நிலாவின் பெற்றோர் சொன்ன வார்த்தையால் ஷாக் ஆன சோழன், இனி நடக்கப்போவது என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன் தலையில் கை, காலில் எல்லாம் அடிப்பட்டு இருக்கிறது. அதை பார்த்து நிலாவிற்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. சோழன் ரொம்ப எமோஷனாக அழுது கொண்டிருந்தார். நிலா, ஒன்னும் இல்லை. நீங்கள் தைரியமாக
இருங்கள் ஒன்றும் ஆகாது என்றார். அதற்குப்பின் சேரன், பாண்டியன் இருவரும் சோழனுடைய காதலை சொல்லி புரிய வைத்தார்கள். அதோடு சோழன் செய்த தவறுக்காக மன்னிப்பும் கேட்டார்கள். நிலா, எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்.
அதற்கு பின் தன் தோழியிடம் நிலா, என்ன செய்வது என்று புரியவில்லை என்றார். நிலாவின் தோழி, எதுவாக இருந்தாலும் நிதானமாக பொறுமையாக யோசி என்றார். அதற்கு பின் நிலா, உங்களுக்கு ஆறு மாதம் ஆகாசம் கொடுக்கிறேன். அதற்குப்பின் செட் ஆகவில்லை என்றால் நான் சென்று விடுவேன் என்றார். சோழன் சந்தோஷத்தில் எழுந்து நின்று துள்ளி குதித்தார். அதை பார்த்து நிலாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. சேரன்- பாண்டியன் குழம்பி நின்றார்கள். சோழனின் ஓனர் அமைதியாக படு என்றார். சோழனுமே அடிபட்டது போல் மீண்டும் நடித்தார்.
அய்யனார் துணை:
நடேசன், உண்மையை சொல் உனக்கு அடிபட்டு இருக்கா, நடிக்காதே என்று கேட்டார். சேரன், பாண்டியன், பல்லவன் எல்லோருமே சோழனிடம் விசாரித்தார்கள். நிலாவுமே கோபப்பட்டு திட்டினார். சோழன், மீண்டும் மீண்டும் வலி இருப்பது போலவே நடித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சோழனின் ஓனர் உண்மையை சொல்லி விட்டார். நான் தான் இப்படி செய்ய சொன்னேன். நிலா- சோழனை சேர்த்து வைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றார். இதனால் கொந்தளித்த நிலா, நீ திருந்தவே மாட்டாய்.
சீரியல் ட்ராக்:
நான் இங்கிருந்து கிளம்புகிறேன் என்றார். சோழன், வழியை மறைத்து நிலாவின் காலில் விழுந்து கெஞ்சி கதறுகிறார். சேரன், நடேசன் எல்லோருமே சோழனை திட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் நிலா, உனக்கு ஆறு மாதம்தான் அவகாசம். நீ மீண்டும் பொய் சொல்லி ஏமாற்றி இருந்தாய் நான் உன்னை விட்டு சென்று விடுவேன் என்று ஒரு வாய்ப்பு கொடுத்தார். இதனால் சோழன் ரொம்பவே சந்தோஷப்பட்டார். இருந்தாலும் சேரன், நடேசன் எல்லோருமே சோழன் செய்த தவறை மன்னிக்காமல் திட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்கு பின் எல்லோருமே கிளம்பி வீட்டிற்கு வந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=9s6Q1TeD_Ns
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் நிலாவின் அப்பா-அம்மா இருவரும் அய்யனார் வீட்டிற்கு வருகிறார்கள். நடேசன், இத்தனை நாள் இல்லாமல் எதற்காக இப்ப வந்தீர்கள்? என்று கேட்கிறார். நிலாவின் அப்பா, இருவருக்கும் தான் விவாகரத்து ஆகிவிட்டது. என் மகளை என்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்று சொன்னார். இதைக் கேட்டு நிலா- சோழன் இருவரும் ஷாக் ஆகிறார்கள்