நிலாவிடம் பல்பு வாங்கிய சோழன், கலாய்த்து தள்ளும் பாண்டியன் - கலகலப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், அதெல்லாம் உண்மையான நகையா? என்று கேட்டார். அதற்கு நிலா, ஆமாம் அதெல்லாம் உண்மையான தங்கம் என்று சொன்னார். உடனே சோழன், நான் அதிலிருந்து ரெண்டு ஆட்டையை போட்டு விட்டேன் என்று சொன்னவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள். பின் நிலா, நானும் அங்கிருந்து ஒன்றை திருடி விட்டேன் என்று தன்னுடைய ஆதார் கார்டை காண்பிக்க, மொத்த வீடுமுமே சந்தோஷமாக இருக்கிறது.
பல்லவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. இதனால் நிலா, நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சேரனை வேலைக்கு கிளம்ப சொன்னார்.
இதையெல்லாம் பார்த்த சோழன், நிலாவுடன் இருப்பதற்காக தனக்கு உடம்பு சரியில்லை என்று ட்ராமா செய்து வீட்டிலேயே தங்கி விட்டார். இன்னொரு பக்கம் பாண்டியனை பார்க்க அவருடைய காதலி மெக்கானிக் செட்டுக்கு வந்திருந்தார். ஆனால், பாண்டியன் முகம் கொடுத்து கூட பேசவில்லை. இதனால் கோபப்பட்டு பாண்டியனின் காதலி சண்டை போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அய்யனார் துணை:
இன்னொரு பக்கம் சேரன், வேலை செய்யும் இடத்திற்கு அவருடைய நண்பரின் தங்கை வந்திருக்கிறார். அவருக்கு தமிழ் சுத்தமாக பேசத் தெரியாது. அவருக்கு இந்தி தான் தெரியும். இதனால் சேரனுமே தனக்கு தெரிந்த இந்தியை வைத்து அவரிடம் பேசி இருந்தார். இருவரும் நன்றாக சிரித்து பேசி கொண்டு இருந்தார்கள். கடைசியில் பல்லவனுக்கு காய்ச்சல் அதிகமானதால் தன்னுடைய மாமனாரிடம் கொடுத்து மருந்து மாத்திரை வாங்கி தர சொன்னார் நிலா. அவருமே வாங்கிக் கொண்டு வந்து தந்தார். பின் நிலா, பல்லவனின் அம்மா பற்றிய கதையை கேட்டார். ஆனால், அய்யனார் எதுவுமே சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டார்.
இன்றைய எபிசோட்:
இன்று எபிசோட்டில் பல்லவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனதால் நிலா பார்த்து பார்த்து கவனிக்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு பாண்டியனின் காதலி வானதி வருகிறார். அப்போது வானதி, பாண்டியன் போன் எடுக்காததால் சண்டை போட்ட விஷயத்தை எல்லாம் சொல்கிறார். பின் நிலாவும் அவருக்கு அறிவுரை சொல்லி அனுப்புகிறார். அதற்குப்பின் சேரன் வீட்டிற்கு வந்து எல்லோருக்கும் சமைத்து வைக்கிறார். அப்போது பாண்டியனுக்கு போன் செய்த சோழன், எனக்கு சவாரி இருக்கிறது. நான் வர லேட் ஆகும் என்று சொல்லிவிடுகிறார். பின் சோழன் வீட்டிற்கு வராததால் நிலா விசாரிக்கிறார். அப்போது பாண்டியன், சவாரி இருப்பதால் சோழன் லேட்டாக வருவான் என்று சொல்கிறார். இருந்தாலும், சோழன் வீட்டிற்கு வராததை நினைத்து நிலா கவலையில் இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் நிலா, வாசலுக்கு சென்று பார்த்துக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பல்லவன், பாண்டியன் இருவருமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப்பின் சோழனுக்கு போன் செய்து நிலா விசாரிக்கிறார். இருந்தாலும் நிலா தூங்காமல் சோழன் வரும் வரை வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கிறார்.பின் நிலா, சோழன் வந்தவுடன் பேசிவிட்டு தூங்க சென்று விடுகிறார். பின் நடந்ததை எல்லாம் பாண்டியன், சோழனிடம் சொல்கிறார். இதனால் நிலா தன் மீது அக்கறை கொள்வதை நினைத்து சோழன் சந்தோஷப்படுகிறார்.
https://www.youtube.com/watch?v=EiI3LlxzQWs
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சோழன், நீங்க ரொம்ப கிரேட்டுங்க. நான் வீட்டுக்கு வரவில்லை என்று எனக்காக விசாரித்தது, அக்கறைப்பட்டது எல்லாம் நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது என்று சொல்கிறார். உடனே நிலா, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. மீண்டும் என்னுடைய அண்ணனும் அப்பாவும் சேர்ந்து உங்களுக்கு ஏதாவது பிரச்சனை கொடுத்து விட்டார்களோ? என்று நினைத்தேன். மற்றபடி வேற எதுவும் இல்லை என்று சொல்கிறார். இதையெல்லாம் பார்த்த பல்லவன், பாண்டியன் இருவருமே பயங்கரமாக சிரித்து கலாய்த்து தள்ளுகிறார்கள்.