சேர்ந்து வாழ போராடும் சோழன், விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போகும் நிலா -அய்யனார் துணை

By subhashini · 11/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, இந்த வீட்டில் உள்ளவர்கள் போல வேறு எங்கேயுமே இருக்க முடியாது. அவ்வளவு தங்கமாக பெண்களை பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் உங்கள் மகளை திருமணம் செய்து கொடுங்கள் இல்லை கொடுக்காமலும் போங்க. அது உங்கள் விருப்பம். ஆனால், இந்த குடும்பத்தை பற்றியும் குடும்பத்தில் உள்ளவர்களை பற்றியும் பேசுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று ரொம்ப பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். நிலா பேசுவதைக் கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.

சண்டை முடிந்த பிறகு நிலா வழக்கம் போல தாலியை கழட்டி சோழன் கையில் கொடுத்தார். இன்னொரு பக்கம் வானதி, அவருடைய அண்ணனும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் வந்த வானதியின் பெற்றோர்கள், இனி நீ பாண்டியனுடன் பேசக்கூடாது என்று திட்டினார்கள். ஆனால், வானதி கேட்கவே இல்லை. பின் வானதி, பாண்டியனை சந்தித்து பேசி இருந்தார். அப்போது இருவரும் சண்டை போட்டு கொண்டார்கள். இன்னொரு பக்கம் நிலா வீட்டில் எல்லோருமே சந்தோசமாக பீச்க்கு போனார்கள்.

அய்யனார் துணை:

பீச்சில் நிலா, சோழன் இருவருமே சந்தோஷமாக விளையாடினார்கள். அந்த சமயம் பார்த்து நடேசன் பீச்சில் குடிப்பதால் போலீஸ் அவரை திட்டி வார்னிங் கொடுக்கிறார்கள். இதனால் சோழன் குடும்பத்தினர் நடேசனை திட்டினார்கள். மறுநாள் காலையில் நிலா ஸ்கூட்டி ஓட்டுவதற்கு சோழனை அழைத்துக்கொண்டு போனார். அதற்கு பின் பல்லவன், நிலா இருவரும் வேலைக்கு கிளம்பு போது வானதியின் அண்ணன் வழி மறைத்து நிலாவை பற்றி ரொம்ப மோசமாக பேசி விட்டார். இதனால் கோபப்பட்டு பல்லவன் அவர்களை அடிக்க போக, நிலா தடுத்து விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வானதி அண்ணன் சொன்னதை நினைத்து பல்லவன் கோபப்பட, நிலா வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவரை சமாதானம் செய்கிறார். இன்னொரு பக்கம் வானதி, பாண்டியனை சந்தித்து பேசுகிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து பிரிகிறார்கள். இன்னொரு பக்கம் சோழன் விவாகரத்து நினைத்து வேதனையில் இருக்கிறார். அப்போது சோழனுக்கு போன் செய்த வக்கீல், விவாகரத்து பற்றி சொல்கிறார். பின் சோழன், நிலாவிடம் தன் காதலை சொல்ல பீச்சிற்கு அழைத்து செல்கிறார். அப்போது சோழன், நான் உங்களை மனைவியாக தான் பார்க்கிறேன் என்று சொன்னதால் நிலா ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

https://www.youtube.com/watch?v=Jx6oXE1awUM

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நிலா, கோர்ட்டுக்கு கிளம்பலாமா என்று கேட்கிறார். அப்போது சேரன், நீங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம். எதற்காக விவாகரத்து என்றெல்லாம் கேட்கிறார். அதற்கு நிலா, பிரச்சினையில் தான் சோழன் எனக்கு தாலி கட்டினார். அவருடைய வாழ்க்கையை நான் கெடுக்கவில்லை என்று சொல்கிறார். அதற்கு பின் சோழன்- நிலா இருவருமே ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சோழன், விவாகரத்து வாங்க வந்து இப்படி சேர்ந்து சாப்பிடுவது நம்ம ரெண்டு பேரும் தான். நாம் ஏன் சேர்ந்து வாழக்கூடாது? என்று கேட்கிறார். நிலா ஷாக் ஆகிறார்.

behindtalkies AMP · Quick view
View full