நிலாவிடம் ஓவராக வழிந்து தள்ளும் ராகவ், சந்தோஷத்தில் குதிக்கும் சோழன் - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் தம்பிகள் எல்லோருமே சேர்ந்து சேரனை கலாய்த்து கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் நடேசன், நிலாவின் கையில் அடிபட்ட விஷயத்தை வீட்டில் சொன்னார். சேரன், பல்லவன், சோழன் எல்லோருமே பதறிப் போனார்கள். சோழன் ரொம்பவே வருத்தப்பட்டார். பின் சேரன், இனிமேல் நிலாவை நீயே வேலைக்கு அழைத்து செல் என்று சோழனுக்கு ஆர்டர் போட்டார். இது எல்லாம் பார்த்து நிலாவிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
சோழன், நிலாவை வெறுப்பேற்றுவதற்காக மேட்ரிமனியில் பெண்களை பார்த்து கொண்டு இருந்தார். நிலா, என்ன ஆச்சு? என்று விசாரித்தார். அப்போது சோழன், விவாகரத்தான பிறகு நான் உங்களை நினைத்து சோகத்தில் இருப்பேன். அது வேண்டாம் என்று தான் எனக்காக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். இதைக் கேட்டு நிலாவிற்கு கடுப்பாகி உள்ளே சென்று விட்டார். இதெல்லாம் பார்த்து சோழனுக்கு சந்தோஷமாக இருக்கிறது.
அய்யனார் துணை:
அடுத்த நாள் நிலா, புது ப்ராஜெக்ட் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று பதட்டத்தில் இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே நிலாவிற்கு வாழ்த்துக்களை சொன்னார்கள். பின் நிலாவும் பதட்டத்துடன் ஆட்டோவில் ஆபிஸிற்கு வந்தார். பின் ஆபிஸில் ராகவ், ப்ராஜெக்ட் எல்லாம் முடிந்து விட்டதா? ரெடி பண்ணி விட்டீர்களா? காண்பியுங்கள் என்றார். பின் நிலா, தன்னுடைய லேப்டாப்பை எடுக்க போனார். ஆனால், அவருடைய டேபிளில் லேப்டாப் இல்லை. நிலா, லேப் காணவில்லை என்று பதற்றத்துடன் தேடிக் கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன், நிலா என்னை கட்டிப்பிடித்து காதலை சொன்னார் என்கிறார். இதைக் கேட்டு பல்லவன், பாண்டியன் நம்பவில்லை. இருந்தாலும் சோழன் நடந்ததில்
பாதி உண்மை பாதி கதையை சொல்லி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் ராகவ், நான் டென்ஷனில் உங்களிடம் கோபப்பட்டு விட்டேன். இருந்தாலும் ப்ராஜெக்ட் நல்லபடியாக முடிந்தது. எல்லோரும் பாராட்டினார்கள் என்று சொல்லி ட்ரீட் கொடுப்பதாக சொல்கிறார். ஆபீசில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், நிலா மட்டும் பார்ட்டிக்கு வரவில்லை என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் ராகவ் கட்டாயப்படுத்தி நிலாவை பார்ட்டிக்கு அழைத்து செல்கிறார். ஹோட்டலில் ராகவ், நிலாவை மட்டும் பார்த்து பார்த்து கவனித்துக் கொள்கிறார். அதையெல்லாம் பார்த்து நிலாவிற்கு பிடிக்கவில்லை. ஆபீஸில் எல்லோருமே ராகவ், நிலாவை கவனிப்பதை ஒரு மாதிரியாக பார்த்து சிரிக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து நிலாவிற்கு கஷ்டமாக இருக்கிறது. பின் நிலா, சோழனை ஹோட்டலுக்கு வந்து அழைத்துச் செல்ல வர சொல்கிறார். சோழனும், நிலா இருக்கும் இடத்திற்கு செல்கிறார். பின் நிலா, நான் கிளம்புகிறேன் என்று சொன்னவுடன் ராகவ் முகம் மாறுகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.