உயிலை தேடி போகும் நிலா-சோழன், அய்யனார் வீட்டை மீட்டு எடுப்பார்களா? பரபரப்பில் அய்யனார் துணை

By subhashini · 15/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நடேசன் அந்த வீட்டை விட்டு வெளியே போக மாட்டேன் என்று பிரச்சனை செய்தார். சோழன், எல்லோரும் அவர்களுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்புங்கள். இனிமேலும் இங்கு இருப்பது சரி இல்லை என்று சொன்னார். பாண்டியன், சேரன், பல்லவன் எல்லோருமே வருத்தப்பட்டு தங்களுடைய பொருள்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள். ஆனால், நடேசன் மட்டும் முடியாது என்று அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார்.

அந்த சமயம் வந்த நிலாவிடம் நடந்ததை எல்லாம் சோழன் சொன்னார். பின் நிலாவும் எவ்வளவோ பேசி பார்த்து இருந்தார். யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பின் மொத்த குடும்பமே தங்களுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள். போலீஸ் வீட்டிற்கு சீல் வைத்து விடுகிறது. கோபத்தில் நடேசன், தன்னுடைய அண்ணனுக்கு மண்ணை தூவி சாபம் விட்டு வந்தார். அதற்குப்பின் ஹோட்டலில் ரூம் எடுத்து நடேசன் குடும்பம் தங்கி கொண்டார்கள். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் மொத்த குடும்பமும் தவித்து நிற்கிறது.

அய்யனார் துணை:

சேரன் குடும்பத்தினர் என்ன செய்வது, எங்கு போவது என்று புரியாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நிலா, எங்கு போய் தங்குவது? என்று யோசிக்காமல் அந்த வீட்டை நம்முடையது எப்படி ஆக்குவது என்று யோசியுங்கள். அந்த வீட்டிற்க்கான பத்திரம் இருக்கிறதா? யாருடைய பெயரில் இருக்கிறது என்றெல்லாம் கேட்டார். சோழன், எல்லாமே அந்த ஆளுக்கு தான் தெரியும். அவரிடம் கேளுங்கள் என்றார். அதற்குப்பின் வானதி, பாண்டியனுக்கு போன் செய்து நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

சீரியல் ட்ராக்:

வானதி- பாண்டியன் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த சோழனுக்கு கடுப்பாகி திட்டி விட்டார்.
அதற்குப்பின் நிலா, இந்த வீடு யார் பெயரில் இருக்கிறது? அதற்கான பத்திரம் யாரிடம் இருக்கு தெரியுமா? என்றெல்லாம் கேட்டார். நடேசன், எனக்கு தெரியாது என்றார். கோபத்தில் நிலா, நடேசனை திட்டி விட்டு நல்ல தகப்பனாக இந்த வீட்டை உங்கள் மகன்களுக்கு கொடுக்கா ஏற்பாடு செய்யுங்கள் என்றார். அதற்கு பின் வானதி, பாண்டியனை பார்க்க வந்து விட்டார். அதைப் பார்த்து சோழனுக்கு கடுப்பாகிறது. நிலா எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டார்.

https://www.youtube.com/watch?v=owJdSGpN6is

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நிலா, எப்படி ஆவது அந்த வீட்டு பத்திரத்தை எடுக்கணும். அப்பதான் அந்த வீடு நமக்கு சொந்தமாகும் என்று சொல்கிறார். பின் சோழன்- நிலா இருவருமே வீட்டு பத்திரத்தை எடுக்க அய்யனார் வீட்டிற்கு போகிறார்கள். ஓட்டை பிரித்து சோழன் உள்ளே இறங்குகிறார். நிலா யாராவது வருவார்களா? என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து நடேசனின் அண்ணா அந்த வீட்டிற்கு வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full