வீட்டை விட்டு வெளியேறும் நிலா, மனம் உடைந்து மன்னிப்பு கேட்கும் சோழன் - அய்யனார் துணை

By subhashini · 25/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சந்தாவை பார்த்தவுடன் வீட்டில் வீட்டில் உள்ள எல்லோருமே நன்றாக பேசினார்கள். அப்போது சந்தா, தமிழ் கற்றுத் தருமாறு பல்லவனிடம் கேட்டார். பல்லவன் தன்னுடைய அப்பாவை வெறுப்பேத்த தப்பு தப்பாக தமிழ் வார்த்தைகளை சொல்லித் தந்தார். அதையெல்லாம் நடேசனிடம் போய் சந்தா பேசினார். கோபத்தில் நடேசன் சந்தாவை திட்டினார். பின் பாண்டியன், சேரனிடம் சொன்னார். நிலா வண்டி ஓட்டுவதை பார்த்து சோழன் மீண்டும் கிண்டல் அடித்து பேசினார்.

இதனால் கோபப்பட்ட நிலா, சோழனை திட்டி அனுப்பி விட்டார். அதற்குப்பின் வீட்டில் நிலா, சேரன், பாண்டியன், பல்லவன் எல்லோருமே பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள். இதை பார்த்த நடேசன், உன்னை அவள் மதிப்பதே கிடையாது. நீ அவன் புருஷன் தானே சீக்கிரமாக முதல் ஒழுங்கு மரியாதையாக அதன் படி நடந்து கொள். நீ தான் அவள் புருஷன் என்று அவளுக்கு புரியவை இல்லையென்றால் வாயை மூடிட்டு இரு என்றெல்லாம் தேவையில்லாமல் சோழனை உசுபேத்தி விட்டார்.

அய்யனார் துணை:

இதனால் கோபத்தில் சோழன் குடிக்கப் போனார். அந்த இடத்திற்கு சோழனின் ஓனருமே குடித்துக்கொண்டிருந்தார். அப்போது சோழன், தன்னுடைய திருமணத்தை பற்றியும் நிலா தன்னிடம் நடந்து கொள்ளும் விதத்தை பற்றியும் சொல்லி புலம்பினார். உடனே அந்த ஓனர், நீ அவள் உன் புருஷன் தானே. நீ உரிமையாக பழகு. அப்போதுதான் அவள் உன்னிடம் நெருங்கி பழகப் பார்ப்பாள். நீ விலகி போனால் அவளும் விலகி போவாள் என்றெல்லாம் தேவையில்லாத ஐடியா கொடுத்தார்.

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோட்டில் நிறைய குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சோழன் நேராக நிலா ரூமிற்கு சென்று அவருடைய பக்கத்திலேயே படுக்கிறார். இதை பார்த்த நிலா ரொம்பவே பயந்து போய் வெளியே போக பார்க்கிறார். உடனே சோழன், நான் உன்னுடைய புருஷன். உன்னுடைய ரூமில் தான் தூங்குவேன் என்று சொல்கிறார். நிலா எவ்வளவு சொல்லியுமே சோழன் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் சோழன் கதவை தாழ்ப்பாள் போட்டான். இதனால் நிலா பயத்தில் சேரன் அண்ணா என்று கத்துகிறார். இதையெல்லாம் கேட்டு சேரன், பாண்டியன், பல்லவன் மூவருமே கதவை தட்டுகிறார்கள். ஆனால் சோழன் கதவை திறக்கவில்லை.

சீரியல் ட்ராக்:

பின் நிலா, சோழனை தள்ளிவிட்டு கதவை திறந்து விடுகிறார். நிலா பயந்து போய் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து விடுகிறார். சோழன் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் கோபத்தில் சேரன், சோழனை அடித்து விடுகிறார். பாண்டியன் சோழனை அழைத்துக் கொண்டு வெளியே போய் தூங்க வைக்கிறார். மறுநாள் காலையில் நிலா எதுவும் பேசாமல் அமைதியாக வேலைக்கு சென்று விடுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே அவரவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். போதை தெளிந்து சோழன் நடந்ததை நினைத்து பார்க்கிறார். பின் வீட்டில் உள்ள எல்லோரிடமே சோழன் பேசுகிறார். ஆனால், யாருமே முகம் கொடுத்து கூட சோழனிடம் பேசவில்லை.

https://www.youtube.com/watch?v=ZLJbABkeH00

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நிலா, நான் ஹாஸ்டல் போகிறேன். இனிமேல் என்னால் அந்த வீட்டில் இருக்க முடியாது என்று சொல்கிறார். இதைக் கேட்டு சேரன் ரொம்பவே வருத்தப்படுகிறார். பின் நிலா வீட்டை விட்டு போவதால் வீட்டில் உள்ள எல்லோருமே ரொம்ப எமோஷனலாக அழுகிறார்கள். அதற்கு பின் ஹாஸ்டலில் நிலா இருக்கிறார். அப்போது பலூனில் சாரி என்று எழுதி சோழன் காண்பிக்கிறார். கோபத்தில் நிலா, என்னை ஏன் டார்ச்சர் செய்கிறீர்கள். உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பேசுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full