எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நிலா-சோழன் திருமணம் - வெளிவந்த அய்யனார் துணை ப்ரோமோ

நிலா-சோழன் திருமணம்

By subhashini · 5/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் மனோகர்,எப்படியாவது நிலாவை இங்கிருந்து அழைத்து சென்றுவிடனும். வலுக்கட்டாயப்படுத்தியது நிலாவை நம்முடன் சென்றுவிடலாம் என்று தன்னுடைய மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதை கேட்ட நிலா பயந்து போய் சோழனுக்கு தகவலை சொல்லி விட்டார். பின் சோழன், தன்னுடைய சகோதரர்களை அழைத்துக் கொண்டு நிலாவின் வீட்டிற்கு வெளியே வந்திருந்தார். மனோகர், சோழன் ஏதாவது திட்டம் போடுவாரா? என்று பயத்தில் வீடு முழுக்க செக் பண்ணுகிறார். அதோடு வீட்டையும் பூட்டி சாவியை வைத்துக் கொண்டார். பின் தன் தந்தை தூங்கிய பிறகு நிலா யாருக்கும் தெரியாமல் சோழனுடன் அய்யனார் வீட்டிற்கு வந்து விட்டார்.

மறுநாள் காலையில் மனோகர், நிலாவை காணவில்லை என்று வீடு முழக்க தேடினார். பின் சோழன் வீட்டிற்கு சென்றிருப்பார் என்று கிளம்பி வந்தார். அங்கு நிலா இருப்பதை கவனித்த மனோகர் பயங்கரமாக கோபப்பட்டார். நிலா, நான் இங்கு தான் இருப்பேன். திருவண்ணாமலை நான் உங்களுடன் வரவில்லை என்றார். மனோகர், உனக்கும் சோழனுக்கும் என்ன உறவு? விவாகரத்து ஆன பிறகு இங்கு இருக்க முடியாது? என்று சண்டை போட்டார். பின் இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. ஒரு கட்டத்தில் நிலா, நான் சோழனை திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். சோழன் ரொம்பவே சந்தோஷப்படுகிறார். மனோகரால் எதுவும் பேச முடியாமல் வாய் அடைத்துப் போனார்.

அய்யனார் துணை:

இன்றைய எபிசோட்டில் நிலா, சோழனை திருமணம் செய்து கொள்வதற்கு ஒத்துக்கொண்டதால் அய்யனார் வீட்டில் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், மனோகர் அவருடைய மனைவி இருவரும் கோபப்படுகிறார்கள். நிலாவின் பெற்றோர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார்கள். ஆனால் நிலா கேட்கவே இல்லை. சோழனை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருக்கிறார். நிலா சொன்னதை கேட்டு சோழன் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறார். பின் நிலா விடமும் எமோஷனலாக சோழன் பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் நிலா-சோழன் திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்கிறார்கள். அப்போது நிலாவிற்கு போன் செய்த மனோகர், திருமணத்திற்கு புடவை நகையெல்லாம் வாங்க வேண்டும் என்று கிளம்பி வர சொல்கிறார். நிலாவும் சேரனிடம் இதைப் பற்றி சொல்கிறார். சேரன், மனோகர் வீட்டிற்கு சென்று விசாரிக்கிறார். அப்போது நிலாவின் அம்மா திருமணத்தில் விருப்பம் இல்லாதது போல பேசுகிறார். மனோகர், எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பது போலவே பேசுகிறார். சேரன், அவர்கள் இருவரையும் தயவு செய்து சேர்த்து வையுங்கள். நிலாவை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றெல்லாம் பேசுகிறார்.

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்த நிலா சோழனின் திருமணம் கோவிலில் சிறப்பாக நடக்கிறது. இந்த திருமணத்தில் நிலாவின் பெற்றோர்களும் உறவினர்களும், சோழன் குடும்பத்தார்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திருந்தார்கள். சந்தோஷமாக சோழன்-நிலா திருமணம் நடந்து முடிந்திருக்கிறது

behindtalkies AMP · Quick view
View full