சோழனை கல்யாணம் செய்து கொள்ள நினைக்கும் காயத்ரி, நிலா எடுக்க போகும் முடிவு என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று தன்னுடைய தரப்பு நியாயத்தை பாண்டியனிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து வானதி அங்கு வந்து விட்டார். பின் சோழன்-காயத்ரி லவ்வை பற்றி கேட்டு வம்பு இழுத்துக் கொண்டிருந்தார். அதற்குப்பின் வீட்டில் எல்லோரும் அவரவர்கள் வேலையை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது வீட்டிற்கு வந்த காயத்ரி நண்பர்கள், உங்களுக்கு திருமணம் ஆனதை ஏமாத்தி காதலித்தீர்களா? அவள் ரூமை விட்டு வெளியே வரவே இல்லை. அவளுக்கு ஏதாவது ஒன்று என்றால் உன்னை சும்மா விட மாட்டேன் என்றெல்லாம் சோழனை மிரட்டினார்கள்.
உடனே சேரன், பாண்டியன் எல்லோரும் அவர்களை அனுப்பி வைத்தார்கள். பின் சேரன், சோழன் செய்தது தவறு என்று திட்டிக் கொண்டிருந்தார். கோபத்தில் சோழன், நான் என்ன தவறு செய்தேன். இது பொய்யான திருமணம் தானே. விவாகரத்து வாங்கிக் கொண்டு நிலா சென்று விடுவார். இந்த கல்யாணத்தை அவர் ஏற்றுக் கொள்ளவே இல்லை. நான் ஒரு பெண்ணுடன் பேசியதில் என்ன தவறு. நான் அந்த பெண்ணை காதலிக்கவில்லை. தோழியாக தான் நான் பழகினேன் என்றெல்லாம் சொன்னார். நிலா, நீங்கள் சொல்வது உண்மைதான். இது போலியான கல்யாணம் தான். நீங்கள் காயத்திரி உடன் பேசுங்கள், பழகுங்கள், அவளை காதலியுங்கள். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்வதால் சோழன் ஷாக் ஆகி நின்றார்.
அய்யனார் துணை:
இன்றைய எபிசோட்டில் நிலா, நமக்கு சீக்கிரமாகவே விவாகரத்து கிடைக்க போகிறது. நீங்கள் காயத்ரியை கல்யாணம் செய்து கொள்ளுங்கள். அவள் ரொம்ப கஷ்டப்படுவாள். இந்த பிரச்சனை எல்லாம் என்னால் தானே நடக்கிறது. நானே காயத்ரியிடம் நேரில் சென்று நடந்ததை எல்லாம் எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறேன். உங்கள் இருவரையும் நானே சேர்த்து வைக்கிறேன் என்றெல்லாம் சொல்கிறார். பதறிப்போன சோழன், அதெல்லாம் தேவையில்லை என்று சொல்கிறார். இருந்தாலுமே கேட்காமல் நிலா, பல்லவனை அழைத்துக் கொண்டு காயத்ரி வீட்டிற்கு போகிறார். பின் சோழன், நான் காயத்ரியை காதலிக்கவே இல்லை.
சீரியல் ட்ராக்:
நிலாவை வெறுப்பேற்ற தான் இப்படி எல்லாம் செய்தேன். எப்படியாவது நிலாவிடம் சொல்லி காயத்ரியை கூப்பிட்டு வர வேண்டாம் என்று சொல்லுங்கள் என்கிறார். உடனே சேரன், பாண்டியன் இருவரும் நிலா சொல்வது தான் சரி. நிலா விவாகரத்து வாங்கிக் கொண்டு இந்த வீட்டை விட்டு போகட்டும் என்றெல்லாம் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் பல்லவன், உண்மையாலுமே காயத்ரியை வீட்டிற்கு அழைத்து வரப் போகிறீர்களா? என்று கேட்கிறார். அதற்கு நிலா, நான் பைத்தியமா? அவரை வெறுப்பேற்ற தான் இப்படி எல்லாம் சொன்னேன் என்கிறார். கடைசியில் சோழன், தயவுசெய்து நிலாவிடம் எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள் என்றெல்லாம் கெஞ்சி கதறுகிறார். இருந்தாலும் சேரன் கேட்கவில்லை.
https://www.youtube.com/watch?v=9WUuY8pbrHA
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சோழன், நிலா என்னை காதலிப்பதற்காக தான் இப்படி எல்லாம் செய்தேன். தயவுசெய்து என்னை புரிந்து கொள்ளுங்கள். காயத்ரியை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம் என்றெல்லாம் கதறுகிறார். இன்னொரு பக்கம் நிலா, காயத்ரி வீட்டிற்கு சென்று விடுகிறார். அப்போது காயத்ரி, நான் உண்மையாக தான் சோழனை காதலித்தேன். அவரை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேன் என்று சொல்கிறார்.