நிலா கேட்ட கேள்வியால் கொந்தளித்த நடேசன், வலியில் துடிக்கும் சேரன் - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன், சேரன் இருவருமே சோழனை வெளியே விடாமல் பிடித்துக் கொண்டிருந்தார்கள். பின் நிலா வந்தது அறிந்து சோழன் பதறி அடித்துக் கொண்டு காய்த்ரி வந்து இருக்கிறாளா? என்றார். ஆனால், காயத்ரி வரவில்லை. இருந்தாலுமே பயத்தில் சோழன் உள்ளே ரூமிற்குள் சென்று விட்டார். பின் சோழன் புலம்பியது எல்லாம் வீடியோவாக எடுத்து வைத்திருந்ததை பாண்டியன் நிலாவிடம் காண்பித்தார். அதை பார்த்து நிலாவிற்கு சிரித்தார். அதற்கு பின் நிலா, சோழனிடம் பேசுவதற்கு ரூமுக்குள் போனார்.
சோழன், நான் தெரியாமல் பேசிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். காயத்ரியை அழைத்து கொண்டு வரவில்லை தானே என்று கேட்டார். அதற்கு நிலா, நாம் இருவரும் வெளியே போகலாம் வாருங்கள் என்று சொன்னார். பின் சேரன், நிலா சொன்னதால் தான் உன்னை அப்படி பேசினோம் என்றார். அதற்குப்பின் நிலா, சோழன் இருவரும் காரில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது நிலா, நான் பல்லவன் அம்மாவை பார்த்தேன். அவர்களைப் பற்றி விசாரியுங்கள் என்றார் .
அய்யனார் துணை:
அதற்கு சோழன், அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லையே என்றார். நிலா, கண்டிப்பாக அவர்கள் தான். இந்த உண்மையை கண்டுபிடிக்கணும் என்றார். பின் சோழன், நான் செய்தது பெரிய தவறுதான். என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று தான் செய்த தவறுக்கு வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன் போன் எடுக்கவில்லை என்று வானதி வீட்டிற்கு வந்து விட்டார். பின் நடந்ததை எல்லாம் பாண்டியன், பல்லவன் இருவரும் சொன்னார்கள். அதற்குப்பின் பாண்டியன்- வானதி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா- சோழன் இருவருமே பல்லவனின் அம்மாவை பற்றி கேட்பதற்காக நடேசன் இடம் பேசுகிறார்கள். நடேசன், எனக்கு எதுவும் தெரியாது. உங்களுடைய வேலையை பாருங்கள் என்று கடுமையாக பேசுகிறார். உடனே நிலா, நான் பலவனின் அம்மாவை சென்னையில் பார்த்தேன். உங்களுக்கு இந்த உண்மை தெரியும். என்ன நடந்தது? உண்மையை சொல்லுங்கள் என்று கேட்கிறார். ஆனால், நடேசன் உண்மையை சொல்லாமல் நிலாவை திட்டி அனுப்பி விடுகிறார். அதற்குப்பின் பாத்ரூமில் வலிக்கு சேரன் கீழே விழுந்ததால் அவருடைய காலில் அடிபட்டு விடுகிறது.
சீரியல் ட்ராக்:
நடேசன் காலை நீவி விடுகிறேன் என்று இன்னும் வலியை அதிகமாக்கி விடுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே சேரனின் காலில் அடிபட்டதை நினைத்து வருத்தப்படுகிறார்கள். பின் நிலா, பாண்டியன், சோழன், பல்லவன் நான்கு பேருமே சேர்ந்து சமைக்கிறார்கள். இன்னொரு பக்கம் பல்லவனின் அம்மாவை காட்டுகிறார்கள். ரொம்ப கஷ்டத்தில் கடன் காரர்கள் தொல்லையில் பல்லவனின் அம்மா வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய கணவருக்கும் பல்லவனின் அம்மாவுக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் நடந்து சண்டை எல்லாம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து சீரியல் முடிகிறது.