சோழனுக்கு ஆறுதல் சொல்லும் நிலா, சேரன் எங்கு இருக்கார் தெரியுமா? விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரனுடைய ஜாதகத்தை பார்த்த ஜோதிடர், இந்த ஜாதகத்துக்காரருக்கு பெண் தோஷம் இருக்கிறது. இவருக்கு திருமணமே ஆகாது. இவர் இருக்கும் வீட்டில் யாருக்குமே திருமணம் ஆகாது. அப்படியே திருமணமாகி வந்தாலும் அந்த பெண் நிலைத்து நிற்க மாட்டார். இவரால் இந்த குடும்பத்தில் எந்த ஒரு நல்ல காரியமே நடக்காது என்றெல்லாம் சொன்னார். இதை கேட்டு சேரன் உடைந்து போனார். சோழனால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். பெண் வீட்டார் உடனே அங்கிருந்து சென்று விட்டார்கள்.
வேதனையில் சேரன் எதுவுமே பேச முடியவில்லை அமைதியாக இருந்தார். அப்போது சோழன், நான்தான் ஜாதகம் எழுதிட்டு வந்தேன். அது பொய்யான ஜாதகம். அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று தன்னுடைய அண்ணனை சமாதானம் செய்ய பார்த்தார். ஆனால், சோழன் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே சேரனை சமாதானம் செய்யப் பார்த்தார்கள். ஆனால், சேரன் கேட்கவே இல்லை இடிந்து போய் உட்கார்ந்தார்.
அய்யனார் துணை:
இன்றைய எபிசோட்டில் சேரன் தூங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது வீட்டில் உள்ள எல்லோருமே சேரனை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு பேசுகிறார்கள். ஆனால், சேரன் தூங்கவில்லை. அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார். அதற்குப்பின் சேரன், தன் தம்பிகள் தூங்கியவுடன் எமோஷனலாக ரொம்ப கதறி அழுகிறார். மறுநாள் காலையில் வீட்டில் சேரன் இல்லை. வீடு முழுக்க சேரனை எல்லோருமே தேடுகிறார்கள். அப்போது பல்லவன், சேரன் எழுதி வைத்த கடிதத்தை கொடுக்கிறார்.
இன்றைய எபிசோட்:
அதில் சேரன், என்னால் யாருடைய வாழ்க்கையும் கெட வேண்டாம். நான் வீட்டை விட்டுப் போகிறேன். எல்லோரும் சந்தோஷமாக இருங்கள். என்னை பற்றி யாரும் கவலை பட வேண்டாம் என்று சொல்கிறார். இதைக் கேட்டு நிலா, சோழன், பாண்டியன், பல்லவன் எல்லோருமே எமோஷனலாக கதறி அழுகிறார்கள். பின் எல்லோரும் ஒவ்வொரு பக்கம் சென்று தேடுகிறார்கள். ஆனால், எங்குமே சேரன் கிடைக்கவில்லை. சேரன் வேலை செய்யும் இடத்தில் எல்லாம் சென்று விசாரிக்கிறார்கள். அங்கேயுமே அவர் இல்லை. இத்துடன் சீரியல் முடிகிறது
https://youtu.be/N9VyA2tvJwE?si=NMMJ8OYhZCs0FfuD
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சேரன் கிடைக்கவில்லை என்று நிலா- சோழன் இருவருமே போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறார்கள். புகார் கொடுத்துவிட்டு வந்த சோழன், ரொம்பவே மனமுடைந்து அழுகிறார். உடனே நிலா அவருக்கு ஆறுதல் சொல்கிறார். அதற்குப்பின் சேரன் தன்னுடன் வேலை செய்யும் நண்பனின் வீட்டில் தங்கி இருக்கிறார். அப்போது சேரன், சந்தாவிடம் தன்னுடைய தம்பிகள் நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார். அந்த இடத்திற்கு சோழன் வந்து விடுகிறார்.