பல்லவன் ரகசியத்தை மறைக்க நிலாவிடம் சத்தியம் வாங்கும் சேரன், அடுத்து என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பல்லவனை அம்மா, பல்லவன் என் மகன் தான். நடேசன் அவனுடைய அப்பா கிடையாது என்றார். இதனால் நிலாவிற்கு பயங்கர குழப்பம் வந்தது. பல்லவன் அம்மா, இனிமேல் எதுவாக இருந்தாலும் அந்த ஆளிடம் கேட்டுக் கொள் என்று அங்கிருந்து சென்று விட்டார். பின் நிலா வீட்டிற்கு வந்து நடேசனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார். பின் கோயிலுக்கு சென்ற நிலா, பல்லவன் உங்கள் மகன் கிடையாதா? பல்லவன் அம்மாவிற்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டார். நடேசன் எந்த பதிலும் சொல்ல முடியாமல் மறுத்தார்.
கடைசியில் நிலா கட்டாயப்படுத்தியதால் நடேசன் உண்மையை சொன்னார். நான் வெளியில் வேலைக்கு போயிட்டு வீட்டிற்கு வர மாச கணக்கு ஆகும். அதனால் போகும் இடங்களில் எல்லாம் வீட்டு சாப்பாடு மாதிரி இருக்கும் ஹோட்டல்களை பார்த்து வைத்துக் கொள்வேன். அப்படி குஜராத்தில் ஒரு ஓட்டலில் இருந்தவர்தான் பல்லவன் அம்மா. அவருடைய கணவர் எனக்கு நன்றாக பழக்கம். அவர் திடீர் என்று ஒரு நாள் இறந்து விட்டார். அப்போது பல்லவன் கைக்குழந்தை. அங்கு ஒரு நபர் தன்னை கல்யாணம் செய்துக்கொள் என்று தினம் டார்ச்சர் செய்வதால் பல்லவன் அம்மா என்னிடம் உதவி கேட்டார்.
அய்யனார் துணை:
அதனால் நானும் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தேன். அவன் மீண்டும் வந்தவுடன் பல்லவன் அம்மா சொல்லாமல் கொள்ளாமல் குழந்தையை என்னிடம் விட்டு கிளம்பி போய் விட்டாள். இப்போது அந்த ஆளுடன் தான் அவள் சுத்தி கொண்டு இருந்தார். எனக்கும் அந்த பெண்ணும் கல்யாணம் ஆகல. அவனுக்கு பல்லவன் பெயர் வைத்ததே நான் தான். அவன் எல்லோரிடமும் சந்தோஷமாக அண்ணன் தம்பியாக பழகிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இந்த உண்மை தெரிந்தால் உடைந்து போய் விடுவான். தயவுசெய்து வெளியில் யாரிடமும் இந்த உண்மையை சொல்லாதே என்றார். இதைக் கேட்டு நிலா ரொம்பவே எமோஷனலானார். இதையெல்லாம் யாருக்கும் தெரியாமல் சேரன் கேட்டு விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, நீங்கள் எப்போது வந்தீர்கள்? எல்லா விஷயமும் உங்களுக்கு தெரிந்து விட்டதா? என்று கேட்கிறார். சேரன் எமோஷனலாக கண்கலங்கி எல்லாம் எனக்கு இப்போதான் புரிகிறது. பல்லவன் அம்மாவை அப்பா திருமணம் செய்யவில்லை என்பது தெரியும். ஆனால், அந்த சமயத்தில் என்னால் பேச முடியவில்லை. அப்படியே பிரச்சினைகள் பெரிதாகி அப்பா ஜெயிலுக்குப் போய்விட்டார். நான் தான் தம்பிகளை பார்த்துக் கொள்ள வேண்டும்.
சீரியல் ட்ராக்:
பல்லவனையும் அப்படியே நாங்கள் பார்த்து வளர்த்தோம். நாட்கள் செல்ல செல்ல எல்லாமே மறந்து விட்டது. பல்லவன் எங்களுடைய தம்பி தான். இந்த உண்மையை சோழன், பாண்டியன், பல்லவனுக்கு கூட தெரியக்கூடாது என்று சொல்கிறார். இதைக் கேட்டு நிலா, நீங்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்கள் என்று ரொம்ப எமோஷனலாக அழுகிறார். பின் இருவரும் கோவிலில் இருந்து கிளம்புகிறார்கள். வீட்டில் சோழன், நிலா- அண்ணன் எங்கே என்றெல்லாம் விசாரிக்கிறார். அந்த நேரம் பார்த்து நிலா- சேரன் வருகிறார்கள். சோழன், பாண்டியன், பல்லவன் மூவருமே மாற்றி மாற்றி சேரன், நிலாவிடம் கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் இருவருமே ஏதேதோ சொல்லி சமாளித்து விடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.