உண்மையை போட்டுடைத்த போலீஸ், சோழனின் சுயரூபத்தை அறிந்து கொந்தளித்த நிலா - அய்யனார் துணை

By subhashini · 18/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, போலீசுக்கு விவாகரத்து விஷயம் எப்படி தெரிந்தது என்று கேட்டார். அதற்கு சோழன், ஏதேதோ சொல்லி சமாளித்தார். இருந்தாலுமே நிலாவிற்கு சந்தேகமாக இருந்தது. அதற்குப்பின் இரவு 12 மணிக்கு நிலாவின் பிறந்தநாள் என்பதால் சோழன் கேக் வாங்கி மெழுகுவத்தி எல்லாம் ஏற்றி சர்ப்ரைஸ் கொடுத்தார். நிலாவும் அதை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டு கேக்கை வெட்டினார்.

வீட்டில் உள்ள எல்லோருமே நிலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னார்கள். மறுநாள் காலையில் வீட்டில் உள்ள எல்லோரும் நிலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கிப்ட் கொடுத்தார். அப்போது சோழன் நிலவிற்காக வாங்கி வைத்த புடவையை கொடுத்தார். அதை பார்த்து நிலா ரொம்ப சந்தோசப்பட்டார். சோழன் வாங்கி தந்த புடவையை நிலா கட்டிக்கொண்டு வந்தார். அதை பார்த்து சந்தோஷத்தில் சோழன் நடனமாடினார். அதற்குப்பின் சோழன், நிலா, பல்லவன் கோயிலுக்கு போனார்கள்.

அய்யனார் துணை:

அங்கு சோழன் தன்னுடைய மனதில் இருக்கும் காதலை சொல்ல நினைத்தார். ஆனால், நிலா விவாகரத்து பற்றிய பேசிக் கொண்டிருப்பதால் சோழனால் எதுவும் சொல்ல முடியவில்லை. அதற்கு பின் சோழன் வேண்டுதல் என்று கோயிலை சுற்றி அங்கபிரதசனம் செய்தார். நிலா, எதற்கு என்று கேட்டார். அதற்கு சோழன், நீங்கள் உங்க அப்பா அம்மாவுடன் சேர வேண்டும் என்று சொல்வதால் நிலா திட்டி விட்டார். கடைசியில் சோழனின் இடுப்பு எலும்பு உடைந்தது தான் மிச்சம். அதற்குப்பின் நிலா வேலைக்கு சென்று விட்டார்.

நேற்று எபிசோட்:

அப்போது நிலா மீண்டும் அந்த போலீசுக்கு போன் செய்து பேசி இருந்தார். அந்த போலீஸ் நேரில் வர சொன்னார். நிலாவுமே ஆபீஸில் பர்மிஷன் கேட்டு கிளம்பினார். அப்போது ராகவ், நான் அந்த வழியாகத்தான் செல்கிறேன். உங்களை நானே கொண்டு போய் விடுகிறேன் என்றார். பின் ராகவ், நிலாவை பற்றி எல்லாம் விசாரித்தார். ஏதேதோ பதிலை சொல்லி நிலா சமாளித்தார். இன்னொரு பக்கம் நிலாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க சோழன் வீட்டை அலங்காரம் செய்து கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன நிலா, நாங்கள் விவாகரத்து செய்யும் விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறார். அதற்கு அந்த போலீஸ், சோழன் வந்து சொன்ன விஷயத்தை எல்லாம் சொல்கிறார். இதை கேட்டு நிலா பயங்கரமாக கோவப்படுகிறார். அது மட்டும் இல்லாமல் திருமணத்தை ரெஜிஸ்டர் பண்ணுவதற்கு ஆதார் கார்டு கொடுத்த விஷயத்தையும் சொல்கிறார். ஆதார் கார்டு தேவை என்று போராடும்போது சோழன் இல்லை என்று நடித்தது எல்லாம் நினைத்து பார்த்து நிலா ரொம்பவே வேதனைப்படுகிறார். இன்னொரு பக்கம் சோழன், நிலாவின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக பயங்கரமாக ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full