ராகவ் சொன்ன வார்த்தையால் கொந்தளித்த நிலா, பாண்டியன்-சோழனின் சண்டை - அய்யனார் துணை

By subhashini · 7/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன் வேலை செய்யும் இடத்தில் இன்ஜினியர், டிசைன் போடுபவரை சந்திக்க வேண்டும் என்று ஹோட்டலுக்கு அழைத்து வந்தார். ஆனால், அங்கு இருப்பது ராகவ் தான். பின் ராகவ், சேரன் இருவரும் நன்றாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராகவ், நிலா-சோழன் திருமண விஷயத்தைப் பற்றி கேட்டார். சேரனும் உண்மை அறியாமல் நடந்த எல்லாவற்றையும் சொல்லி விட்டார். இது ராகவிற்க்கு ஷாக்கிங் ஆக இருக்கிறது. நிலாவிற்கு கட்டாய கல்யாணம் நடந்ததை அறிந்தவுடன் ராகவ் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டார்.

சேரன், சோழன்- நிலா இருவரும் விவாகரத்து வாங்க இருந்தார்கள். ஆனால், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் எங்களுடைய ஆசை என்று சொன்னார். இதை எல்லாம் கேட்ட ராகவிற்கு உள்ளுக்குள் சந்தோசமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் வானதியின் அப்பா- அம்மா இருவருமே பாண்டியன் பெருந்தன்மையாக நடந்து கொண்ட விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். இது எல்லாம் கேட்ட வானதி ரொம்பவே சந்தோசத்தில் துள்ளி குதித்தார்.

அய்யனார் துணை:

இன்னொரு பக்கம் சோழன், தன் ஓனரிடம் ராகவ் விஷயத்தை பற்றி சொல்லி புலம்பி கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் வேலை முடித்துவிட்டு நிலா கிளம்ப பார்த்தார். உடனே ராகவ், சின்ன வேலை இருக்கிறது காத்துக் கொண்டிருங்கள் என்றார். எல்லோரும் கிளம்பியுமே நிலாவை விடாமல் ஆபீஸ்லயே இருக்க சொன்னார். அதற்குப்பின் பாண்டியன் கடைக்கு வந்த வானதி, தன்னுடைய அப்பா- அம்மா பேசிய விஷயத்தை சொல்லி ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராகவ், உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உங்களை காதலிக்கிறேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டு கோபப்பட்ட நிலா, நான் ஏற்கனவே கல்யாணமானவள். அப்படியெல்லாம் பேசாதீர்கள் என்றார். ராகவ், உங்கள் கல்யாண கதை. எல்லாம் எனக்கு தெரியும். இப்பதான் சேரன் இடம் பேசி விட்டு வருகிறேன் என்கிறார். இதனால் நிலாவிற்கு இன்னும் கோபம் அதிகமாகிறது. ராகவ், நீங்கள் எதற்கு அந்த வீட்டில் இருக்கிறீர்கள்? நீங்கள் எதற்காக அங்க இருக்கணும், உங்களுக்கு நான் வீடு வாங்கி தருகிறேன்.

சீரியல் ட்ராக்:

அங்கு வந்து தங்குங்கள். சீக்கிரமாக விவாகரத்து செய்துவிட்டு வந்து விடுங்கள் என்றெல்லாம் சொல்கிறார். இதனால் கொந்தளித்த நிலா, ராகவை திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இன்னொரு பக்கம் கடுப்பில் இருந்த சோழன் பாண்டியன் போனை கீழே போட்டு உடைத்து விடுகிறார். இதனால் சோழன்- பாண்டியன் இடையே சண்டை நடக்கிறது. ஒரு வழியாக சேரன் அதை தடுத்து விடுகிறார். நிலா வீட்டுக்கு வராததால் சேரன் வருத்தமாக வாசலிலேயே பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த வானதி, பாண்டியனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து இன்னும் சோழனுக்கு பயங்கர கடுப்பாகிறது.

behindtalkies AMP · Quick view
View full