கோர்ட்டில் சோழன் சொன்ன வார்த்தை, நிலா எடுக்க போகும் முடிவு என்ன? அய்யனார் துணை

By subhashini · 18/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், சேரன்-பாண்டியன் காதலைப் பற்றி ரொம்ப புலம்பி கொண்டிருந்தார். நிலா, நீங்களும் காதலிக்க வேண்டியது தானே என்றார். இதைக்கேட்டு சோழனுக்கு பயங்கர கடுப்பாகிறது. பின் சோழன், உங்கள் காதலைப் பற்றி சொல்லுங்கள் என்றார். அதற்கு நிலா, நான் இன்னும் யாரும் காதலிக்கவில்லை. ஆனால், சீக்கிரமாகவே காதலித்து தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றார். இதைக் கேட்டு சோழனுக்கு ஷாக் ஆனது.

அதற்கு பின் வீட்டில் நடேசன் பனியில் படுத்திருப்பதால் அவருக்கு உடம்பு முடியாமல் போகிறது. பின் நிலா, அவரைத் திட்டி உள்ளே தூங்க வைத்தார். நடேசன், நிலா மாதிரி ஒரு பெண் இந்த வீட்டிற்கு வந்ததால் தான் வீடு வீடாகவே இருக்கிறது. சோழன் ஒழுங்காக நிலாவுடன் சேர்ந்து வாழ்வதற்கான வழியை பார்க்க சொல் என்று சேரனிடம் அறிவுரை சொன்னார். மறுநாள் காலையில் பாண்டியன் கடை திறப்பு விழாவிற்கு வீட்டில் உள்ள எல்லாருமே தயாராகி சென்றாகள்.

அய்யனார் துணை:

வீட்டில் எல்லோருமே கிளம்பி கடைக்கு வந்தார்கள். கடையை பாண்டியன் ரொம்ப அழகாக தயார் செய்து வைத்திருந்தார். பின் கடைக்கு சேரன் மெக்கானிக் ஷாப் என்று பெயர் வைத்து இருந்தார் பாண்டியன். அதை பார்த்து நிலா- சோழன் இருவரும் சந்தோஷப்பட்டார்கள். பின் சேரனை அழைத்து வந்து கடையின் பெயரை காண்பித்தார்கள். அதை பார்த்தவுடன் சேரன் எமோஷனாக கண்கலங்கி விட்டார். பின் சேரன், எதற்காக என் பெயரை வைத்தாய்? அப்பா, அம்மா, பல்லவன் பெயரை வைத்திருக்கலாம் என்றார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு பாண்டியன், எங்களை சின்ன வயதில் இருந்து வளர்த்தது நீங்கள் தான். நாங்கள் இப்படி இருப்பதற்கு காரணம் நீங்கள் தான் என்றார். வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து வானதி வந்தார். கடைக்கு தன் அண்ணன் பெயரை வைத்திருப்பதை பார்த்து கோபப்பட்டார். பின் அதை வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் வானதி அமைதியாகவே இருந்தார். அதற்குப்பின் சந்தா, அனீஸ் இருவரும் கடைக்கு வருகிறார்கள். சந்தாவை பார்த்து சேரன் ரொம்பவே வெட்கப்பட்டார்.

https://www.youtube.com/watch?v=SJguNbt6OrI

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சோழன், கண்டிப்பாக விவாகரத்து வாங்கணுமா? என்று கேட்கிறார். நிலா, கண்டிப்பாக எனக்கு விவாகரத்து வேண்டும். உங்களுடன்
சேர்ந்து வாழ சொல்கிறீர்களா? என்கிறார். அதற்குப் பிறகு கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடக்கிறது. நீதிபதி, இந்த விவாகரத்திற்கு உங்களுக்கு சம்மதமா? என்று கேட்கிறார். நிலா பேச வருவதற்குள் சோழன் சம்மதம் என்று சொல்லி விடுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full