சோழனின் முகத்திரையை கிழித்து எடுத்த நிலா, அடுத்து என்ன? விறுவிறுப்பில் அய்யனார் துணை

By subhashini · 20/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, நாங்கள் விவாகரத்து செய்யும் விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும் என்றார். அதற்கு அந்த போலீஸ், சோழன் வந்து சொன்ன விஷயத்தை எல்லாம் சொன்னார். அது மட்டும் இல்லாமல் திருமணத்தை ரெஜிஸ்டர் பண்ணுவதற்கு ஆதார் கார்டு கொடுத்த விஷயத்தையும் சொன்னார். ஆதார் கார்டு தேவை என்றபோது சோழன் இல்லை என்று நடித்தது எல்லாம் நினைத்து பார்த்து நிலா ரொம்பவே கோபப்பட்டார். இன்னொரு பக்கம் சோழன், நிலாவின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக தயார் செய்தார்.

நேற்று எபிசோட்டில் நிலாவை, ராகவ் வீட்டில் கொண்டு வந்து விட்டார். ராகவை பார்த்தவுடன் சோழனுக்கு பயங்கர கடுப்பானது. பின் வீட்டினல் நிலாவின் பிறந்தநாள் ஏற்பாடுகளை பார்த்து ராகவ் சர்பரைஸ் ஆனார். ஆனால், நிலா கடும் கோபத்தில் இருந்தார். மீண்டும் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்கள். நிலா, உண்மையை வெளியே சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தார். அதற்குப் பிறகு நிலாவின் பிறந்தநாளுக்கு வந்த வானதி கிப்ட் கொடுத்தார்.

அய்யனார் துணை:

அதற்குப்பின் சந்தாவும், நிலாவின் பிறந்தநாளுக்காக வீட்டிற்கு வந்து கிப்ட் கொடுத்து வாழ்த்து சொன்னார். பின் வீட்டில் எல்லோருமே கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், நிலா மட்டும் சோழன் மீது பயங்கர கோபத்தில் இருந்தார். அதற்குப்பின் சோழன், தன்னுடைய தம்பிகளிடம் தன் காதலை சொல்ல போகும் விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது வந்த நிலா, வெளியில் போகலாமா என்று சொன்னார். சோழனும் சரி என்கிறார். பின் நிலா-சோழன் இருவருமே பீச்சுக்கு சென்றிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன், நம்முடைய திருமணம் எதிர்பாராமல் நடந்தாலும் நான் உங்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறேன் என்று தன் மனதில் இருக்கும் காதலை சொல்லி விடுகிறார். இதையெல்லாம் கேட்டு இன்னும் கோபப்பட்ட நிலா, நம்முடைய விவாகரத்தை பற்றி போலீஸிடம் சொன்னது நீங்கள் தானே, நான் போலீஸ் ஸ்டேஷன் சென்று எல்லாம் விசாரித்து விட்டேன். உங்களைப் பற்றிய சுயரூபம் எல்லாம் வெளிவந்துவிட்டது.

சீரியல் ட்ராக்:

நீங்கள் இவ்வளவு ஏமாற்றுக்காரர் என்று தெரியாது. இப்படியா பொய் சொல்லி ஏமாற்றுவீர்கள். நான் ஆதார் கார்டுகாக அலைந்து கொண்டிருக்கும்போது நீங்கள் ஒன்னும் தெரியாதவர் போல நடித்தீர்கள். திருமணத்தை வேண்டுமென்றே எனக்கு தெரியாமல் ரிஜிஸ்டர் பண்ணி இருக்கிறீர்கள். நீங்கள் இவ்வளவு மோசமானவரா? என்று கொந்தளிக்கிறார். இதைக்கேட்டு சோழன் எதுவும் பேச முடியாமல் வாய் அடைத்துப் போனார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full