பல்லவன் அம்மா சொன்ன விஷயத்தால் ஆடிப்போன நிலா, வெளிவருமா உண்மை? அய்யனார் துணை

By subhashini · 29/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சந்தா, சேரனுக்கு ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் கடைக்கு வந்த வானதி, பணத்தை ரெடி பண்ணி விட்டாயா? கடைக்கு என்ன பெயர் வைக்க போகிறாய்? என்னிடம் சொல்லவில்லை என்றாலும் வம்பு இழுத்துக் கொண்டு இருந்தார். அதற்கு பாண்டியன், நல்ல நாள் பார்த்து சொல்கிறேன். கடையின் பெயர் சர்பிரைஸ் என்றார். பின் சேரன், சோழன் எல்லோருமே பணத்தை எடுத்துக்கொண்டு பாண்டியன் கடைக்கு சென்று முதலாளி இடம் கொடுத்தார்கள்.

சேரன் மூன்று லட்ச ரூபாய் பணத்தை கடையின் ஓனரிடம் கொடுத்தார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். இனி இந்த கடையின் ஓனர் பாண்டியன் தான் என்று சொன்னார்கள். பின் நிலாவும் அந்த இடத்திற்கு வந்து விட்டார். நிலா, பாண்டியனுக்கு வாழ்த்து சொல்லி கடையில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்தால் இன்னும் கடை டெவலப் ஆகும் என்றெல்லாம் ஐடியா சொன்னார். இது எல்லாம் யாருக்கும் தெரியாமல் ஓரமாக நின்ற பார்த்த வானதி பயங்கரமாக கோபப்பட்டார். பாண்டியன் தன்னை அழைக்காததால் வானதி அங்கிருந்து சென்று விட்டார்.

அய்யனார் துணை:

அதற்குப்பின் எல்லோருமே சேர்ந்து ஹோட்டலுக்கு சாப்பிட போனார்கள். ஆனால், பல்லவன் மட்டும் தன் அம்மா போனதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். எல்லோருமே பல்லவனுக்கு ஆறுதல் சொன்னார்கள். அதற்குப்பின் ஹோட்டலில் இருந்து நிலா, நடேசனுக்கு சாப்பாடு வாங்கி வந்து கொடுத்தார். பின் நிலா, நடேசன் இடம் பல்லவனின் அம்மாவை பற்றி விசாரித்தார். வழக்கம்போல் நடேசன் கோபப்பட்டார். பின் பல்லவன், உங்களுக்கு என் மீது உண்மையாகவே பாசம் இல்லை. என் அம்மா காணாமல் போனாலும் நீங்கள் அந்த ஆளுக்கு தான் சப்போர்ட் செய்கிறீர்கள் என்றெல்லாம் உண்மை தெரியாமல் நிலாவை திட்டினார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பல்லவன் உண்மை தெரியாமல் நிலாவை திட்டியதால் திட்டி விடுகிறார். நிலாவும் எதுவும் பேசாமல் சென்று விடுகிறார். பின் வீடே சோகமாக இருப்பதால் சேரன், பாண்டியன், சோழன் மூவருமே பாட்டு பாடி சந்தோஷப்படுத்துகிறார்கள். நிலாவுமே பல்லவனுக்காக டான்ஸ் எல்லாம் ஆடி பாட்டு பாடுகிறார். அதற்குப்பின் பல்லவன்,+ தான் செய்த தவறை உணர்ந்து நிலாவிடம் மன்னிப்பு கேட்கிறார். நிலாவுமே பல்லவனை மன்னித்து ஏற்றுக் கொள்கிறார். இதையெல்லாம் பார்த்த சேரன், நிலா போன ஜென்மத்தில் அம்மாவாக இருந்திருப்பார் என்று சொல்கிறார். இதைக் கேட்டு சோழனுக்கு பயங்கர கடுப்பாகிறது. தயவுசெய்து தங்கை என்று கூட சொல்லிவிடு அம்மா என்று என்னையும் அழைக்க வைக்காதே என்று சேரனை திட்டி விட்டு செல்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் நிலா, பல்லவன் அம்மாவை பார்த்து விடுகிறார். நிலாவை பார்த்தவுடன் பல்லவன் அம்மாவும் தப்பித்து ஓட பார்க்கிறார். இருந்தும் நிலா அவரை பிடித்து விடுகிறார். பின் நிலா, பல்லவனை விட்டு ஏன் வந்தீர்கள்? அவர்தான் உங்கள் கணவரா? என்றெல்லாம் கேட்கிறார். உடனே பல்லவன் அம்மா, ஆமாம் அவர்தான் உடைய கணவர். அவருக்காக தான் பல்லவனை விட்டு சென்றேன். எங்களுக்கு கடன் பிரச்சினை. அதனால் தான் பணத்தை திருட பார்த்தேன் என்று சொல்கிறார். நிலா, நடேசன் உங்கள் மீது ஏன் கோபப்படுகிறார்? என்கிறார். பல்லவன் அம்மா, எதுவாக இருந்தாலும் அவரிடம் கேட்டுக் கொள் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full