நிலா செய்த வேலையால் பயத்தில் புலம்பி தவிக்கும் சோழன், காயத்ரி என்ன செய்ய போகிறார்? அய்யனார் துணை

By subhashini · 5/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நான் என்ன தவறு செய்தேன். இது பொய்யான திருமணம் தானே. விவாகரத்து வாங்கிக் கொண்டு நிலா சென்று விடுவார். இந்த கல்யாணத்தை அவர் ஏற்றுக் கொள்ளவே இல்லை. நான் ஒரு பெண்ணுடன் பேசியதில் என்ன தவறு. நான் அந்த பெண்ணை காதலிக்கவில்லை. தோழியாக தான் நான் பழகினேன் என்றெல்லாம் சொன்னார். நிலா, நீங்கள் சொல்வது உண்மைதான். இது போலியான கல்யாணம் தான். நீங்கள் காயத்திரி உடன் பேசுங்கள், பழகுங்கள், அவளை காதலியுங்கள். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்வதால் சோழன் ஷாக் ஆகி நின்றார்.

நிலா, நமக்கு சீக்கிரமாகவே விவாகரத்து கிடைக்க போகிறது. நீங்கள் காயத்ரியை கல்யாணம் செய்து கொள்ளுங்கள். அவள் ரொம்ப கஷ்டப்படுவாள். இந்த பிரச்சனை எல்லாம் என்னால் தானே நடக்கிறது. நானே காயத்ரியிடம் நேரில் சென்று நடந்ததை எல்லாம் எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறேன். உங்கள் இருவரையும் நானே சேர்த்து வைக்கிறேன் என்றார். பதறிப்போன சோழன், அதெல்லாம் தேவையில்லை என்றார். இருந்தாலுமே கேட்காமல் நிலா, பல்லவனை அழைத்துக் கொண்டு காயத்ரி வீட்டிற்கு போனார். பின் சோழன், நான் காயத்ரியை காதலிக்கவே இல்லை.

அய்யனார் துணை:

நிலாவை வெறுப்பேற்ற தான் இப்படி எல்லாம் செய்தேன். எப்படியாவது நிலாவிடம் சொல்லி காயத்ரியை கூப்பிட்டு வர வேண்டாம் என்று சொல்லுங்கள் என்றார். உடனே சேரன், பாண்டியன் இருவரும் நிலா சொல்வது தான் சரி. நிலா விவாகரத்து வாங்கிக் கொண்டு இந்த வீட்டை விட்டு போகட்டும் என்றெல்லாம் சொன்னார்கள். இன்னொரு பக்கம் பல்லவன், உண்மையாலுமே காயத்ரியை வீட்டிற்கு அழைத்து வரப் போகிறீர்களா? என்றார். அதற்கு நிலா, நான் பைத்தியமா? அவரை வெறுப்பேற்ற தான் இப்படி எல்லாம் சொன்னேன் என்றார். கடைசியில் சோழன், தயவுசெய்து நிலாவிடம் எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள் என்றெல்லாம் கெஞ்சி கதறினார். இருந்தாலும் சேரன் கேட்கவில்லை.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரன், பாண்டியன், நடேசன் மூவருமே மும்முரமாக வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். சோழன் ரொம்பவே பயந்து கொண்டு புலம்புகிறார். தன்னுடைய அண்ணனிடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், சேரன் கேட்கவே இல்லை. இன்னொரு பக்கம் காயத்ரியின் வீட்டிற்கு பல்லவன், நிலா இருவரும் சென்று விடுகிறார்கள். அப்போது காயத்ரியின் நண்பர்கள், காயத்ரி கதவை சாத்திக்கொண்டு வெளிய வரவில்லை அழுது கொண்டே இருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். நிலா கதவு தட்டியுமே காயத்ரி வரவே இல்லை.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் சோழன், நான் நிலாவை வெறுப்பேற்ற தான் இப்படி எல்லாம் செய்தேன். தயவுசெய்து இதையெல்லாம் நிறுத்துங்கள். இதெல்லாம் நாடகம் தானே என்றெல்லாம் கேட்கிறார். பின் பலவனுக்கு போன் செய்து சோழன் விசாரிக்கிறார். நிலா, காயத்ரி வீட்டில் இருப்பது தெரிந்தவுடன் இன்னும் சோழனுக்கு கதி கலங்குகிறது. பின் கதவை திறந்த காயத்ரி எமோஷனலாக அழுது கொண்டிருக்கிறார். நிலா அவருக்கு ஆறுதல் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full