நிலாவை மீண்டும் வீட்டிற்கே அழைத்து செல்ல வந்த பெற்றோர்கள், உடைந்து போன சோழன் - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதியின் அப்பா சொன்னதையே நினைத்து பார்த்து பாண்டியன் ரொம்பவே கவலையில் இருந்தார். இதையெல்லாம் கவனித்த நிலா, சேரன் எல்லோருமே விசாரித்தார்கள். ஆனால், பாண்டியன் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார். அதற்குப்பின் நிலா சொல்லும் வேலைகள் எல்லாம் சோழன் செய்தார். ஆனால், நிலா அதை எதையுமே ஏற்று கொள்ளவில்லை. சேரன், பல்லவனிடம் தான் நிலா உதவி கேட்டார். வானதியின் பெற்றோர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொண்டிருந்தார்கள்.
வானதி, எதற்காக அவசரமாக செய்கிரீர்கள். பொறுமையாக இருங்கள். எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றார். இதனால் வானதின் அம்மா பயங்கரமாக கோபப்பட்டார்கள். இன்னொரு பக்கம் நிலா, தன்னுடைய தோழிகளிடம் சோழன் செய்த வேலை எல்லாம் சொல்லி பேசிக் கொண்டிருந்தார். அதோடு சோழனை பிடிக்கும் பிடிக்காது என்பது போல இரண்டு மனநிலையிலேயே நிலா பேசிக் கொண்டிருந்தார்.
அதற்குப்பின் பாண்டியன் கடைக்கு வந்த வானதி, எதற்காக இப்படி செய்கிறாய்? என்னை விட்டுட்டு போயிடுவியா என்றார்.
அய்யனார் துணை:
பாண்டியன், நீ தானே என்னை வேண்டாம் என்று சொல்லிப் போனாய். கல்யாண ஏற்பாடுகள் செய்ய சொன்னாய்? என்னை என்ன பண்ண சொல்கிறாய் என்று கேட்டார். பின் பாண்டியனை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்ற வானதி, இந்த கல்யாணம் வேண்டாம். பாண்டியனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. நான் பாண்டியனை தான் கல்யாணம் செய்வேன் என்றார். இதைக் கேட்டு வானதி பெற்றோர்கள் கோபப்பட்டார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலாவின் அப்பா, அம்மா அய்யனார் வீட்டிற்கு வருவதால் வீட்டை சேரனும் அவருடைய சகோதரர்களும் சுத்தம் செய்கிறார்கள். அதற்கு பின் நிலாவின் பெற்றோர்கள் வீட்டிற்கு வந்து விட்டார்கள். தன்னுடைய அப்பா, அம்மாவை பார்த்து நிலா எமோஷனலாக அழுகிறார். பின் நிலாவின் அப்பா, அம்மாவை சேரனும் அவருடைய சகோதரர்களும் அன்பாக கவனிக்கிறார்கள். அப்போது நிலாவின் அப்பா, உங்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனதை கேள்விப்பட்டேன். இனிமேல் நீ இங்க இருக்க தேவை இல்லை.
சீரியல் ட்ராக்:
எங்களுடன் வீட்டிற்கு வந்துவிடு என்று சொல்கிறார். சோழன் ஷாக் ஆகிறார். சேரன், பாண்டியன் யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். பின் நிலாவின் அம்மா, தனியாக உன்னிடம் பேச வேண்டும். வெளியே வா போகலாம் என்று சொல்கிறார். நிலா தயங்கி நிற்கிறார். நிலா அப்பா, பயப்படாதே உன்னை இங்கேயே கொண்டு வந்து விடுகிறேன் என்று அழைத்து செல்கிறார். சோழன், நிலா தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாள் என்று சேரனிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். பின் கோயிலுக்கு நிலாவை அழைத்து செல்கிறார்கள். அங்கு நிலாவின் அப்பா ரொம்ப அக்கறையாக பேசுகிறார். தங்களுடைய வீட்டிற்க்கே வந்து விட சொல்லி கேட்கிறார். நிலா, நான் வரவில்லை இங்கேயே இருக்கிறேன் என்று சொல்கிறார்.