சந்தாவின் நிலைமையை கண்டு வருத்தப்படும் நிலா, கவலையில் சேரன் - பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், பாண்டியன் இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். சந்தாவின் முறைமாமன் வீட்டிற்கு வருகிறார் என்று தெரிந்தவுடன் சேரன், நீங்கள் இங்கிருக்க தேவையில்லை. சந்தாவை அழைத்துக் கொண்டு நீ முதலில் இருந்து கிளம்பு அனிஷ் என்றார். அனிஷ்-சந்தா கிளம்பி போனார்கள். வானதி, பல்லவனை அழைத்துக் கொண்டு பைக்கில் வந்தார். இன்னொரு பக்கம் சந்தாவின் வீட்டிற்கு முறை மாமனும் வந்து கொண்டிருந்தார்.
அனிஸ்- சந்தா இருவரும் தப்பித்து ஓடி வந்தார்கள். அப்போது அங்கு வந்த பல்லவன் வானதி, சந்தாவிடம் விசாரித்தார்கள். அந்த இடத்திற்கு சந்தாவின் முறைமாமனும் தன்னுடைய ஆட்களுடன் வந்து விட்டார். சந்தா ரொம்பவே பயந்து போனார். உடனே வானதி, சந்தாவை தன்னுடைய வண்டியில் அழைத்துக் கொண்டு சென்றார். அதற்குப்பின் சந்தாவின் முறை மாமன்கள் அனிஷ் வீட்டிற்கு போனார்கள். உடனே பாண்டியன், இங்கு இந்திக்காரர்கள் யாரும் இல்லை. வீடு வாடகைக்கு விடுவதாக சொன்னார்கள். சந்தா முறை மாமனால் எதுவும் பேச முடியவில்லை.
அய்யனார் துணை:
அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் வானதி அம்மா, சந்தாவை பார்த்து யாரு இந்த பெண்? எதற்காக இங்கே வந்திருக்கிறாய்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். வானதி ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டார். வானதியின் பெற்றோர்கள், சந்தா இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார்கள். பின் இதை பற்றி வானதி, பாண்டியன் இடம் சொன்னார். சேரன் ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் கல்லூரியில் பல்லவன், தன்னுடைய அண்ணனுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டு கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரன், சந்தாவை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். பாண்டியன் ஆறுதல் சொல்கிறார். அதற்குப்பின் சோழன், பாண்டியனுக்கு போன் செய்து விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது சந்தாவிற்கு நடந்ததை எல்லாம் பாண்டியன் சொல்கிறார். அதைக் கேட்டுச் சோழன் ஷாக் ஆகிறார். பின் இதைப் பற்றி சோழன், நிலாவிடம் சொல்கிறார். உடனே நிலா, சேரனுக்கு போன் செய்து விசாரிக்கிறார். சேரணுமே நிலாவிடம் நடந்ததை சொல்லி வானதி வீட்டில் சந்தா இருக்கும் விஷயத்தை பற்றி சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
நிலா, வானதி செய்த காரியத்தை ரொம்ப பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். நிலா- சோழன் இருவருமே ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். உடனே சோழன், நீங்கள் என் அருகில் இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று சொன்னவுடன் நிலா அங்கிருந்து எழுந்து சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் வானதி, சந்தாவிற்கு தேவையான எல்லா உதவியும் செய்து தருகிறார். அப்போது பாண்டியன், வானதிக்கு போன் செய்து விசாரிக்கிறார்.