சோழன் சொன்னதால் வீட்டில் முதலிரவு ஏற்பாடு, நிலா என்ன செய்ய போகிறார்? அய்யனார் துணை

நிலா-சோழனின் சந்தோஷமான தருணங்கள்

By subhashini · 11/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலாவின் பெற்றோர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். நிலா தன்னுடைய அப்பா அம்மாவை வழியனுப்பி வைத்தார். அதற்குப்பின் நிலா, எப்போதும் போலவே ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். ஆனால், சோழன் மட்டும் நிலா தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டது நினைத்து சந்தோஷப்பட்டு ஒரு தனி உலகில் பறந்து கொண்டிருந்தார். பின் சோழன், நிலாவுடன் நெருக்கமாக உட்காருவது பேசுவது என்று சந்தோஷத்தில் இருந்தார். அதற்குப்பின் நிலா-சோழன் இருவரும் கோயிலுக்கு கிளம்பி போனார்கள்.

நிலாவும், சந்தோசமாக சோழனின் தோள் மீது கை போட்டு பைக்கில் சென்றார். அதற்கு பின் பாண்டியன் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வந்த வானதி, திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். பாண்டியனுமே சந்தோஷமாக அதற்கு பதில் கொடுத்தார். அப்போது வானதி, நிலா சொன்னவுடன் அவசர அவசரமாக திருமணம் செய்தீர்கள். நான் கேட்டால் செய்வீர்களா? உங்கள் வீட்டில் எல்லோருமே நிலாவிற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று பொறாமையில் வழக்கம் போல சண்டை போட்டார். பாண்டியனும் எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், வானதி கேட்பதாகவே இல்லை.

அய்யனார் துணை:

வானதி, ரொம்பவே மோசமாக நிலாவை பற்றி குறை சொல்லிக் கொண்டும் திட்டிக்கொண்டும் இருந்தார். ஒரு கட்டத்தில் கொந்தளித்த பாண்டியன், அவர்களை குறை சொல்வதற்கு முன்பு நீ என்ன செய்தாய்? நீ என்ன பண்ணுகிறாய்? என்று யோசித்துப் பார். கல்லூரி போகிறாய், இங்கே வந்து உட்கார்ந்து கதை பேசுகிறாய், அதை தவிர உன் வாழ்க்கையில் உனக்கு என்று லட்சியம் இருக்கிறதா? என்றார். இதை கேட்டவுடன் வானதிக்கு பயங்கர கோபம் வருகிறது. வானதி, எனக்கும் லட்சியம் குறிக்கோள் எல்லாம் இருக்கிறது. அதை முடித்துவிட்டு வருகிறேன் என்று பாண்டியனிடம் சவால் விட்டு அங்கிருந்து சென்றார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் கோவிலில் நிலா-சோழன் இருவரும் சாமி கும்பிட்டு சந்தோஷமாக வெளியே சுற்றிக் கொண்டிருந்தார்கள். நிலா, என்னிடம் இனிமேல் பொய் சொல்லக்கூடாது என்றெல்லாம் கேட்டார். சோழனுமே நிலாவிற்கு சத்தியம் செய்து கொடுத்தார். அதற்குப்பின் தன்னுடைய அப்பாவிடம் வானதி மெடிக்கல் ஷாப் வைத்து தர சொல்லி கேட்டார். வானதியின் அம்மா, அண்ணன் இருவருமே திட்டினார்கள். வானதி, என்னால் யாரிடமும் வேலை செய்ய முடியாது. எனக்கு மெடிக்கல் ஷாப் வைத்துக் கொடுத்தால் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சண்டை போட்டுவிட்டு ரூமுக்குள் சென்று விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் அய்யனார் வீட்டில் எல்லோருமே முதல் இரவு காண ஏற்பாடுகள் எல்லாம் செய்திருக்கிறார்கள். வீட்டிற்கு வந்த நிலா- சோழனை ரூமுக்குள் அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் பாண்டியன், பல்லவன் மட்டும் சோழன் வெளியே வந்து விடுவான் என்று கிண்டல் செய்கிறார்கள். ரூமுக்குள் சோழன் ஏசி எல்லாம் வாங்கி வைத்திருக்கிறார். அதை பார்த்து நிலாவிற்கு சந்தோஷமாக இருக்கிறது. பின் இருவரும் ரொம்ப சந்தோஷமாக தங்களுடைய வாழ்க்கையை பற்றி பேசிக்கொள்கிறார்கள். சோழன், நிலாவின் தோள் மீது பயந்து கொண்டே கை போடுகிறார். ஆனால், நிலா எந்த மறுப்பும் சொல்லாமல் சோழனின் மீது சாய்ந்து கொள்கிறார். பின் இருவருமே தங்களுடைய வாழ்க்கையை தொடங்குகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full