பல்லவன் அம்மா செய்த திருட்டு வேலையை சொன்ன நிலா, அதிர்ச்சியில் சோழன் - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் கோமலு, இதற்கு தான் இங்கு நான் இத்தன நாட்களாக வராமல் இருந்தேன். அவருக்கு என்னை பிடிக்கவில்லை என்றெல்லாம் நாடகமாடினார். இதெல்லாம் பார்த்து பல்லவனுக்கு பயங்கர கோபம் வந்தது. பின் வீட்டில் தன்னுடைய அண்ணன்களிடம் நடந்ததை எல்லாம் பல்லவன் சொல்லி புலம்பினார். அதற்குப்பின் எல்லோரும் தூங்கி விட்டார்கள். கோமலு, அவருடைய கணவர் இருவருமே வீட்டிற்கு பின்பக்கம் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோமலு, பணத்தை சீக்கிரம் எடுத்துக் கொண்டு வருகிறேன். இங்கிருந்து கிளம்பு என்றார். இதை கேட்ட நிலா ஷாக் ஆனார்.
கோமலு, எப்பயோ விட்டுப் போனது. இப்ப பார்த்த உடனே அவன் மீது தாய் பாசம் வந்துவிடுமா? பணத்தை வைத்திருக்கும் இடத்தை பார்த்து விட்டேன். ஒரு ஐந்து நிமிடம் இரு பணத்தை எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன். பணத்தை எடுத்துக் கொண்டு வருகிறேன். இரண்டு பேரும் சேர்ந்து கிளம்பிடலாம் என்று தன் கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் கேட்டு நிலா ஷாக் ஆனார். பின் கோமலு பணத்தை எடுக்க உள்ளே போனார். பின் தொடர்ந்த நிலா, என்ன நடக்கிறது? எதற்காக இப்படி செய்கிறீர்கள்? என்றார். எதுவும் பேசாமல் கோமலு அங்கிருந்து தப்பித்து தன் கணவரை அழைத்துக் கொண்டு ஓடினார்.
அய்யனார் துணை:
நிலாவால் பிடிக்கவே முடியவில்லை. பின் வீட்டில் யாரிடமும் நிலா உண்மை சொல்லாமல் அமைதியாக இருந்தார். மறுநாள் காலையில் பல்லவன், தன்னுடைய அம்மா காணவில்லை என்று வீடு முழுவதும் தேடினார். ஆனால், கிடைக்கவில்லை. நடேசன் தான் இதெல்லாம் செய்திருப்பார் என்று தன்னுடைய அப்பாவிடம் கோபப்பட்டார். ஆனால், நடேசன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். நிலா எந்த உண்மையும் சொல்ல முடியாமல் பல்லவனை சமாதானம் செய்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பல்லவன், தன் அம்மா வீட்டை விட்டு போனது நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். நிலா எவ்வளவு ஆறுதல் சொல்லியும் பல்லவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கு பின் பல்லவனை கல்லூரியில் விட்டு நிலா- சோழன் இருவரும் வருகிறார்கள். அப்போது நிலா, பல்லவனின் அம்மா செய்த வேலை எல்லாம் சொல்கிறார். இதைக்கேட்டு சோழனுக்கு ஷாக் ஆகிறது. பின் நிலா- சோழன் இருவருமே பல்லவன் அம்மா இருந்த இடத்திற்கு போகிறார்கள். ஆனால், அங்கு வீடு பூட்டி கிடக்கிறது. இருவருக்குமே பல்லவன் அம்மா மீது சந்தேகம் இன்னும் அதிகமாகிறது.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் சேரன், பல்லவன் அம்மா வந்ததையும் அவர் திரும்ப மீண்டும் சென்றதையும் பற்றி சந்தாவிடம் சொல்லி வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். சந்தா, சேரனுக்கு ஆறுதல் சொல்கிறார். இன்னொரு பக்கம் கடைக்கு வந்த வானதி, பணத்தை ரெடி பண்ணி விட்டாயா? கடைக்கு என்ன பெயர் வைக்க போகிறாய்? என்னிடம் சொல்லவில்லை என்றாலும் வம்பு இழுத்துக் கொண்டு இருக்கிறார். அதற்கு பாண்டியன், நல்ல நாள் பார்த்து சொல்கிறேன். கடையின் பெயர் சர்பிரைஸ் என்கிறார். பின் சேரன், சோழன் எல்லோருமே பணத்தை எடுத்துக்கொண்டு பாண்டியன் கடைக்கு சென்று முதலாளி இடம் கொடுக்கிறார்கள்.