அவமானப்பட்ட நிலாவிற்காக சோழன் செய்த வேலை, அடுத்து என்ன? விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், இவளுடன் பேசினால் பைத்தியம் தான் பிடிக்கும். உன்னைப் பற்றி எவ்வளவு பெருமையாக சொன்னாலும் அதில் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறாள். இவளுடன் வாழ்வதெல்லாம் பெரிய கஷ்டமான விஷயம் என்றெல்லாம் சொன்னார். இதனால் வானதிக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் சோழனால் வானதி, பாண்டியன் இடையே சண்டை ஏற்பட்டது. சோழன், இதுதான் சந்தர்ப்பம் அவளை விட்டுவிடு என்றார். பாண்டியனால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவித்து நிற்கிறார்.
அதற்குப்பின் நடேசன், சேரன், சோழன் மூவருமே பேங்கில் பணம் கேட்பதற்காக சென்றிருந்தார்கள். அங்கு வீட்டு பத்திரம் சரியாக இல்லாததால் பணம் தர முடியாது என்றார்கள். வீட்டிற்கு வந்த சேரன் பேங்கில் நடந்ததை எல்லாம் நிலாவிடம் சொன்னார். நிலா, நான் வேலையை தேடிக் கொள்கிறேன். தயவு செய்து பத்திரத்தை எல்லாம் வைக்க வேண்டாம் என்றெல்லாம் சொன்னார். பாண்டியன், எனக்கு தெரிந்த இடத்தில் பணம் கேட்டிருக்கிறேன் என்றார். சோழன்-சேரன் இருவருமே தங்களால் முடிந்த பணத்தை ஏற்பாடு செய்து தருகிறோம் என்றார்கள்
அய்யனார் துணை:
வீட்டில் உள்ள எல்லோரிடமும் பல்லவன் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டார். ஆனால், யாருமே பேசவில்லை. பின் பல்லவன், நடேசன் இடம் பேச போனார். நடேசன் பல்லவனை மன்னித்து அவரிடம் தன்னுடைய காதல் கதையை சொன்னார். அதற்குப்பின் வானதியிடம் சோழன் பேசிய விஷயத்தை எல்லாம் பாண்டியன் சொன்னார். நிலா, உங்களால் பாண்டியனுக்கும் வானதிலும் பிரச்சனை வந்திருக்கும். இப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்று சோழனை திட்டினார்.
சீரியல் ட்ராக்:
பின் பாண்டியனிடம் நிலா, நீங்கள் வானதியை அழைத்துக் கொண்டு நேரத்தை செலவிடுங்கள் என்றார். அதற்குப்பின் நிலாவின் தோழி, ஸ்டார்ட் அப் விஷயம் பேச வந்தேன். நீ எந்த பணத்தையும் கொடுக்க தேவையில்லை. உன்னால் முடியும் போது கொடு. நாங்கள் இருவரும் பணத்தை போட்டு தொழில் தொடங்கலாம். மூன்று பேருமே அந்த கம்பெனிக்கு ஓனர் என்றார். நிலா தயங்குகிறார். சோழன், சேரன் இருவரும் சந்தோஷப்பட்டார்கள். நிலா, எல்லோரும் கட்டாயப்படுத்தியதால் ஒத்துக் கொண்டார். அதற்குப்பின் கடையில் பாண்டியன், வானதிக்காக காத்து கொண்டு இருந்தார்.
https://www.youtube.com/watch?v=cbXzkhBO-s4
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் நிலா, தன் தோழி உடன் சேர்ந்து புது கம்பெனியை
திறந்து வைக்கிறார்கள். அப்போது அங்கு வந்த ஒரு நபர், நிலா பணம் கொடுக்கவில்லை என்று குத்தி காண்பித்து பேசுகிறார். இதனால் சோழன் ரொம்பவே கஷ்டப்படுகிறார். பின் தன்னுடைய ஓனரிடம் 5 லட்சம் ரூபாயை கடனாக சோழன் கேட்கிறார். ஓனர், உன்னைய நம்பி எவன் பணம் தருவான் என்று சொல்லி அவரிடம் இருந்த பணத்தை கல்லாவில் வைக்கிறார். சோழன் தன் ஓனருக்கு தெரியாமல் அந்த பணத்தை திருடுகிறார்.