நிலா கேட்ட கேள்வியால் சேரனை அடிக்க போகும் சோழன், வானதியின் வன்மம் - அய்யனார் துணை

By subhashini · 9/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், தன் ஓனரிடம் ராகவ் விஷயத்தை பற்றி சொல்லி புலம்பி கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் வேலை முடித்துவிட்டு நிலா கிளம்ப பார்த்தார். உடனே ராகவ், சின்ன வேலை இருக்கிறது காத்துக் கொண்டிருங்கள் என்றார். எல்லோரும் கிளம்பியுமே நிலாவை விடாமல் ஆபீஸ்லயே இருக்க சொன்னார். அதற்குப்பின் பாண்டியன் கடைக்கு வந்த வானதி, தன்னுடைய அப்பா- அம்மா பேசிய விஷயத்தை சொல்லி ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

ராகவ், உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உங்களை காதலிக்கிறேன் என்று சொன்னார். இதைக் கேட்டு கோபப்பட்ட நிலா, நான் ஏற்கனவே கல்யாணமானவள். அப்படியெல்லாம் பேசாதீர்கள் என்றார். ராகவ், உங்கள் கல்யாண கதை. எல்லாம் எனக்கு தெரியும். இப்பதான் சேரன் இடம் பேசி விட்டு வருகிறேன் என்றார். இதனால் நிலாவிற்கு இன்னும் கோபம் அதிகமானது. ராகவ், நீங்கள் எதற்கு அந்த வீட்டில் இருக்கிறீர்கள்? நீங்கள் எதற்காக அங்க இருக்கணும், உங்களுக்கு நான் வீடு வாங்கி தருகிறேன்.

அய்யனார் துணை:

அங்கு வந்து தங்குங்கள். சீக்கிரமாக விவாகரத்து செய்துவிட்டு வந்து விடுங்கள் என்றெல்லாம் சொன்னார். இதனால் கொந்தளித்த நிலா, ராகவை திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இன்னொரு பக்கம் கடுப்பில் இருந்த சோழன் பாண்டியன் போனை கீழே போட்டு உடைத்து விட்டார். இதனால் சோழன்- பாண்டியன் இடையே சண்டை நடக்கிறது. ஒரு வழியாக சேரன் அதை தடுத்து விட்டார். நிலா வீட்டுக்கு வராததால் சேரன் வருத்தமாக வாசலிலேயே பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த வானதி, பாண்டியனிடம் பேசிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து இன்னும் சோழனுக்கு பயங்கர கடுப்பானது.

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோட்டில் வீட்டிற்கு வந்த நிலா, சேரனை பார்த்து உங்களுக்கு அறிவில்லையா? என்று கேட்கிறார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆகி நிற்கிறார்கள். சேரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. நிலாம், ராகவிடம் எதற்காக என்னுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி சொன்னீர்கள். யார் கேட்டாலும் சொல்லிவிடுவீர்களா? அறிவில்லையா? என்றெல்லாம் திட்டிக் கொண்டிருக்கிறார். சேரனால் எதுவுமே பேச முடியவில்லை. கோபத்தில் சோழன், நீங்கள் எதற்காக ராகவிடம் சொன்னீர்கள் என்கிறார். நிலா, ராகவ் சொன்ன விஷயத்தை எல்லாம் வீட்டில் சொல்லி ரொம்பவே வருத்தப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

இதைக்கேட்ட சோழன், கொந்தளித்து சேரனை அடிக்க கை ஓங்கி விடுகிறார். பாண்டியன், அண்ணன் மீது கை எடு என்று சொல்கிறார். இதனால் கோபத்தில் சோழன், பாண்டியனை கீழே தள்ளி விடுகிறார். இதை பார்த்த வானதி கொந்தளித்து சோழனிடம் சண்டைக்கு போகிறார். அதோடு வானதி, நிலாவை ரொம்பவே காயப்படுத்தி பேசுகிறார். இதனால் சோழனுக்கு இன்னும் கோவம் அதிகமாகிறது. பாண்டியன் பிரச்சனை பெரிதாகும் என்று வானதியை அங்கிருந்து அழைத்து செல்கிறார். பின் நிலா-சோழன் இருவரும் சேர்ந்து சேரனை திட்டி விட்டு அங்கிருந்து செல்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full