பாண்டியனுக்காக கஷ்டப்பட்ட நிலா, சேரன்-சோழன் செய்த உதவி - விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பல்லவனின் அம்மா, நான் எப்படியாவது பணத்தை ஏற்பாடு செய்து விட்டு வந்து விடுகிறேன். அமைதியாக இரு என்று சொல்லிவிட்டு வீடு முழுவதும் பணம் இருக்கிறதா? என்று சோதனை செய்தார். இன்னொரு பக்கம் சேரன், பாண்டியன் புதுக்கடைக்காக தான் வேலை செய்யும் இடத்தில் பணம் கேட்டார்கள். அவர்களுமே தருவதாக ஒத்துக் கொண்டார்கள். இன்னொரு பக்கம் சோழனும் தன்னுடைய ஓனரிடம் பாண்டியனின் கடைக்காக பணம் கேட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு சீக்கிரமாகவே வந்த பல்லவன் தன் அம்மாவிடம் எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார்.
பல்லவனின் அம்மா எல்லா வேலைகளையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து வீட்டில் எல்லோருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். பின் எல்லோரும் தூங்கிவிட்டதாக நினைத்து பல்லவன் அம்மா, தன்னுடைய கணவரிடம் போன் பேசப் போனார். அவர், பணத்தை எடுத்து விட்டாயா? சீக்கிரமாக வந்த வேலையை செய்து முடி என்றார். அதற்கு பல்லவன் அம்மா பதில் கொடுத்திருந்தார். இதையெல்லாம் ஓரமாக நின்று நிலா கவனித்தார். பின் யாரிடம் போன் பேசினீர்கள் என்று நிலா விசாரித்தார். பல்லவனின் அம்மா ஏதேதோ சொல்லி சமாளித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
அய்யனார் துணை:
மறுநாள் காலையில் பல்லவன் அம்மா மீண்டும் போன் பேசுவதை நிலா கவனித்தார். உடனே பல்லவன் அம்மா சமாளிக்கிறார். பின் பல்லவனின் அம்மாவை பற்றி சோழன் சொன்னதை வைத்து நிலா நினைத்து பார்த்தார். பின் நிலா, நீங்கள் யாருடன் இருந்தீர்கள்? இவ்வளவு நாட்கள் எங்கிருந்தீர்கள்? என்றெல்லாம் விசாரித்தார். ஆனால் பல்லவனின் அம்மா பொய் சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் நிலாவிற்கு சந்தேகம் வந்தது.
இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் நடேசன் வீட்டிற்கு திரும்பி வருகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே எங்கு போனீர்கள்? ஏன் வீட்டிற்கு இரவு வரவில்லை என்று கேட்கிறார்கள். அதற்கு பல்லவன் அம்மாவும் கேள்வி கேட்கிறார். உடனே கோபப்பட்ட நடேசன், என்னை கேள்வி கேட்பதற்கு நீ யார்? ஒழுங்கு மரியாதையாக வீட்டை விட்டு போ. உன்னால்தான் நான் வீட்டிற்கு வரவில்லை என்று வழக்கம் போல பல்லவன் அம்மாவை திட்டிக் கொண்டிருக்கார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே பல்லவன் அம்மாவிற்கு சப்போர்ட் செய்து பேசுகிறார்கள். அதற்குப்பின் பாண்டியன் கடை வாங்குவது குறித்து சேரன் கேட்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு பாண்டியன், என்ன செய்வது என்று புரியவில்லை என்கிறார். பின் சேரன், தன்னால் முடிந்த தொகையை பாண்டியனிடம் கொடுக்கிறார். சோழன், தன் ஓனரிடம் வாங்கிய பணத்தை பாண்டியன் இடம் கொடுக்கிறார். உடனே நிலா, ஒரு பேப்பரில் 60,000 என்று எழுதிக் கொண்டு வந்து கொடுக்கிறார். பாண்டியன் எதற்காக நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள் என்று கேட்கிறார். அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று நிலா சொல்கிறார். பல்லவன், உங்களுக்கு பணம் ரெடி பண்ண தான் அண்ணி இரண்டு நாட்களாக தூங்காமல் எக்ஸ்ட்ரா வேலை செய்து சம்பாதித்தார் என்கிறார். இதைக் கேட்டு பாண்டியன் எமோஷனல் ஆகி அழுகிறார். இந்த பணத்தை எல்லாம் பார்த்து பல்லவனின் அம்மா திட்டம் போடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.