லைசன்ஸ் வாங்க எட்டு போட சுதப்பிய நிலா, பொது இடத்தில் கத்திய சோழன் - அய்யனார் துணை

By subhashini · 23/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, நீங்கள் இவ்வளவு ஏமாற்றுக்காரர் என்று தெரியாது. இப்படியா பொய் சொல்லி ஏமாற்றுவீர்கள். நான் ஆதார் கார்டுகாக அலைந்து கொண்டிருக்கும்போது நீங்கள் ஒன்னும் தெரியாதவர் போல நடித்தீர்கள். திருமணத்தை வேண்டுமென்றே எனக்கு தெரியாமல் ரிஜிஸ்டர் பண்ணி இருக்கிறீர்கள். நீங்கள் இவ்வளவு மோசமானவரா? என்று கொந்தளித்தார். இதைக்கேட்டு சோழன் எதுவும் பேச முடியாமல் வாய் அடைத்துப் போனார்.

நிலா, உங்கள மாதிரி ஒரு ஏமாற்றுக்காரனை என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்று திட்டி விட்டு அங்கிருந்து கிளம்பினார். பின் இருவருமே வீட்டிற்கு வந்தார்கள். சோழன் சோகத்தில் இருப்பதை வீட்டில் உள்ள எல்லாருமே புரிந்து கொண்டார்கள். பின் நிலா, என்னால் வீட்டில் யாரும் கஷ்டப்படக்கூடாது என்று சோழனிடம் பேசி இருந்தார். அதற்குப்பின் நிலாவிற்கு லைசன்ஸ் எடுத்து தருவதை பற்றி பல்லவன், சேரன் இருவருமே சோழனிடம் சொன்னார்கள். சோழன், நிலா தன்னை விட்டு பிரியக்கூடாது என்பதற்காக ஆதார் கார்டில் நிலாவின் கணவர் சோழன் என்று மாற்றி கொடுத்து விட்டார்.

அய்யனார் துணை:

அதற்கு பின் ஆதார் கார்டு கிடைத்ததை நினைத்து நிலா சந்தோஷப்பட்டார் ஆனால், நிலா சோழன் என்பதை பார்த்து கோபப்பட்டார். உடனே சோழன், ப்ரூப்காக தான் கொடுத்தேன். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்றெல்லாம் சமாளித்தார். நிலா, முறைத்து விட்டு அங்கிருந்து சென்றார். அதற்குப்பின் பல்லவனிடம் சோழன், நிலா ஆதார் கார்டில் என்னுடைய பெயரை தூக்க ரொம்ப கஷ்டப்படணும். அதற்கு பதில் என்னுடன் வாழ்ந்து விடலாம் என்று தோன்றும். அதற்கு பல்லவன், சோழன் செய்த பிராடு வேலையை சொல்லி திட்டினார். அதன் பின் சோழன்-நிலா இருவரும் லைசன்ஸ் அப்பிளை செய்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா ஆஃபீஸ்க்கு போகிறார். அங்கு நிலாவின் பிறந்தநாளுக்காக ராகவ், கேக் வெட்டி கொண்டாடுகிறார். அதோடு எல்லோருக்குமே பிரியாணி வாங்கி தருவதாக சொல்கிறார். நிலா வேண்டாம் என்று தடுத்துமே ராகவ் கேட்கவில்லை. இதை பார்த்து அங்கு வேலை செய்பவர், இதுவரை யாருக்குமே ராகவ் இப்படி செய்யவில்லை. நிலா ஸ்பெஷல் என்று சொல்கிறார். ஆனால், நிலா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் வானதி, பாண்டியனை மறக்க சொல்லி அவருடைய பெற்றோர்கள் திட்டுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அதற்கு வானதி, என்னால் முடியாது என்று சண்டை போடுகிறார். இன்னொரு பக்கம் சோழன், லைசன்ஸ் வாங்குவதற்காக நிலாவை rto ஆபிஸ் போகிறார்கள். அங்கு நிலாவை வண்டி ஓட்ட சொல்லிகிறார்கள். ஆனால், நிலா பயத்தில் தடுமாறி ஓட்டுகிறார். இதனால் நிலா லைசன்ஸை ரிஜெக்ட் செய்கிறார்கள். இருந்தாலுமே விடாமல் சோழன் கெஞ்சி கேட்டு இன்னொரு வாய்ப்பு வாங்கி தருகிறார். இருந்தாலும் நிலா பயத்தில் இருக்கிறார். உடனே சோழன், நிலாவிற்கு வேகம் வரணும் என்று திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full