வேலையை தூக்கி எறிந்த நிலா, ராகவ் போட்ட சவால் - பரபரப்பான கட்டத்தில் அய்யனார் துணை

By subhashini · 3/3/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன், சேரன் அண்ணனுக்கு திருமணமான பிறகு தான் நான் வானதியை கல்யாணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக சொல்லிவிட்டார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே அமைதியாக இருந்தார்கள். சோழன், சேரன் அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யலாம் என்றார். அதற்கு பின் நிலா- சோழன் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நிலா, நாம் சந்தாவை பெண் கேட்க போகணும். அதற்கு பின் அவர்கள் இங்கு வரணும். அதற்கு பின் சீக்கிரம் பாண்டியனுக்கு கல்யாணம் செய்யணும் என்றார்.

சோழனுக்கு உள்ளுக்குள் கவலை இருந்தாலும் வெளியில் காண்பிக்காமல் சரி என்று சம்மதித்தார். மறுநாள் காலையில் எல்லோருமே அவரவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது பாண்டியன், வானதி பேசியதை பற்றி யோசித்து கொண்டு இருந்தார். பாண்டியன் போன் செய்தும் வானதி எடுக்கவில்லை. அதற்குப்பின் நிலா-சோழன் இருவருமே சந்தா வீட்டில் பேச போவதற்கு தயாரானார்கள். அப்போது பாண்டியன் கவலையில் இருப்பதை அறிந்த நிலா அவரிடம் விசாரித்தார். ஆனால், பாண்டியன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

அய்யனார் துணை:

இன்றைய எபிசோட்டில் பாண்டியன், சேரன் அண்ணனுக்கு கல்யாணம் நடக்கணும். அது மட்டும் இல்லாமல் எனக்கும் வானதிக்கும் கல்யாணத்திற்கு பிறகு செட் ஆகுமா? தெரியவில்லை. எல்லாம் யோசித்து தான் முடிவு எடுக்கணும். கல்யாணத்தை நினைத்தால் குழப்பமாக இருக்கிறது. அதனால் தான் என்னால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை என்று சொல்கிறார். நிலா, வானதி வீட்டில் பிரஷர் கொடுப்பார்கள். அதனால் தான் வானதி கோபப்படுகிறார். எதுவாக இருந்தாலும் யோசித்து முடிவெடுங்கள்.
ரெண்டு பேரும் புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார். அதற்குப்பின் நிலா- சோழன் இருவரும் சந்தாவின் வீட்டிற்கு போகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது நிலா, சேரனுக்கு சந்தாவை திருமணம் செய்து வைப்பது பற்றி பேசுகிறார். சந்தா ரொம்பவே சந்தோஷப்படுகிறார். அனிஷ், திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார். அதோடு தன்னுடைய பெற்றோர்கள் திருமணத்திற்கு ஒத்துக்க மாட்டார்கள் என்பதால் சென்னையிலேயே திருமணத்தை முடித்து விடலாம் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியன், வானதி கடைக்கு வராததால் ரொம்ப வருத்தப்படுகிறார். பின் வானதிக்கு பாண்டியன் போன் செய்கிறார். வானதி, பாண்டியனை பிளாக் செய்து வைக்கிறார். வேறொரு மொபைலில் இருந்து பாண்டியன், வானதிக்கு போன் செய்கிறார். பாண்டியன் குரலை கேட்டவுடன் வானதி ஃபோனை வைத்து விடுகிறார்.

https://www.youtube.com/watch?v=yj2ec9bvf8w

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ராகவ், வேறு கம்பெனியில் வேலைக்கு செல்வதாக கேள்விப்பட்டேன். உண்மையா? என்று கேட்கிறார். நிலா, ஆமாம். இனி என்னால் இங்கு வேலை செய்ய முடியாது என்கிறார். உடனே ராகவ், சர்டிபிகேட் இல்லாமல் நீ எங்க போய் வேலை செய்வாய்? என்று கேட்கிறார். நிலா, எனக்கு தரவேண்டிய நியாயமான எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் தரவில்லை என்றாலும் நான் என்னுடைய திறமையை வைத்து வேலை வாங்குவேன் என்று சொல்கிறார். கோபத்தில்
ராகவ், இந்த வேலையை விட்டு நீ என்ன கிழிக்கப் போகிறாய் என்று பார்க்கிறேன் என்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full