வேலை கிடைத்த சந்தோஷத்தில் நிலா, கவலையும் இருக்கும் சோழன் - விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பல்லவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனதால் நிலா, நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சேரனை வேலைக்கு கிளம்ப சொன்னார். இதையெல்லாம் பார்த்த சோழன், நிலாவுடன் இருப்பதற்காக தனக்கு உடம்பு சரியில்லை என்று ட்ராமா செய்து வீட்டிலேயே தங்கி விட்டார். இன்னொரு பக்கம் பாண்டியனை பார்க்க அவருடைய காதலி மெக்கானிக் செட்டுக்கு வந்திருந்தார். ஆனால், பாண்டியன் முகம் கொடுத்து கூட பேசவில்லை. இதனால் கோபப்பட்டு பாண்டியனின் காதலி சண்டை போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இன்னொரு பக்கம் சேரன், வேலை செய்யும் இடத்திற்கு அவருடைய நண்பரின் தங்கை வந்திருக்கிறார். அவருக்கு தமிழ் சுத்தமாக பேசத் தெரியாது. அவருக்கு இந்தி தான் தெரியும். இதனால் சேரனுமே தனக்கு தெரிந்த இந்தியை வைத்து அவரிடம் பேசி இருந்தார். இருவரும் நன்றாக சிரித்து பேசி கொண்டு இருந்தார்கள். கடைசியில் பல்லவனுக்கு காய்ச்சல் அதிகமானதால் தன்னுடைய மாமனாரிடம் கொடுத்து மருந்து மாத்திரை வாங்கி தர சொன்னார் நிலா. அவருமே வாங்கிக் கொண்டு வந்து தந்தார். பின் நிலா, பல்லவனின் அம்மா பற்றிய கதையை கேட்டார். ஆனால், அய்யனார் எதுவுமே சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டார்.
அய்யனார் துணை:
பல்லவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனதால் நிலா பார்த்து பார்த்து கவனித்தார். அப்போது வந்த வானதி, பாண்டியன் போன் எடுக்காததால் சண்டை போட்ட விஷயத்தை எல்லாம் சொன்னார். பின் நிலாவும் அவருக்கு அறிவுரை சொல்லி அனுப்பினார். அதற்குப்பின் சேரன் வீட்டிற்கு வந்து எல்லோருக்கும் சமைத்து வைத்தார். அப்போது பாண்டியனுக்கு போன் செய்த சோழன், எனக்கு சவாரி இருக்கிறது. நான் வர லேட் ஆகும் என்று சொல்லிவிட்டார். பின் சோழன் வீட்டிற்கு வராததால் நிலா விசாரித்தார். அப்போது பாண்டியன், சவாரி இருப்பதால் சோழன் லேட்டாக வருவான் என்று சொன்னார். இருந்தாலும், சோழன் வீட்டிற்கு வராததை நினைத்து நிலா கவலையில் இருந்தார்.
நேற்று எபிசோட்:
பின் நிலா, வாசலுக்கு சென்று பார்த்துக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பல்லவன், பாண்டியன் இருவருமே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் சோழனுக்கு போன் செய்து நிலா விசாரித்தார். இருந்தாலும் நிலா தூங்காமல் சோழன் வரும் வரை வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தார். பின் நிலா, சோழன் வந்தவுடன் பேசிவிட்டு தூங்க சென்று விட்டார். பின் நடந்ததை எல்லாம் பாண்டியன், சோழனிடம் சொன்னார். இதனால் நிலா தன் மீது அக்கறை கொள்வதை நினைத்து சோழன் சந்தோஷப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன், நீங்கள் என் மீது அக்கறைப்பட்டு விசாரித்தது எல்லாம் கேள்விப்பட்டேன். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று சொல்கிறார். உடனே நிலா அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. மீண்டும் என்னுடைய அண்ணன் அப்பாவால் உங்களுக்கு பிரச்சனை வந்துவிடுமோ என்று பயந்துவிட்டேன் என்று சொல்கிறார். இப்படி நிலாவிடம் சோழன் பல்பு வாங்கியதை பல்லவன், பாண்டியன் இருவருமே பார்த்து கலாய்க்கிறார்கள். சோழனுக்கு எதுவுமே சொல்ல முடியவில்லை. நிலா தன்னை காதலிக்கிறாரா? என்ற கவலையில் சோழன் இருக்கிறார். அதற்குப்பின் நிலா, வேலை தேடி ஒரு கம்பெனிக்கு செல்கிறார். அந்த இடத்தில் நிலாவிற்கு வேலை கிடைத்து விடுகிறது.
சீரியல் ட்ராக்:
குறைந்தபட்ச சம்பளத்தில் தான் வேலை கிடைக்கிறது. பின் இதைப்பற்றி சோழனிடம் நிலா சொல்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியனை பார்க்க வானதி மெக்கானிக்கல் செட்டிக்கு வருகிறாள். அப்போது இருவருமே தங்களுடைய சூழ்நிலை எடுத்துச் சொல்லி பேசி சமாதானம் ஆகி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் நிலா, வேலை கிடைத்ததை ஸ்வீட் கொடுத்து சேரனுக்கு சொல்கிறார். இதை கேட்டு சேரன் ரொம்ப சந்தோஷப்படுகிறார். பின் அந்த இடத்திற்கு ஹிந்தி பெண்மணி வருகிறார். அப்போது அந்த பெண்ணிடம் சேரன் குடும்பத்தை அவருடைய அண்ணா அறிமுகம் செய்து வைக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது