பல்லவன் அம்மாவின் செய்கையால் சந்தேகப்படும் நிலா, அடுத்து என்ன? விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பல்லவன் அம்மா, டீ கொடுத்தும் வாங்கிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே போ என்று நடேசன் திட்டி இருந்தார். உடனே நிலா, தடுத்து நிறுத்தி பல்லவன் அம்மாவை அழைத்து சென்றார். சோழன், சேரன், பல்லவன் எல்லோருமே நடேசன் மீது கோபப்பட்டார்கள். இருந்தாலும் பல்லவன் அம்மா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் எல்லோருமே கிளம்பி வேலைக்கு சென்றார்கள். நடேசன் இதுதான் சந்தர்ப்பம் என்று பல்லவன் அம்மாவை திட்டி வெளியே போக சொன்னார்.
நடேசன், என்ன திட்டத்தில் வந்திருக்கிறாய்? ஒழுங்கு மரியாதையாக வீட்டை விட்டு வெளியே போ என்றெல்லாம் சொன்னார். அதற்கு பல்லவன் அம்மா, நீ எத்தனை நாட்களுக்கு இப்படி இருக்கப் போகிறாய் என்று நானும் பார்க்கிறேன். நான் எங்கும் போக மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு உள்ளே சென்று விட்டார். அதற்குப்பின் பல்லவன் அம்மாவின் கணவர் போன் செய்து நீ நிம்மதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாய். கடன் கொடுத்தவர்கள் வீட்டில் பிரச்சனை செய்தார்கள். பணத்திற்கு ஏற்பாடு செய் என்றார்.
அய்யனார் துணை:
அதற்கு பல்லவனின் அம்மா, நான் எப்படியாவது பணத்தை ஏற்பாடு செய்து விட்டு வந்து விடுகிறேன். அமைதியாக இரு என்று சொல்லிவிட்டு வீடு முழுவதும் பணம் இருக்கிறதா? என்று சோதனை செய்தார். இன்னொரு பக்கம் சேரன், பாண்டியன் புதுக்கடைக்காக தான் வேலை செய்யும் இடத்தில் பணம் கேட்டார்கள். அவர்களுமே தருவதாக ஒத்துக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் சோழனும் தன்னுடைய ஓனரிடம் பாண்டியனின் கடைக்காக பணம் கேட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு சீக்கிரமாகவே வந்த பல்லவன் தன் அம்மாவிடம் எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார். பல்லவனின் அம்மாவும் நல்லவர் போலவே வேஷம் போட்டுக் கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் பல்லவனின் அம்மா எல்லா வேலைகளையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து வீட்டில் எல்லோருமே ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். பின் எல்லோரும் தூங்கிவிட்டதாக நினைத்து பல்லவன் அம்மா, தன்னுடைய கணவரிடம் போன் பேசப் போகிறார். அவர், பணத்தை எடுத்து விட்டாயா? சீக்கிரமாக வந்த வேலையை செய்து முடி என்றெல்லாம் சொல்கிறார். அதற்கு பல்லவன் அம்மா பதில் கொடுத்திருக்கிறார். இதையெல்லாம் ஓரமாக நின்று நிலா கவனிக்கிறார். பின் யாரிடம் போன் பேசினீர்கள் என்று நிலா விசாரிக்கிறார். பல்லவனின் அம்மா ஏதேதோ சொல்லி சமாளித்துவிட்டு அங்கிருந்து செல்கிறார்.
சீரியல் ட்ராக்:
மறுநாள் காலையில் பல்லவன் அம்மா மீண்டும் போன் பேசுவதை நிலா கவனிக்கிறார். உடனே பல்லவன் அம்மா சமாளிக்கிறார். பின் பல்லவனின் அம்மாவை பற்றி சோழன் சொன்னதை வைத்து நிலா நினைத்து பார்க்கிறார். பின் நிலா, நீங்கள் யாருடன் இருந்தீர்கள்? இவ்வளவு நாட்கள் எங்கிருந்தீர்கள்? என்றெல்லாம் விசாரிக்கிறார். ஆனால் பல்லவனின் அம்மா பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் நிலாவிற்கு சந்தேகம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது