நிலாவிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பல்லவன் அம்மா, அடுத்து என்ன? விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வீட்டில் எல்லோரும் தூங்கிவிட்டதாக நினைத்து பல்லவன் அம்மா, தன்னுடைய கணவரிடம் போன் பேசப் போனார். அவர், பணத்தை எடுத்து விட்டாயா? சீக்கிரமாக வந்த வேலையை செய்து முடி என்றார். அதற்கு பல்லவன் அம்மா பதில் கொடுத்திருந்தார். இதையெல்லாம் ஓரமாக நின்று நிலா கவனித்தார். பின் யாரிடம் போன் பேசினீர்கள் என்று நிலா விசாரித்தார். பல்லவனின் அம்மா ஏதேதோ சொல்லி சமாளித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
மறுநாள் காலையில் பல்லவன் அம்மா மீண்டும் போன் பேசுவதை நிலா கவனித்தார். உடனே பல்லவன் அம்மா சமாளிக்கிறார். பின் பல்லவனின் அம்மாவை பற்றி சோழன் சொன்னதை வைத்து நிலா நினைத்து பார்த்தார். பின் நிலா, நீங்கள் யாருடன் இருந்தீர்கள்? இவ்வளவு நாட்கள் எங்கிருந்தீர்கள்? என்றெல்லாம் விசாரித்தார். ஆனால் பல்லவனின் அம்மா பொய் சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் நிலாவிற்கு சந்தேகம் வந்தது.
அய்யனார் துணை:
நடேசன் வீட்டிற்கு திரும்பி வருகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே எங்கு போனீர்கள்? ஏன் வீட்டிற்கு இரவு வரவில்லை என்று கேட்டார்கள். அதற்கு பல்லவன் அம்மாவும் கேள்வி கேட்டார். உடனே கோபப்பட்ட நடேசன், என்னை கேள்வி கேட்பதற்கு நீ யார்? ஒழுங்கு மரியாதையாக வீட்டை விட்டு போ. உன்னால்தான் நான் வீட்டிற்கு வரவில்லை என்று வழக்கம் போல பல்லவன் அம்மாவை திட்டிக் கொண்டிருந்தார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே பல்லவன் அம்மாவிற்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார்கள். அதற்குப்பின் பாண்டியன் கடை வாங்குவது குறித்து சேரன் கேட்டார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு பாண்டியன், என்ன செய்வது என்று புரியவில்லை என்றார். பின் சேரன், தன்னால் முடிந்த தொகையை பாண்டியனிடம் கொடுத்தார். சோழன், தன் ஓனரிடம் வாங்கிய பணத்தை பாண்டியன் இடம் கொடுத்தார். உடனே நிலா, ஒரு பேப்பரில் 60,000 என்று எழுதிக் கொண்டு வந்து கொடுத்தார். பல்லவன், உங்களுக்கு பணம் ரெடி பண்ண தான் அண்ணி இரண்டு நாட்களாக தூங்காமல் எக்ஸ்ட்ரா வேலை செய்து சம்பாதித்தார் என்றார். இதைக் கேட்டு பாண்டியன் எமோஷனல் ஆகி அழுதார். இந்த பணத்தை எல்லாம் பார்த்து பல்லவனின் அம்மா திட்டம் போட்டார்.
https://www.youtube.com/watch?v=QBWh-DgyKuk
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் பல்லவனின் அம்மா தன்னுடைய கணவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பல்லவனின் அம்மா, நான் பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். அப்போ விட்டுட்டு போன குழந்தை. இப்ப உடனே இரண்டே நாளில் தாய் பாசம் வந்துவிடுமா? நான் வந்த வேலையை முடித்துவிட்டு வருகிறேன், அமைதியாக இரு. பணத்தை கொண்டு வந்து தருகிறேன் என்றெல்லாம் சொல்கிறார். இதையெல்லாம் நிலா கேட்டு விடுகிறார். பின் பல்லவன் அம்மா பணத்தை எடுத்துக் கொண்டு வரும்போது நிலா கையும் களவுமாக பிடித்து விடுகிறார்.