சோழனின் பித்தலாட்ட வேலையை அறிந்து ஷாக்கான நிலா, இனி நடக்கப்போவது என்ன? அய்யனார் துணை

By subhashini · 9/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நடேசன், ஒழுங்கு மரியாதையாக பணத்தை ஏற்பாடு செய்யுங்கள் என்றார். நிலா, இப்ப இருக்கும் சூழலில் இதெல்லாம் தேவையில்லை. எதற்காக இப்படி செய்வீர்கள் என்றார். நடேசன், எல்லாம் தெரிந்துதான் செய்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் வானதி வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதற்கான ஏற்பாடு செய்தார்கள். வானதி, சீக்கிரம் என்னுடைய திருமணம் நடக்கணும் என்றார். பின் விவாகரத்து வழக்கு நடக்க இருப்பதால் நிலா- சோழன் இருவரும் வக்கீலை சந்தித்து பேசி விட்டு வந்தார்கள்.

சோழன், நாளை கோர்ட்டில் நம்ம விவாகரத்துக்கே முடிந்துவிடும். நீங்களும் இருவரும் வேண்டாம் என்று சொல்லப் போகிறோம் என்றார். நிலா, ஒருவேளை நான் விவாகரத்து வேண்டும் என்று சொன்னால் என்ன செய்வீர்கள் என்றார். சோழன், நான் சந்தோஷமாக இருந்தால் பிடிக்காதா? ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சோழனிடம் பாண்டியன் விசாரித்தார். சோழன், எனக்கு கோர்ட்டில் என்ன நடக்குமோ? பயமாக இருக்கிறது. நிலா விவாகரத்து வேண்டாம்ன்னு சொல்லணும் என்று புலம்பி கொண்டிருந்தார்.

அய்யனார் துணை:

பின் பாண்டியன், வானதியின் வீட்டிற்கு சென்றார். ஆனால், வானதி வீட்டுக்குள் போகாமல் வெளியேவே நின்று கொண்டிருந்தார். வானதி, ஏதாவது சொல்லுவாள் என்று அங்கிருந்து பாண்டியன் கிளம்பி வந்து விட்டார். மறுநாள் காலையில் கோர்ட்டுக்கு செல்வதற்காக சோழன்- நிலா இருவரும் தயார் ஆகிறார்கள். அப்போது நிலாவை சந்தித்து சேரன் பேசி இருந்தார். நிலா, பயப்படாதீர்கள் நான் விவாகரத்து வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன். கவலைப்படாதீர்கள், தைரியமாக இருங்கள் என்றார். சேரனுக்கு சந்தோஷமாக இருக்கிறது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் நிலா-சோழன் இருவருமே கோர்ட்டுக்கு செல்கிறார்கள். சோழன், நிலா எப்படியும் விவாகரத்து வேண்டாம் என்று சொல்லிவிடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
நிலாவுமே விவாகரத்து வேண்டாம். சோழனுடன் சேர்ந்து வாழ முடிவெடுக்கிறார். அதற்குப்பின் கோர்ட்டில்
தங்களுக்கு திருமணம் செய்து வைத்த போலீசை சோழன் சந்திக்கிறார். சோழனும் அந்த போலீசும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை நிலா ஒளிந்து நின்று கேட்கிறார். அப்போது சோழன், தங்களுடைய திருமண கதையும், அதனால் செய்த பித்தலாட்ட வேலை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அந்த போலீஸ், சோழனுக்கு அறிவுரை சொல்லி நிலாவுடன் சேர்ந்து வாழ சொல்கிறார். இதை எல்லாம் கேட்டு நிலாவிற்கு பயங்கர அதிர்ச்சியாக இருக்கிறது. பொய் சொல்லி ஏமாற்றி தான் சோழன் தன்னை திருமணம் செய்து கொண்டான் என்று அறிந்து கொண்டு நிலா ரொம்பவே வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் வானதி வீட்டில் அவரின் பெற்றோர்கள் திருமணத்திற்கான வேலைகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதை எல்லாம் பார்த்து வானதிக்கு கஷ்டமாக இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full