சோழனுக்காக மன்னிப்பு கேட்டு கெஞ்சும் சேரன், நிலா எடுத்த அதிரடி முடிவு - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் கோவிலில் திருமண தேதி எல்லாம் படித்தார்கள். ஆனால், பாண்டியன் உடனான நினைவுகளை நினைத்துக் கொண்டு வானதி வருத்தப்பட்டார். அதற்குப்பின் நிலா, பஸ் ஸ்டாண்டிற்கு சென்றவுடன் பல்லவனை அனுப்பி வைத்தார். இன்னொரு பக்கம் வீட்டில் சேரன், நடேசன் எல்லோருமே சோழனை திட்டிக் கொண்டிருந்தார்கள். இதனால் மணமுடைந்த சோழன் அங்கிருந்து கிளம்பி விட்டார். நிலா, பஸ் ஏறாமல் கோயிலில் உட்கார்ந்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.
நிலா, தன்னுடைய தோழிக்கு போன் செய்து கோவிலுக்கு வர சொன்னார். இன்னொரு பக்கம் வானதி, திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று திட்டம் போட்டார். பின் மாப்பிள்ளை பற்றி எல்லாம் விசாரித்தீர்களா? வேறு ஏதாவது மாப்பிள்ளை பார்க்கலாமா? என்றெல்லாம் வானதி சொன்னார். இதனால் வானதியின் பெற்றோர்கள் கோபப்பட்டு சண்டை போட்டார்கள். வானதி வேறு வழி இல்லாமல் அமைதியாக விட்டார்.
அய்யனார் துணை:
பின் ரூமுக்குள் சென்ற வானதி, பாண்டியனை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் சோழன் சென்ற கார் விபத்து ஏற்பட்டதாக சேரனுக்கு போன் வருகிறது. இதை சேரன் குடும்பத்தில் எல்லோருமே ஹாஸ்பிடலுக்கு போனார்கள். இன்னொரு பக்கம் நிலா, தன்னுடைய தோழியிடம் தனக்கு திருமணமான கதை எல்லாத்தையும் சொல்லிக் கொண்டு கிளம்பி கொண்டிருந்தார். அப்போது பல்லவன், சோழனுக்கு நடந்த விஷயத்தை பற்றி சொன்னார். நிலாவும் பதறி அடித்து கொண்டு கிளம்பினார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு வருகிறார். சோழன் தலையில் கை, காலில் எல்லாம் அடிப்பட்டு இருக்கிறது. அதை பார்த்து நிலாவிற்கு ரொம்பவே கஷ்டமாகிறது. சோழன் ரொம்ப எமோஷனாக அழுது கொண்டிருக்கிறார். நிலா, ஒன்னும் இல்லை. நீங்கள் தைரியமாக
இருங்கள் ஒன்றும் ஆகாது என்று சொல்கிறார். அதற்குப்பின் சேரன், பாண்டியன் இருவரும் சோழனுடைய காதலை சொல்லி புரிய வைக்கிறார்கள். அதோடு சோழன் செய்த தவறுக்காக மன்னிப்பும் கேட்டார்கள். நிலா, எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார். அதற்கு பின் தன் தோழியிடம் நிலா, என்ன செய்வது என்று புரியவில்லை என்கிறார்.
சீரியல் ட்ராக்:
நிலாவின் தோழி, எதுவாக இருந்தாலும் நிதானமாக பொறுமையாக யோசி என்று சொல்கிறார். அதற்கு பின் நிலா, உங்களுக்கு ஆறு மாதம் ஆகாசம் கொடுக்கிறேன். அதற்குப்பின் செட் ஆகவில்லை என்றால் நான் சென்று விடுவேன் என்று சொல்கிறார். சோழன் சந்தோஷத்தில் எழுந்து நின்று துள்ளி குதிக்கிறார். அதை பார்த்து நிலாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. சேரன்- பாண்டியன் குழம்பி நிற்கிறார்கள். சோழனின் ஓனர் அமைதியாக படு என்று சொல்கிறார். சோழனுமே அடிபட்டது போல் மீண்டும் நடிக்கிறார்