சேரன் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியடைந்த நிலா, சந்தோஷத்தில் சோழன் - அய்யனார் துணை

By subhashini · 26/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, வானதி அண்ணன் பேசியதை சொன்னார். அப்போது பல்லவன், இதற்கு முன்பு வானதி அண்ணன் பேசியது எல்லாம் சொன்னார். கொந்தளித்த பல்லவன், சேரன், சோழன் மூவருமே வானதி அண்ணனிடம் போய் சண்டை போட்டார்கள். அந்த சமயம் வந்த பாண்டியனும் வானதி அண்ணனை வெளுத்து வாங்கினார். கோபப்பட்ட வானதியின் அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் சோழன் குடும்பத்தின் மீது புகார் கொடுத்தார். வானதி, உண்மை தெரிந்து கொண்டு செய்யலாம் என்று சொல்லியுமே அவர் அம்மா கேட்கவில்லை.

வானதியின் குடும்பத்தினர் கவுன்சிலரை அழைத்துக் கொண்டு சோழன் வீட்டில் பிரச்சனை செய்தார்கள். சோழன் வீட்டில் இருப்பவர்களும் பதிலுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து போலீஸ் வந்தார்கள். வானதி அம்மா, சோழன் குடும்பத்தின் மீது பொய்யான புகார் கொடுத்த்தால் போலீஸ் கைது செய்ய பார்த்தார்கள். உடனே நிலா, வானதி அண்ணன் செய்த வேலையை போலீசிடம் சொன்னார். இருந்தாலுமே அவர்கள் கேட்கவில்லை. நடேசன் தங்கை, அவர் கணவன் எல்லோருமே தங்களுக்கு தெரிந்த ஊர் மக்களை அழைத்துக் கொண்டு வந்து சோழன் வீட்டிற்கு எதிராகவே பேச வைத்தார்.

அய்யனார் துணை:

போலீஸ், சோழன் குடும்பத்தின் மீது தான் தப்பாக நினைத்தது. அந்த நேரம் பார்த்து வந்த வானதி, பாண்டியனை காதலிக்கும் விஷயத்தையும் நிலாவிடம் தன் அண்ணன் நடந்து கொண்ட விஷயத்தை பற்றி எல்லாம் சொன்னார். பின் போலீஸ் இருதரப்பிலுமே விசாரித்தார்கள். நிலாவுமே, வானதி அண்ணன் புகார் கொடுப்பதாக சொன்னார்கள். உடனே போலீஸ், ரெண்டு தரப்பிலும் நான் கைது செய்வேன். கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொன்னார். இதனால் வானதியின் அம்மா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் நிலா புகார் கொடுத்தால் தன் மகனை கைது செய்து விடுவார்கள் என்று பயந்து வானதியின் அப்பா -அம்மா இருவருமே புகார் கொடுக்கவில்லை. பின் போலீஸ் இரண்டு தரப்பினருக்கும் அறிவுரை சொல்லி அனுப்பி வைக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் வானதி தான் என்று அவருடைய அம்மா அடிக்கிறார். உடனே பாண்டியன், அவளுக்கு ஏதாவது ஒன்று என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று மிரட்டுகிறார். இதைக் கேட்டு வானதி ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் வீட்டில் சேரன், இனிமேல் நிலா தனியாக போக வேண்டாம். அவருடன் நாம் யாராவது ஒருத்தர் போகலாம் என்று சொல்கிறார். உடனே சோழன், அவங்க சுதந்திரமாக வாழனும் நினைத்தார்கள்.

சீரியல் ட்ராக்:

ஊரில் பேசுவதற்கெல்லாம் இப்படி பயப்படக்கூடாது என்று பேசுகிறார். இதையெல்லாம் கேட்டு நிலா சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் வானதியின் வீட்டில் அவருடைய அம்மா பயங்கரமாக போட்டு அடிக்கிறார். பின் வானதி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று வீட்டையும் பூட்டி போனை எல்லாம் பிடுங்கி வைத்துக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் சோழன், நிலா பேசியதையும் பாண்டியன், வானதி பேசியதையும் நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதற்கு பின் சேரன், நிலா -சோழனை மட்டும் வீட்டில் தங்க சொல்லி விட்டு மற்றவர்கள் வெளியில் போகலாம் என்கிறார். அதற்கு சோழன் வேண்டாம் என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full