் எல்லோருமே தயாராகி கிளம்புகிறார்கள். நடேசன் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என்று சோழன், பாண்டியன் எல்லோருமே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நடேசன் கடுப்பாகிறார். உடனே நடேசன், நான் பங்சனுக்கு வரவில்லை என்று சொல்கிறார். பின் சேரன் தன்னுடைய அப்பாவை சமாதானம் செய்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குபின் எல்லோருமே கிளம்பி நிலாவின் வீட்டிற்கு சென்று விடுகிறார்கள். அங்கு நிலாவின் அப்பா அம்மா எல்லோருமே நிலாவிற்காக அய்யனார் குடும்பத்தை கவனிக்கிறார்கள். இருந்தாலும் நிலாவிற்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ? என்று பயப்படுகிறார். பின் நிலாவை, அவர் அம்மா தனியாக அழைத்து சென்று விடுகிறார். அய்யனார் குடும்பத்தை மனோகர் ரொம்ப நக்கலாகவும் ஏளனமாகவும் பேசுகிறார். ஆனால், அது எதுவும் கண்டு கொள்ளாமல் அய்யனார் குடும்பம் அமைதியாக இருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full