குடித்து விட்டு நிலாவிடம் மோசமாக பேசும் சோழன், சேரன் என்ன செய்ய போகிறார்? அய்யனார் துணை

By subhashini · 24/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பல்லவன், தனக்கு தெரிந்தவாறு ஸ்கூட்டி ஓட்ட கற்று தந்தார். இன்னொரு பக்கம் நிலாவிற்காக சோழன் வீட்டில் காத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த சோழன் அப்பா, சீக்கிரமாகவே உன்னை அவள் அண்ணன் கூப்பிட போறாள். நீ உன் மனைவியுடன் சேர்ந்து வாழும் வழியை பாரு என்றெல்லாம் அறிவுரை செய்தார். இதனால் கோபப்பட்ட சோழன் தன் தந்தையை திட்டிவிட்டு நிலா ஸ்கூட்டி ஓட்ட ப்ராக்டிஸ் செய்யும் இடத்திற்கு சென்று விட்டார்.

நிலாவிற்கு சோழன் ஸ்கூட்டி ஓட்ட சொல்லிக் கொடுத்தார். அப்போது தன் அப்பா சொன்ன வார்த்தைகள் எல்லாம் நினைத்து பார்த்து கோபத்தில் சோழன் வண்டியை வேகமாக முறுக்கி விட்டார். இதனால் நிலா தடுமாறி கீழே விழுந்தார். உடனே பல்லவன், நானே வண்டி ஓட்டக் கற்றுத் தருகிறேன் என்றார். அதற்குப்பின் பல்லவன் சொல்லித் தந்த மாதிரி நிலா வண்டியை ஓட்டினார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள்.

அய்யனார் துணை:

அதற்கு பின் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் சந்தா வீட்டிற்கு வந்தார். சந்தாவை பார்த்தவுடன் வீட்டில் வீட்டில் உள்ள எல்லோருமே நன்றாக பேசினார்கள். அப்போது சந்தா, தமிழ் கற்றுத் தருமாறு பல்லவனிடம் கேட்டார். பல்லவன் தன்னுடைய அப்பாவை வெறுப்பேத்த தப்பு தப்பாக தமிழ் வார்த்தைகளை சொல்லித் தந்தார். அதையெல்லாம் நடேசனிடம் போய் சந்தா பேசினார். கோபத்தில் நடேசன் சந்தாவை திட்டினார். பின் பாண்டியன், சேரனிடம் சொன்னார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் நிலா வண்டி ஓட்டுவதை பார்த்து சோழன் மீண்டும் கிண்டல் அடித்து பேசினார். இதனால் கோபப்பட்ட நிலா, சோழனை திட்டி அனுப்பி விட்டார். அதற்குப்பின் வீட்டில் நிலா, சேரன், பாண்டியன், பல்லவன் எல்லோருமே பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள். இதை பார்த்த நடேசன், உன்னை அவள் மதிப்பதே கிடையாது. நீ அவன் புருஷன் தானே சீக்கிரமாக முதல் ஒழுங்கு மரியாதையாக அதன் படி நடந்து கொள். நீ தான் அவள் புருஷன் என்று அவளுக்கு புரியவை இல்லையென்றால் வாயை மூடிட்டு இரு என்றெல்லாம் தேவையில்லாமல் சோழனை உசுபேத்தி விட்டார்.

சீரியல் ட்ராக்:

இதனால் கோபத்தில் சோழன் குடிக்கப் போனார். அந்த இடத்திற்கு சோழனின் ஓனருமே குடித்துக்கொண்டிருந்தார். அப்போது சோழன், தன்னுடைய திருமணத்தை பற்றியும் நிலா தன்னிடம் நடந்து கொள்ளும் விதத்தை பற்றியும் சொல்லி புலம்பினார். உடனே அந்த ஓனர், நீ அவள் உன் புருஷன் தானே. நீ உரிமையாக பழகு. அப்போதுதான் அவள் உன்னிடம் நெருங்கி பழகப் பார்ப்பாள். நீ விலகி போனால் அவளும் விலகி போவாள் என்றெல்லாம் தேவையில்லாத ஐடியா கொடுத்தார்.

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சோழன் நன்றாக குடித்துவிட்டு ரூமிற்கு வருகிறார். அதை பார்த்து நிலா பயப்படுகிறார். பின் சோழன், கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு நிலா பக்கத்திலேயே படுக்க போகிறார். நிலாவுக்கு சோழன் குடித்திருப்பது தெரிகிறது. அப்போது சோழன், நான் உன் புருஷன் தானே நீ என் மனைவி. நான் உன் பக்கத்தில் தான் படுப்பேன் என்று அடாவடித்தனமாக பேசுகிறார். இதனால் பயத்தில் நிலா, சேரன் அண்ணா என்று கத்துகிறார். இனி அடுத்து என்ன என்று விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

behindtalkies AMP · Quick view
View full