விவாகரத்து வழக்கு : நிலாவின் மனம் மாற்றத்திற்கு காரணம் என்ன? அதிர்ச்சியில் சோழன் - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன் சோகமாக இருப்பதால் நிலா-சோழன் இருவரும் சேர்ந்து வானதியிடம் பேச போனார்கள். சோழன் கேட்கும் கேள்விக்கெல்லாம் வானதி நக்கல் ஆகவே பதில் அளித்தார். நிலா, இப்பதானே காலேஜ் படிக்கிறாய். கல்யாணத்தைப் பற்றி பிறகு யோசிக்கலாம் என்றார். வானதி முகத்தில் அடித்தது போல நிலாவை பார்த்து, நீங்களும் காலேஜ் முடித்தவுடன் தானே கல்யாணம் செய்து கொண்டீர்கள் என்று கேட்டார். அதோடு நிலாவை ரொம்பவே அவமரியாதையாக பேசி என் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று வானதி சொல்லிவிட்டார்.
இதனால் சோழனுக்கு கோபம் வந்து வானதியை திட்டினார். பதிலுக்கு பதில் இருவரும் பேசிக் கொண்டார்கள். அதற்குப்பின் நிலா, நான் தான் தெரியாமல் இவர்கள் விஷயத்தில் தலையிட்டேன். சாரி என்று சொல்ல, சோழன் ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் பாண்டியனை சந்தித்த வானதி, நீ உன் குடும்பத்தை அனுப்பி என்னிடம் பேச வைத்து கல்யாணத்தை நிறுத்த பார்க்கிறாயா? நிலா-சோழன் இருவரும் பேசியதை எல்லாம் நக்கலாக பேசி வானதி வம்பு இழுத்தார். பாண்டியனுமே பதிலுக்கு வானதியை திட்டி அங்கிருந்து அனுப்பி விட்டார்.
அய்யனார் துணை:
இன்றைய எபிசோட்டில் சேரன், சந்தவுடன் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வந்த பாண்டியன், வானதியிடம் எதற்காக பொய் பேசினீர்கள்? என்று கேட்டார். சோழன், நீ ரொம்ப சோகத்தில் இருந்தாய். அதனால் தான் நானும் நிலவும் பேச போனோம் என்றார். பாண்டியன், நான் தான் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொன்னேன் தானே, அதற்குப் பிறகும் எதற்காக பேசினீர்கள்? என்று சொல்லி வாக்குவாதம் அதிகம் ஆகிறது. ஒரு கட்டத்தில் பாண்டியன், சோழனை அடிக்கிறார். பின் இருவருமே பயங்கரமாக அடித்து சண்டை போட்டுக் கொண்டார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது அங்கு வந்து நிலா, சண்டையை நிறுத்தி உங்கள் விஷயத்தில் தலையிட்டது தவறுதான் என்று பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து சோழனை அழைத்துச் சென்றார். சிறிது நேரம் கழித்து பாண்டியன், நிலாவிடம் மன்னிப்பு கேட்டார். நிலா அமைதியாக இருந்தார். அப்போது நடேசன், உங்கள் எல்லோருக்கும் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறேன். யாரும் எங்கும் போகக்கூடாது. வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லி விட்டு சென்றார். ஒரு இடத்தில், நடேசன் ஒரு டெம்போ வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அதை பார்த்து சோழன், பாண்டியன், சேரன், நிலா எல்லோருமே சாக் ஆனார்கள்.
https://www.youtube.com/watch?v=owfgsHsMlMM
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோர்ட்டில் சேரன், நீயும் சோழனும் சேர்ந்து வாழணும் என்று கேட்கிறார். நிலா, நான் விவாகரத்து செய்ய மாட்டேன் என்று சொல்கிறார். பின் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடக்கிறது. நிலா, எங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்று சொல்லிவிடுகிறார். அதைக் கேட்டு சோழனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.