ஆபிஸில் பிரச்சனையில் சிக்கிய நிலா, சந்தோஷத்தில் சோழன் - விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன் செய்வதை ஒளிந்து கொண்டு பல்லவன்- சோழன் பார்த்தார்கள். பின் தன்னுடைய அண்ணன் சந்தோஷமாக ரொமான்டிக் செய்வதை பார்த்து இருவரும் சந்தோஷப்பட்டார்கள். அதற்குப்பின் சந்தா, சேரன் இருவரும் கோயிலுக்கு சென்றார்கள். இன்னொரு பக்கம் வேலை முடித்துவிட்டு நிலா வீட்டிற்கு வந்தார். நடேசனை நிலா நலம் விசாரித்தார்.
நிலா வீட்டிற்கு வந்ததால் நடேசன் அவருக்கு டீ எல்லாம் வைத்துக் கொடுத்தார். பின் நிலா கையில் அடிபட்டிருப்பதை அறிந்த நடேசன், பதறி போனார். பின் நடேசன், நிலா கையில் அடிபட்ட இடத்திற்கு மருந்து வைக்கிறார். அதற்குப்பின் சேரன் வீட்டுக்கு வந்தார். வழக்கம் போல சோழன்- பல்லவன் இருவரும் மாறி மாறி சேரனிடம் கேள்வி கேட்டார்கள். சேரனும் ஏதேதோ சொல்லி சமாளித்தார். ஒரு கட்டத்தில் பல்லவன், சோழன் இருவரும் சேரன், சந்தாவுடன் ஊர் சுற்றியதை சொல்லி விட்டார்கள்.
அய்யனார் துணை:
இதனால் வெட்கத்தில் சேரன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். தம்பிகள் எல்லோருமே சேர்ந்து சேரனை கலாய்த்து கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் நடேசன், நிலாவின் கையில் அடிபட்ட விஷயத்தை வீட்டில் சொன்னார். சேரன், பல்லவன், சோழன் எல்லோருமே பதறிப் போனார்கள். சோழன் ரொம்பவே வருத்தப்பட்டார். பின் சேரன், இனிமேல் நிலாவை நீயே வேலைக்கு அழைத்து செல் என்று சோழனுக்கு ஆர்டர் போட்டார். இது எல்லாம் பார்த்து நிலாவிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன், நிலாவை வெறுப்பேற்றுவதற்காக மேட்ரிமனியில் பெண்களை பார்த்து கொண்டு இருக்கிறார். நிலா, என்ன என்று விசாரிக்கிறார். அப்போது சோழன், விவாகரத்தான பிறகு நான் உங்களை நினைத்து சோகத்தில் இருப்பேன். அது வேண்டாம் என்று தான் எனக்காக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டு நிலாவிற்கு கடுப்பாகி உள்ளே சென்று விடுகிறார். இதெல்லாம் பார்த்து சோழனுக்கு சந்தோஷமாக இருக்கிறது.
சீரியல் ட்ராக்:
அடுத்த நாள் நிலா, புது ப்ராஜெக்ட் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று பதட்டத்தில் இருக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே நிலாவிற்கு வாழ்த்துக்களை சொல்கிறார்கள். பின் நிலாவும் பதட்டத்துடன் ஆட்டோவில் ஆபிஸிற்கு வந்தார். பின் ஆபிஸில் ராகவ், ப்ராஜெக்ட் எல்லாம் முடிந்து விட்டதா? ரெடி பண்ணி விட்டீர்களா? காண்பியுங்கள் என்று கேட்கிறார். பின் நிலா, தன்னுடைய லேப்டாப்பை எடுக்க போனார். ஆனால், அவருடைய டேபிளில் லேப்டாப் இல்லை. நிலா, லேப் காணவில்லை என்று பதற்றத்துடன் தேடிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது