சேரன் திருமணத்திற்காக வீட்டையே மற்றும் நிலா, கோபத்தில் வானதி - விறுவிறுப்பில் அய்யனார் துணை

By subhashini · 12/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, எதற்காக என்னை பஸ் ஸ்டாண்டிற்கு வர சொல்லி கட்டாயப் படுத்துகிறீர்கள் என்று கேட்டார். அங்கு தான் என்னுடைய காயத்ரி இருக்கிறார் என்று சோழன் சொன்னார். இதனால் கோபப்பட்ட நிலா ஸ்கூட்டி எடுத்துக் கொண்டு போனார். ஆனால், வழியிலேயே நிலா வண்டி நின்றது. பின் சோழன், நிலாவின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பாண்டியன் கடைக்கு சென்றார். அங்கு வானதி இருந்தார். அப்போது பாண்டியன் , சேரன் நிச்சயதார்த்தத்தை பற்றி சொன்னார். அப்போது சோழன்- நிலா, அவசரமாக ஏன் நடத்துகிறார்கள்? புரியவில்லை என்றார்கள். அதற்கு வானதி, அவருக்கு கல்யாணம் நடந்தால் நல்லது தானே என்று சுயநலமாக பேசி இருந்தார்.

வானதி, கல்யாணமே ஆகாமல் இருப்பதற்கு கல்யாணம் ஆன பின் வரும் பிரச்சனைகளை பார்த்துக் கொள்ளலாமே என்றெல்லாம் சொன்னார். இதை கேட்டு பாண்டியனுக்கு கோபம் வந்தது. எங்கள் அண்ணனுக்கு கல்யாணம் முக்கியம் தான். அதுக்காக அவருக்கு ஏனோ தானோ என்று கல்யாணத்தை செய்து வைக்க முடியாது என்று சொல்வதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி வானதி சண்டை போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் சோழன், தரகரிடம் ஜெயந்தி போன் நம்பரை வாங்கி சேரன் இடம் கொடுத்து பேச சொன்னார்.

அய்யனார் துணை:

அதற்குப்பின் ஜெயந்தியை ஒரு கடைக்கு வர சொன்னார் சோழன். பின் அந்த இடத்திற்கு சோழன் - நிலா இருவருமே சென்றார்கள். அப்போது நிலா, திருமணம் சீக்கிரமாக நடப்பதை பற்றி விசாரித்தார். ஜெயந்தி, தன்னுடைய முன்னாள் கணவரை வெறுப்பேற்றுவதற்காக தான் திருமணம் செய்கிறேன் என்று எல்லா விஷயத்தையும் சொன்னார். இதைக் கேட்டு சோழன்- நிலாவிற்கு ஷாக்காக இருந்தது. இன்னொரு பக்கம் வானதி- பாண்டியன் இருவருமே சண்டை போட்டவதை நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வானதி போன் செய்து சண்டை வாங்குகிறார். பாண்டியன், நீ ரொம்ப சுயநலவாதி. உனக்கு மட்டும் கல்யாணம் நடந்தால் போதுமா? என் அண்ணனின் வாழ்க்கை பார்க்க வேண்டாமா? என்றெல்லாம் கேட்கிறார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி சண்டையில் முடிகிறது. இதையெல்லாம் பார்த்து வானதி அண்ணன் வசந்த் சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் சேரன் திருமணம் நடக்க இருப்பதால் வீட்டிற்கு தேவையான பொருள்களை எல்லாம் நிலா-சோழன் வாங்குகிறார்கள். அப்போது ஒரு பெண், சோழனிடம் பேசுகிறாள்.

சீரியல் ட்ராக்:

இதை பார்த்து நிலா கோபப்பட்டு சோழனை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு நிலா-சோழன் இருவரும் வந்து விடுகிறார்கள். பின் தாங்கள் வாங்கிய பொருள்களை எல்லாம் சுத்தம் செய்து அடுக்கி வைக்கிறார்கள். இதை பார்த்து சேரனுக்கு சந்தோசமாக இருக்கிறது. அதற்குப்பின் மீண்டும் வானதி, பாண்டியனுக்கு போன் செய்து சண்டை வாங்கினார். கோபத்தில் பாண்டியன், இனிமேல் எனக்கு போனை செய்து விடாதே என்று திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full