நடேசனை மோசமாக பேசிய பல்லவனின் கன்னத்தில் அறைந்த நிலா - அடுத்து என்ன? அய்யனார் துணை

By subhashini · 31/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா கட்டாயப்படுத்தியதால் நடேசன் உண்மையை சொன்னார். நான் வெளியில் வேலைக்கு போயிட்டு வீட்டிற்கு வர மாச கணக்கு ஆகும். அதனால் போகும் இடங்களில் எல்லாம் வீட்டு சாப்பாடு மாதிரி இருக்கும் ஹோட்டல்களை பார்த்து வைத்துக் கொள்வேன். அப்படி குஜராத்தில் ஒரு ஓட்டலில் இருந்தவர்தான் பல்லவன் அம்மா. அவருடைய கணவர் எனக்கு நன்றாக பழக்கம். அவர் திடீர் என்று ஒரு நாள் இறந்து விட்டார். அப்போது பல்லவன் கைக்குழந்தை. அங்கு ஒரு நபர் தன்னை கல்யாணம் செய்துக்கொள் என்று தினம் டார்ச்சர் செய்வதால் பல்லவன் அம்மா என்னிடம் உதவி கேட்டார்.

அதனால் நானும் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தேன். அவன் மீண்டும் வந்தவுடன் பல்லவன் அம்மா சொல்லாமல் கொள்ளாமல் குழந்தையை என்னிடம் விட்டு கிளம்பி போய் விட்டாள். இப்போது அந்த ஆளுடன் தான் அவள் சுத்தி கொண்டு இருந்தார். எனக்கும் அந்த பெண்ணும் கல்யாணம் ஆகல. அவனுக்கு பல்லவன் பெயர் வைத்ததே நான் தான். அவன் எல்லோரிடமும் சந்தோஷமாக அண்ணன் தம்பியாக பழகிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இந்த உண்மை தெரிந்தால் உடைந்து போய் விடுவான். தயவுசெய்து வெளியில் யாரிடமும் இந்த உண்மையை சொல்லாதே என்றார். இதைக் கேட்டு நிலா ரொம்பவே எமோஷனலானார். இதையெல்லாம் யாருக்கும் தெரியாமல் சேரன் கேட்டு விட்டார்.

அய்யனார் துணை:

இன்றைய எபிசோட்டில் நிலா, நீங்கள் எப்போது வந்தீர்கள்? எல்லா விஷயமும் உங்களுக்கு தெரிந்து விட்டதா? என்று கேட்கிறார். சேரன் எமோஷனலாக கண்கலங்கி எல்லாம் எனக்கு இப்போதான் புரிகிறது. பல்லவன் அம்மாவை அப்பா திருமணம் செய்யவில்லை என்பது தெரியும். ஆனால், அந்த சமயத்தில் என்னால் பேச முடியவில்லை. அப்படியே பிரச்சினைகள் பெரிதாகி அப்பா ஜெயிலுக்குப் போய்விட்டார். நான் தான் தம்பிகளை பார்த்துக் கொள்ள வேண்டும். பல்லவனையும் அப்படியே நாங்கள் பார்த்து வளர்த்தோம்.

சீரியல் ட்ராக்:

நாட்கள் செல்ல செல்ல எல்லாமே மறந்து விட்டது. பல்லவன் எங்களுடைய தம்பி தான். இந்த உண்மையை சோழன், பாண்டியன், பல்லவனுக்கு கூட தெரியக்கூடாது என்று சொல்கிறார். இதைக் கேட்டு நிலா, நீங்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்கள் என்று ரொம்ப எமோஷனலாக அழுகிறார். பின் இருவரும் கோவிலில் இருந்து கிளம்புகிறார்கள். வீட்டில் சோழன், நிலா- அண்ணன் எங்கே என்றெல்லாம் விசாரிக்கிறார். அந்த நேரம் பார்த்து நிலா- சேரன் வருகிறார்கள். சோழன், பாண்டியன், பல்லவன் மூவருமே மாற்றி மாற்றி சேரன், நிலாவிடம் கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் இருவருமே ஏதேதோ சொல்லி சமாளித்து விடுகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=GPshhaTWQzo

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நடேசன் சந்தோசமாக வெளியில் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து கடுப்பான பல்லவன், ரொம்ப அவமரியாதையாக நடேசனை திட்டிவிட்டு வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். கோபத்தில் நிலா, பல்லவனை அடித்துவிட்டு உனக்கு பிடிக்கவில்லை என்றால் நீ வெளியில் போ என்று சொல்கிறார். இதனால் கோபித்துக் கொண்டு பல்லவன் வெளியே போகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full