தனக்கும் சோழனுக்கும் இடையேயான உறவை பற்றி சொன்ன நிலா, அதிர்ச்சியில் ராகவ் - அய்யனார் துணை

By subhashini · 1/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, சோழனை சமாதானம் செய்ய பேசி இருந்தார். சோழன் கோபமாக பேசிவிட்டு சவாரிக்கு கிளம்பினார். இது எல்லாம் நினைத்து நிலா வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து நிலாவிற்கு ராகவ் மெசேஜ் செய்தார். நிலா ரிப்ளை செய்யாமல் தான் இருந்தார். இருந்தாலுமே விடாமல் ராகவ் மெசேஜ் செய்து கொண்டிருந்தார். பின் ராகவ் போன் செய்தார். இதெல்லாம் பார்த்து நிலாவிற்கு கோபம் தான் வருகிறது.

அதற்குப் பின் சோழன் சொன்ன விஷயத்தைப் பற்றி பாண்டியன், சேரன் இருவரும் நிலாவிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் ரொம்ப சந்தோசமாக சிரித்துக்கொண்டு நிலாவிடம் பேசுவதை வானதி பார்த்து விட்டார். இதனால் நிலாவின் மீது வானதிக்கு பயங்கர கோபம் வந்தது. அதற்குப்பின் ஆபீஸில் ராகவ், நிலாவிற்காக ஒரு வாட்சை கிப்டாக கொடுத்தார். பின் ராகவ் அதை ஸ்டேட்டஸிலும் வைத்திருந்தார். அதை சோழன் பார்த்துவிட்டு பயங்கரமாக கோபப்பட்டார்.

அய்யனார் துணை:

சோழன், ராகவ் செய்த வேலையால் ரொம்பவே கோபப்பட்டார். பின் வீட்டிற்கு வந்த சோழன் புலம்பி கொண்டிருந்தார். நடேசன், தான் வாங்கி வந்த சாப்பாட்டை சோழனுக்கு கொடுத்து சாப்பிட சொன்னார். அப்போது சோழன், ரொம்ப எமோஷன் ஆக தன்னுடைய வாழ்க்கையை பற்றி புலம்பி கொண்டிருந்தார். நடேசன் அறிவுரை சொன்னார். இன்னொரு பக்கம் பாண்டியன் தன்னுடைய கடைக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்குவதற்க்கு பெங்களூர் கிளம்பினார். அந்த சமயம் வந்த வானதி, நானும் பெங்களூர் வருகிறேன் என்று அடம் பிடித்தார்.

சீரியல் ட்ராக்:

பாண்டியன் வேண்டாம் என்று சொல்லியும் வானதி கேட்கவில்லை. ஒரு வழியாக வானதி பாண்டியனுடன் வந்தார். பின் பாண்டியன் தன்னுடைய வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது வானதி, நேரமாகிவிட்டது வீட்டிற்கு போகவேண்டும் என்று சண்டை வாங்கினார். இதனால் கோபப்பட்ட பாண்டியன், இதனால் தான் நான் வேண்டாம் என்று சொன்னேன். இதற்காக மீண்டும் காசு போட்டு செலவு செய்து வர முடியாது. எவ்வளவு நேரம் ஆனாலும் பொருள்களை எல்லாம் வாங்கிக் கொண்டுதான் போகணும் என்று கருதுகிறார். வானதி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

https://www.youtube.com/watch?v=jTGM0bAfHtg

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சோழன், நீங்கள் அவருடைய ஆள் என்று ராகவ் சொன்னார் என்கிறார். இதைக் கேட்டு கோபப்பட்ட நிலா, எதற்காக சோழனிடம் நீங்கள் அப்படி சொன்னீர்கள்? ஸ்டேட்டஸில் எதற்கு அப்படி வைத்திருக்கீர்கள்? உங்களால் எனக்கும் சோழனுக்கும் இடையே நிறைய சண்டை. அவர் என் மீது கோபப்படுகிறார் என்கிறார். ராகவ், அவர் எதற்கு உங்கள் மீது கோபப்படனும் என்று கேட்கிறார். நிலா, அவர்தான் கோபப்படும். அவர் என்னுடைய கணவர் என்று சொல்கிறார். இதைக் கேட்டு ராகவ் ஷாக்காகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full