வெளிவந்த சோழனின் சுயரூபம், கோபத்தில் கொந்தளித்த நிலா- அடுத்து என்ன? அய்யனார் துணை

By subhashini · 17/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, போலீசுக்கு விவாகரத்து விஷயம் எப்படி தெரிந்தது என்று கேட்டார். அதற்கு சோழன், ஏதேதோ சொல்லி சமாளித்தார். இருந்தாலுமே நிலாவிற்கு சந்தேகமாக இருந்தது. அதற்குப்பின் இரவு 12 மணிக்கு நிலாவின் பிறந்தநாள் என்பதால் சோழன் கேக் வாங்கி மெழுகுவத்தி எல்லாம் ஏற்றி சர்ப்ரைஸ் கொடுத்தார். நிலாவும் அதை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டு கேக்கை வெட்டினார்.

வீட்டில் உள்ள எல்லோருமே நிலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னார்கள். மறுநாள் காலையில் வீட்டில் உள்ள எல்லோரும் நிலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கிப்ட் கொடுத்தார். அப்போது சோழன் நிலவிற்காக வாங்கி வைத்த புடவையை கொடுத்தார். அதை பார்த்து நிலா ரொம்ப சந்தோசப்பட்டார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன் வாங்கி தந்த புடவையை நிலா கட்டிக்கொண்டு வருகிறார். அதை பார்த்து சந்தோஷத்தில் சோழன் நடனமாடுகிறார். அதற்குப்பின் சோழன், நிலா, பல்லவன் கோயிலுக்கு போகிறார்கள்.

அய்யனார் துணை:

அங்கு சோழன் தன்னுடைய மனதில் இருக்கும் காதலை சொல்ல நினைத்தார். ஆனால், நிலா விவாகரத்து பற்றிய பேசிக் கொண்டிருப்பதால் சோழனால் எதுவும் சொல்ல முடியவில்லை. அதற்கு பின் சோழன் வேண்டுதல் என்று கோயிலை சுற்றி அங்கபிரதசனம் செய்கிறார். நிலா, எதற்கு என்று கேட்கிறார். அதற்கு சோழன், நீங்கள் உங்க அப்பா அம்மாவுடன் சேர வேண்டும் என்று சொல்வதால் நிலா திட்டி விடுகிறார். கடைசியில் சோழனின் இடுப்பு எலும்பு உடைந்தது தான் மிச்சம். அதற்குப்பின் நிலா வேலைக்கு சென்று விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது நிலா மீண்டும் அந்த போலீசுக்கு போன் செய்து பேசுகிறார். அந்த போலீஸ் நேரில் வர சொல்கிறார். நிலாவுமே ஆபீஸில் பர்மிஷன் கேட்டு கிளம்புகிறார். அப்போது ராகவ், நான் அந்த வழியாகத்தான் செல்கிறேன். உங்களை நானே கொண்டு போய் விடுகிறேன் என்று சொல்கிறார். பின் ராகவ், நிலாவை பற்றி எல்லாம் விசாரிக்கிறார். ஏதேதோ பதிலை சொல்லி நிலா சமாளிக்கிறார். இன்னொரு பக்கம் நிலாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க சோழன் வீட்டை அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார்.

https://youtu.be/Ye2FecRgYZE?si=RTkuMEygm1QheA75

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் புரோமோவில் சோழன், நான் என் மனதில் இருக்கும் காதலை நிலாவிடம் வெளிப்படையாக சொல்லப் போகிறேன் என்று தன்னுடைய தம்பிகளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் உண்மை அறிந்த நிலா கோபத்தில் சோழனை அழைத்துக் கொண்டு பீச்சுக்கு போகிறார். அப்போது சோழன் தன்னுடைய காதலை சொல்கிறார். கோபத்தில் நிலா, விவாகரத்தைப் பற்றி போலீஸ் இடம் சொன்னது நீதானே? என்னுடைய ஆதார் கார்டை வைத்திருந்ததும் நீதானே? பொய் சொல்லி என்னிடம் நாடகம் ஆடினாய். இந்த பொய் கல்யாணத்தை நிஜ கல்யாணம் மாற்றப் பார்க்கிறாயா, அது நடக்கவே நடக்காது என்று சண்டை போட்டு வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full