தன் பெற்றோர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் நிலா - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி, எதற்காக அவசரமாக செய்கிரீர்கள். பொறுமையாக இருங்கள். எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றார். இதனால் வானதின் அம்மா பயங்கரமாக கோபப்பட்டார்கள். இன்னொரு பக்கம் நிலா, தன்னுடைய தோழிகளிடம் சோழன் செய்த வேலை எல்லாம் சொல்லி பேசிக் கொண்டிருந்தார். அதோடு சோழனை பிடிக்கும் பிடிக்காது என்பது போல இரண்டு மனநிலையிலேயே நிலா பேசிக் கொண்டிருந்தார்.
அதற்குப்பின் பாண்டியன் கடைக்கு வந்த வானதி, எதற்காக இப்படி செய்கிறாய்? என்னை விட்டுட்டு போயிடுவியா என்றார்.
பாண்டியன், நீ தானே என்னை வேண்டாம் என்று சொல்லிப் போனாய். கல்யாண ஏற்பாடுகள் செய்ய சொன்னாய்? என்னை என்ன பண்ண சொல்கிறாய் என்று கேட்டார். பின் பாண்டியனை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்ற வானதி, இந்த கல்யாணம் வேண்டாம். பாண்டியனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. நான் பாண்டியனை தான் கல்யாணம் செய்வேன் என்றார். இதைக் கேட்டு வானதி பெற்றோர்கள் கோபப்பட்டார்கள்.
அய்யனார் துணை:
இன்றைய எபிசோட்டில் நிலாவின் அப்பா, அம்மா அய்யனார் வீட்டிற்கு வருவதால் வீட்டை சேரனும் அவருடைய சகோதரர்களும் சுத்தம் செய்கிறார்கள். அதற்கு பின் நிலாவின் பெற்றோர்கள் வீட்டிற்கு வந்து விட்டார்கள். தன்னுடைய அப்பா, அம்மாவை பார்த்து நிலா எமோஷனலாக அழுகிறார். பின் நிலாவின் அப்பா, அம்மாவை சேரனும் அவருடைய சகோதரர்களும் அன்பாக கவனிக்கிறார்கள். அப்போது நிலாவின் அப்பா, உங்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனதை கேள்விப்பட்டேன். இனிமேல் நீ இங்க இருக்க தேவை இல்லை. எங்களுடன் வீட்டிற்கு வந்துவிடு என்று சொல்கிறார். சோழன் ஷாக் ஆகிறார்.
சீரியல் ட்ராக்:
சேரன், பாண்டியன் யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். பின் நிலாவின் அம்மா, தனியாக உன்னிடம் பேச வேண்டும். வெளியே வா போகலாம் என்று சொல்கிறார். நிலா தயங்கி நிற்கிறார். நிலா அப்பா, பயப்படாதே உன்னை இங்கேயே கொண்டு வந்து விடுகிறேன் என்று அழைத்து செல்கிறார். சோழன், நிலா தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாள் என்று சேரனிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். பின் கோயிலுக்கு நிலாவை அழைத்து செல்கிறார்கள். அங்கு நிலாவின் அப்பா ரொம்ப அக்கறையாக பேசுகிறார். தங்களுடைய வீட்டிற்க்கே வந்து விட சொல்லி கேட்கிறார். நிலா, நான் வரவில்லை இங்கேயே இருக்கிறேன் என்று சொல்கிறார்.
https://www.youtube.com/watch?v=qkN50xUVrnI
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நிலாவிற்காக அவருடைய அம்மா பார்த்து பார்த்து சமைத்து தருகிறார். அந்த சமயம் பார்த்து சோழன் பரோட்டா வாங்கி வந்து தருகிறார். நிலாவும் சோழன் கொடுத்த சாப்பாட்டை தான் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து நிலா அம்மாவிற்கு கடுப்பாகிறது. அதற்கு பின் நிலாவின் அம்மா, உனக்கு சோழனை பிடிக்குமா? என்று கேட்கிறார். நிலா, எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்கிறார். உடனே நிலாவின் அம்மா, எதற்காக விவாகரத்து செய்தீர்கள் என்று கேட்கிறார்.