சேரன் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் தாய்மாமன், நிலா சொன்ன வார்த்தை - அய்யனார் துணை

By subhashini · 28/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் கோவிலில் சேரன் குடும்பம் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் போது அய்யனார் சாமி வந்து குறி சொன்னார். அப்போது சாமி, சேரனை அழைத்து நீ நினைத்து என்னை தேடி வந்ததுக்கான காரணம் நிறைவேறும். சந்தோஷமாக செல் என்றார். அதற்கு பின் வீட்டில் எல்லோருமே சந்தோசமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த வானதியின் அம்மா, அப்பா எல்லோருமே ரொம்ப எமோஷனலாக அழுதார்கள். வானதி உண்மை எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

வானதி உண்மையை சொல்லாமல் அமைதியாகவே இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே பயங்கரமாக கோபப்பட்டு திட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் வானதி அம்மா, பாண்டியனுக்கு போன் செய்து, நீ நல்லாவே இருக்க மாட்டாய். என் மகளை கர்ப்பமாக்கிவிட்டு நீ நிம்மதியாக இருக்கிறாயே என்றெல்லாம் திட்டினார். ஆனால், பாண்டியனுக்கு ஒண்ணுமே புரியவில்லை. பின் சேரனிடம் வானதியின் அம்மா- அப்பா இருவருமே போன் செய்து சண்டை போட்டார்கள்.

அய்யனார் துணை:

பின் வானதி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொன்னார்கள். இதைக் கேட்டு சேரன் ஷாக் ஆகி பாண்டியனை அடித்தார். வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஒன்றுமே புரியவில்லை. பாண்டியனுக்குமே என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்தார். அதற்குப்பின் பாண்டியன் வானதிக்கு போன் செய்து, நீ கர்ப்பமாக இருக்கிறாயா? நமக்குள் ஒன்னும் நடக்கவில்லையே? என்று விசாரித்தார். ஆனால் வானதி உண்மை சொல்லாமல் சிரித்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வானதி உண்மையை சொல்லாமல் பாண்டியனை வெறுப்பேற்றி கொண்டிருக்கிறார். பாண்டியன், வானதி எப்படி கர்ப்பமானால் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். சோழன், வழக்கம் போல பாண்டியனை வம்பு இழுத்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் நடேசன் மனைவியின் அண்ணனை காண்பிக்கிறார்கள். நடேசன் குடும்பம் ஊருக்குள் வந்திருப்பது அறிந்து கோபப்படுகிறார். பின் நடேசன் குடும்பம் தங்கி இருக்கும் வீட்டிற்கு வந்த தாய்மாமன், என் தங்கையை கொன்றுவிட்டு நீ ஊருக்குள்ளே வந்திருக்கிறாயா? என்றெல்லாம் ஆவேசப்பட்டு கத்தி சண்டை போடுகிறார்.

சீரியல் ட்ராக்:

அவர், நடேசனை அடிப்பதால் அவருடைய சோழன் கோபப்பட்டு அடிக்கப் போகிறார். இதனால் இருவருக்கும் இடையே கலவரம் நடக்கிறது. பின் ஒரு வழியாக அந்த கலவரத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். நிலா, முடிந்த கதையை பற்றி பேச வேண்டாம் என்று சொல்கிறார். பின் நடேசன் அமைதியாக இருக்கிறார். பின் சோழன் குடும்பம் அங்கிருந்து கிளம்ப தயாராகுகிறார்கள். அதற்கு பின் இந்த சண்டையில் சோழன் கையில் அடிபட்டு இருப்பதால் நிலா அதை பார்த்து மருந்தெல்லாம் போட்டு விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full