வீட்டை விட்டு கிளம்பும் நிலாவை தடுப்பாரா சேரன்? அதிர்ச்சியில் உறைந்த சோழன் - அய்யனார் துணை

By subhashini · 12/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழனுக்கு அறிவுரை சொல்லி நிலாவுடன் சேர்ந்து வாழ சொன்னார். இதை எல்லாம் கேட்டு நிலாவிற்கு பயங்கர அதிர்ச்சியாக இருக்கிறது. பொய் சொல்லி ஏமாற்றி தான் சோழன் தன்னை திருமணம் செய்து கொண்டான் என்று அறிந்து கொண்டு நிலா ரொம்பவே வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் வானதி வீட்டில் அவரின் பெற்றோர்கள் திருமணத்திற்கான வேலைகள் செய்து கொண்டு இருந்தார்கள். அதை எல்லாம் பார்த்து வானதிக்கு கஷ்டமாக இருக்கிறது.

நீதிபதி, விவாகரத்து வேண்டுமா? வேண்டாமா? என்று கேட்டார். சோழன், வேண்டாம் என்று சொல்வதற்குள் நிலா, விவாகரத்து வேண்டும் என்று சொல்லிவிட்டார். சோழனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நீதிபதி இருவருக்கும் விவாகரத்து கொடுத்து விட்டார். பின் அங்கிருந்து நிலா வேகமாக கிளம்பி வந்தார். சோழன், எதற்காக இப்படி சொன்னீர்கள்? என்றார். நிலா, என்னை ஏமாற்றி தான் நீங்கள் கல்யாணம் செய்தீர்கள் என்று போலீஸிடம் பேசுவதை நான் தெரிந்து கொண்டேன். இவ்வளவு மோசமானவரா நீங்கள் என்று நடுரோட்டிலேயே கத்தினார்.

அய்யனார் துணை:

சோழன் கொஞ்சி கதறுகிறார். பின் ஆட்டோவில் ஏறி நிலா கிளம்பி விட்டார். உடனே சோழன், கோர்ட்டில் நடந்ததை எல்லாம் சேரனிடம் சொன்னார். சேரன், பாண்டியனை வீட்டிற்கு வரவைத்தார். பாண்டியன் கிளம்பியுடன் வானதி அந்த இடத்திற்கு வந்தார். அப்போது பாண்டியனிடம் வேலை செய்பவர், நீ வேறொரு கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னவுடன் சந்தோஷத்துடன் பாண்டியன் அவுட்டிங் போகிறான். என்றார். அதை கேட்டு வானதிக்கு இன்னும் கோபம் அதிகமாகின்றது. அதற்குப் பிறகு வீட்டிற்கு வந்த நிலா ரூமுக்குள் சென்று சோழன் சொன்னது எல்லாம் நினைத்து பார்த்து அழுது கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் சேரன், என்ன நடந்தது? என்று விசாரிக்கிறார். நிலா,
நான் சோழனை காதலித்தேன். அதனால் தான் வீட்டை விட்டு ஓடி வந்தேன் என்று போலீசிடம் பொய் சொல்லி என்னை ஏமாற்றி கல்யாணம் செய்துவிட்டார். அந்த கல்யாணம் மட்டும் நடக்கவில்லை என்றால் நான் எப்படியாவது என்னுடைய பெற்றோர்களிடம் சென்றிருப்பேன். இப்படி ஒரு துரோகம் எனக்கு செய்வார் என்று நான் நினைக்கவே இல்லை ஒன்று ரொம்பவே கதறி அழுகிறார். நிலா சொன்னதை கேட்டு சோழன், நடேசன், பாண்டியன் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். சோழனால் எதுவுமே பேச முடியவில்லை.

சீரியல் ட்ராக்:

சோழன், நான் உங்களை திருமணம் செய்து கொள்ள தான் அப்படி சொன்னேன். வேறு எந்த தவறான நோக்கமும் இல்லை என்று சொல்கிறார். நிலா, இப்பவும் தான் செய்தது தவறு இல்லை என்பது போலவே பேசுகிறார். என்னால் இனி இந்த வீட்டில் இருக்கவே முடியாது என்று நிலா ரூமுக்குள் சென்று விடுகிறார் சேரன், பாண்டியன் எல்லோருமே சோழனை திட்டுகிறார்கள். கோபத்தில் பதிலுக்கு சோழனும் தன் அண்ணனிடம் சண்டை போடுகிறார். அப்போது நிலா, துணிகள் எல்லாம் பேக் செய்து கொண்டு வெளியே வருகிறார். சேரன், நிஜமாகவே வீட்டை விட்டுப் போகிறாயா? என்கிறார். நிலா, என்னால் இங்கு இருக்க முடியாது என்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full