சிறப்பாக நடந்து முடிந்த சோழன்-நிலா திருமணம் , கடுப்பில் மனோகர்- அய்யனார் துணை

நிலா-சோழன் திருமணம்

By subhashini · 8/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, சோழனை திருமணம் செய்து கொள்வதற்கு ஒத்துக்கொண்டதால் அய்யனார் வீட்டில் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், மனோகர் அவருடைய மனைவி இருவரும் கோபப்பட்டார்கள். நிலாவின் பெற்றோர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லி புரிய வைத்தார்கள். ஆனால் நிலா கேட்கவே இல்லை. சோழனை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். நிலா சொன்னதை கேட்டு சோழன் ரொம்பவே சந்தோஷமாக இருந்தார். பின் நிலா விடமும் எமோஷனலாக சோழன் பேசி இருந்தார். அதற்குப்பின் நிலா-சோழன் திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்தார்கள்.

அப்போது நிலாவிற்கு போன் செய்த மனோகர், திருமணத்திற்கு புடவை நகையெல்லாம் வாங்க வேண்டும் என்று கிளம்பி வர சொன்னார். நிலாவும் சேரனிடம் இதைப் பற்றி சொன்னார். சேரன், மனோகர் வீட்டிற்கு சென்று விசாரித்தார். அப்போது நிலாவின் அம்மா திருமணத்தில் விருப்பம் இல்லாதது போல பேசி இருந்தார். மனோகர், எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பது போலவே பேசி இருந்தார். சேரன், அவர்கள் இருவரையும் தயவு செய்து சேர்த்து வையுங்கள். நிலாவை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றெல்லாம் பேசி இருந்தார்.

அய்யனார் துணை:

சோழன்- நிலா திருமணத்திற்கான ஏற்பாடுகளை எல்லாம் தடபுடலாக செய்து கொண்டிருந்தார்கள். நிலாவின் அப்பா, அம்மாவால் எதுவும் பேச முடியவில்லை. பின் கோயிலுக்கு எல்லோருமே கிளம்பி வந்து விட்டார்கள். நிலா ரொம்ப சந்தோஷமாக இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே திருமணத்தை நினைத்து சந்தோஷப்பட்டார்கள். ஆனால், சோழன் மட்டும் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ? நிலாவின் அப்பா கல்யாணத்தை தடுத்து நிறுத்தி விடுவாரோ? என்ற பயத்திலேயே இருந்தார். சேரன், சோழனை சமாதானம் செய்தார். இருந்தாலும் சோழனால் அந்த பதட்டத்தில் இருந்து வர முடியவில்லை. சீக்கிரம் நிலாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் புலம்பி கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன், திருமணம் நின்று விடுமோ? என்ற பயத்திலேயே இருக்கிறார். இதை கவனித்த நிலா, நம் இருவருக்கும் திருமணம் கண்டிப்பாக நடக்கும். நீங்கள் கவலைப்படாதீர்கள். இந்த தருணங்களை சந்தோஷமாக என்ஜாய் பண்ணுங்கள் என்றெல்லாம் சொல்கிறார். ஒரு வழியாக சோழன்- நிலா திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், நிலாவின் அப்பா, அம்மாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை.

சீரியல் ட்ராக்:

இருந்தாலும் அமைதியாக இருக்கிறார்கள். நிலா-சோழன் இருவரையும் அய்யனார் குடும்பத்திற்கு அழைத்து வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகு நடக்க வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்கிறார்கள். அதை எல்லாம் பார்த்து நிலாவின் அப்பாவிற்கு கடுப்புதான் ஆகிறது. இருந்தாலும் பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக இருக்கிறார். சோழன் சந்தோஷத்தின் உச்சத்திலேயே இருக்கிறார்

behindtalkies AMP · Quick view
View full