சோழனின் சாமர்த்திய பேச்சால் அந்தர் பல்டி அடித்த நிலா, காயத்ரி நிலை என்ன? அய்யனார் துணை

By subhashini · 3/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் காயத்ரி, ஏன் போன் எடுக்கவில்லை. எதற்காக என்னை அவாய்ட் செய்தீர்கள் என்றெல்லாம் கேட்டார். இதை கேட்டு சேரனுக்கு ஷாக்காக இருந்தது. காயத்ரியை தனியாக அழைத்து சென்று சோழன் பேசி இருந்தார். அதற்குப்பின் பாண்டியன், சோழனை காயத்ரி காதலிக்கும் விஷயத்தைப் பற்றி சொன்னார். இதை கேட்டு சேரனுக்கு இன்னும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. இன்னொரு பக்கம் சோழன், எனக்கும் உங்களுக்கும் செட்டாகாது. நான் உங்களை காதலிக்கவே இல்லை என்றார். அதற்கு காயத்ரி, நான் உங்களிடம் ஆரம்பத்திலே காதலிக்கிறேன் என்று சொல்லி தான் பழகினேன் என்றார்.

சோழன் தான் காதலிக்கவில்லை என்று எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைத்தார். ஆனால், காயத்ரி கேட்கவே இல்லை. உடனே அங்கு வந்த சேரன், அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது. இந்த விஷயம் தெரியாதா? என்றார். இதைக் கேட்டு அதிர்ச்சியான காயத்ரி, உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? ஏன் என்னிடம் சொல்லவில்லை? நன்றாக தானே என்னிடம் பேசினீர்கள். இப்படி என்னை ஏமாற்றி விட்டீர்களே, என் நிலைமை என்ன? என்றெல்லாம் சொல்லி அழுது கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். சோழனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சேரன் அந்த பெண்ணை தேடி போனார்.

அய்யனார் துணை:

ரோட்டில் காயத்ரி அழுது கொண்டிருந்தார். அப்போது சேரன், சோழன் செய்தது தவறு தான். நீ எதையும் யோசிக்காதே என்றெல்லாம் அறிவுரை சொல்லி அந்த பெண்ணை அனுப்பி வைத்தார். பின் இந்த விஷயத்தை எல்லாம் பல்லவன் நிலாவிற்கு போன் செய்து சொன்னார். கோபத்தில் நிலா, தேவையில்லாத வேலை செய்தால் அனுபவித்து தான் ஆகணும். சோழன் அவஸ்தைப்படட்டும் என்று திட்டி போனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன், வானதி இருவரும் போனில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானதி வழக்கம் போல் பாண்டியனை வம்பு இழுத்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று தன்னுடைய தரப்பு நியாயத்தை பாண்டியனிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து வானதி அங்கு வந்து விடுகிறார். பின் சோழன்-காயத்ரி லவ்வை பற்றி கேட்டு வம்பு இழுத்துக் கொண்டிருக்கிறார். அதற்குப்பின் வீட்டில் எல்லோரும் அவரவர்கள் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது வீட்டிற்கு வந்த காயத்ரி நண்பர்கள், உங்களுக்கு திருமணம் ஆனதை ஏமாத்தி காதலித்தீர்களா? அவள் ரூமை விட்டு வெளியே வரவே இல்லை. அவளுக்கு ஏதாவது ஒன்று என்றால் உன்னை சும்மா விட மாட்டேன் என்றெல்லாம் சோழனை மிரட்டுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

உடனே சேரன், பாண்டியன் எல்லோரும் அவர்களை அனுப்பி வைக்கிறார்கள். பின் சேரன், சோழன் செய்தது தவறு என்று திட்டிக் கொண்டிருக்கிறார். கோபத்தில் சோழன், நான் என்ன தவறு செய்தேன். இது பொய்யான திருமணம் தானே. விவாகரத்து வாங்கிக் கொண்டு நிலா சென்று விடுவார். இந்த கல்யாணத்தை அவர் ஏற்றுக் கொள்ளவே இல்லை. நான் ஒரு பெண்ணுடன் பேசியதில் என்ன தவறு. நான் அந்த பெண்ணை காதலிக்கவில்லை. தோழியாக தான் நான் பழகினேன் என்றெல்லாம் சொல்கிறார். நிலா, நீங்கள் சொல்வது உண்மைதான். இது போலியான கல்யாணம் தான். நீங்கள் காயத்திரி உடன் பேசுங்கள், பழகுங்கள், அவளை காதலியுங்கள். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்வதால் சோழன் ஷாக் ஆகி நிற்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full