நடேசனின் நிலைமையை கண்டு பதறி போகும் நிலா, பயத்தில் சோழன் - விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா ப்ராஜெக்ட்டை நல்லபடியாக செய்து முடித்ததால் ராகவ் ட்ரீட் கொடுப்பதற்காக லாங் டிரைவ் அழைத்தார். ஆனால், நிலா முடியாது என்றார். இன்னொரு பக்கம் வானதி வழக்கம் போல பாண்டியன் கடைக்கு வந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தார். சோழன், உங்கள் இருவருக்கும் இடையே என்ன ஞ்சாயத்து என்றார். அப்போது வானதி, சேரன் திருமணம் தொடர்பாக நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னார். கோபத்தில் பாண்டியனும் கத்துகிறார். பின் சோழன், எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். தயவு செய்து சண்டை போடாதீர்கள் என்று இருவரையும் சமாதானம் செய்து வைத்தார்.
காயத்ரி- சோழன் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது காயத்ரி, என்னை வெளியே அழைத்துப் போக மாட்டீர்களா? எனக்கு கிப்ட் எதுவும் தர மாட்டீர்களா? இன்று என்னுடைய பிறந்தநாள் என்றார். இதைக் கேட்டு சோழனுக்கு ஒன்றும் புரியவில்லை. மனதிற்குள் வசமாக மாட்டிக் கொண்டோமே என்று புலம்பி இருந்தார். பின் காயத்ரி, என் வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்திருக்கிறேன். நீங்கள் வரணும் என்றார். சோழனும் எதுவும் சொல்லாமல் சரி என்றார். பின் சோழன்- பல்லவன் இருவரும் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த நிலா, ஆபீஸில் நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னார்.
அய்யனார் துணை:
குறிப்பாக ராகவ் காபி சாப்பிட அழைத்த விஷயத்தையும் சொல்ல, சோழன் கோபப்பட்டார். அதற்குப்பின் காயத்ரி பர்த்டே பார்ட்டிக்கு போக சோழன் தயாராகுவதற்கு அலப்பறை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து நிலாவிற்கு பயங்கர கடுப்பானது. பின் சோழன் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு சென்று விட்டார். அங்கு காயத்ரியின் நண்பர்கள் எல்லோருமே வந்துவிட்டார்கள். பின் காயத்ரி தன்னுடைய நண்பர்களிடம் சோழனை அறிமுகம் செய்துவிட்டு கேக் வெட்டி இருந்தார். சோழன், ஒரு ரோஜா பூவை கொடுக்கிறார். காயத்ரி உண்மையாலுமே காதலித்தார். சோழனுக்கு என்ன செய்வது என்று புரியாமல் பயப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காயத்ரி, இவர்தான் என்னுடைய ஆளு. நான் தான் முதலில் காதலை சொன்னேன் என்றெல்லாம் தன்னுடைய நண்பர்களிடம் செல்கிறார். இதை கேட்டு சோழனுக்கு அடி வயிற்றில் புலி கரைப்பது போல் இருக்கிறது. பின் அங்கிருந்து காயத்ரிக்கு தெரியாமல் சோழன் எஸ்கேப் ஆகி வெளியே வந்து விடுகிறார். பின் சோழன், நாம் ஒன்று நினைத்தால் என்னவோ நடக்கிறது என்று பயத்தில் புலம்பி கொண்டு வீட்டிற்கு வருகிறார். அங்கு வீட்டில் எல்லோருமே உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள். சோழனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. குழப்பத்திலேயே பேசிக் கொண்டிருக்கிறார். மறுநாள் காலையில் கிச்சனில் நிலா, சேரன் இருவரும் சமைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது சேரன், ஆலு செய்யப் போகிறேன் என்று சொன்னவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே கலாய்க்கிறார்கள். அதற்குப் பின் நடேசனுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கிறது. இதை பார்த்து பதறிப் போன நிலா, ஹாஸ்பிடலுக்கு போகலாம் என்று கூப்பிடுகிறார். ஆனால் நடேசன் வரவில்லை. பின் வீட்டில் இருக்கும் மாத்திரையை எடுத்து கொடுத்து போட சொல்கிறார். நிலா, நடேசனை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சேரனிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார். இன்னொரு பக்கம் சோழன் வாடகை வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது காயத்ரி விடாமல் போன் செய்து கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.